Wednesday

காங்கிரஸின் தோல்வி முடிவு தெரிந்து விட்டது கலக்கத்தில் சோனியா

15-வது மக்களவைக்கு முதல் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை நான்காவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது . கடைசியாக மே 13- ம் தேதி  ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறவிருக்கிறது .

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் நினைத்த வெற்றி கிடைக்காது என ஏஜன்சி செய்திகள் சோனியாவிடம் தெரிவித்ததையடுத்து சோனியா கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது . சோனியா மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் கலக்கத்தில் உள்ளனர் . அந்த நிலையில் தான் ராகுல் காந்தி போகிற இடமெல்லாம் ஆள் பிடிக்கும் வேலையில்   இறங்கியுள்ளார் .

நான்காம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மாநில கட்சிகளே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது . தமிழக தேர்தல் நிலவரத்தை ஆராய்ந்த சோனியா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்ட காரணாத்தால் தான் திடீரென பிரச்சார கூட்டத்தையே ரத்து செய்தார் . தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் .

கடந்த முறை பாரதிய ஜனதா கட்சி இந்தியா ஒளிர்கிறது என பிராச்சாரத்தை முடுக்கி விட்டும் பயனற்று போனதை போல் காங்கிரஸ் கட்சியின் பிரசாரமும் பயனற்று போய் மக்கள் பிரச்சனைகளே முன்னிலை பெற்று நிற்கிறது . சி பி ஐ சுதந்திரமாக செயல் படும் அமைப்பு அந்த அமைப்பையே காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதை  ஒரு அரசியல் சார்ந்த அமைப்பாக மாற்றியது , விலைவாசி உயர்வுகள் , சுதந்திரமாக செயல் படும் பிரதமர் இல்லாதது , தமிழின படுகொலையை நடத்தும் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பது . போன்ற  பல செயல்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே அமைந்து விட்டது .

காங்கிரஸ் கட்சி இந்த முறை கடந்த முறை பெற்ற 145 தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேறுவது கூட கடினம் என தெரிகிறது . கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முக்கியமான பகுதி . கடந்த முறை நாற்பது தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி பெற்றது ஆனால் இந்த முறை ஒரு தொகுதி கூட தேறுவது கடினம் என தெரிகிறது . ஈழ தமிழர் எழுச்சி என்றுமில்லாதவாறு இந்த தேர்தலில் எழும்பியிருக்கிறது . காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர் .

மொத்தத்தில் தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடி மாநில காட்சிகளால். அதே போல் வடமாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் பல தொகுதிகளை இந்த முறை பாரதிய ஜனதா மற்றும் மூன்றாவது அணிகள் கைப்பற்றும் என தெரிகிறது . ஆட்சி மாற்றத்தின் அறிகுறிகள் தென்பட்டு விட்டது . அப்படியென்றால் சோனியாவின் இத்தாலி காங்கிரஸ் தோற்க போவது உறுதி படுத்தப்பட்டுள்ளது  அது தானே சொல்றீங்க .இதில நம்ம திருமா கூட மாட்டிகிட்டாரே .........................!

6 கருத்துக்கள்:

SUBBU said...

//.இதில நம்ம திருமா கூட மாட்டிகிட்டாரே .........................!
//

அந்த ஆள் எங்க போனா என்ன, காங்கிரஸ் தொத்தா சரி !!

SUBBU said...

//"காங்கிரஸின் தோல்வி முடிவு தெரிந்து விட்டது கலக்கத்தில் சோனியா"//

:)))))))))))))))))))))

Suresh Kumar said...

அந்த ஆள் எங்க போனா என்ன, காங்கிரஸ் தொத்தா சரி !! ///////////


காங்கிரஸ் கூடவே சேர்ந்து திருமாவளவன் கூட தோற்க போகிறார் அத தான் சொன்னேன் தல . நீங்க தப்பா நினச்சிடாதீங்க

விக்டர் said...

தமிழரை மதிக்காத வினையை விரைவில் அனுபவிப்பார்கள்

Anonymous said...

காமராஜருடன் காங்கிரசு காலி.
இப்போது தமிழ்நாட்டில் காங்கிரசுக்குக் கருமாதி.
இந்தியாவின் அடுத்த தேர்தல் ஆறு மாதங்களில் நடை பெறும்.
அப்போது கலைஞர் காங்கிரசில் இல்லாமல் மற்ற தமிழினத்துடன் சேர்ந்து வெல்வார்.
செருப்படி வாங்கிய தமிழர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

Anonymous said...

கண்டுபிடிச்சிட்டான் காத்தவராயன். பொரச்சி தலைவி வைகோவுக்கு வைக்கப் போற ஆப்புல பின்னாடி வெந்து போகப் போகுது. அதுக்கு லக்கி லுக் கிட்ட சொல்லி கொஞ்சம் சுண்ணாம்பு ஸ்டாக் வைக்க சொல்லு. செத்துத் தொலைய போறான்.

Post a Comment

Send your Status to your Facebook