Friday

உயிரினும் மேலான உடன் பிறப்பே

பதிவுலகத்தில் கருணாநிதியால் ஏமாற்றப்பட்ட தமிழுனர்வுள்ள உடன்பிறப்புகள் தங்களுக்கு தமிழின உணர்வு இருக்கிறது என்பதை காட்ட நடுநிலையாளர்கள் போல் தமிழின படுகொலையில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் பங்கு உண்டு திமுகவிற்கு பங்கில்லை என்பது போல் எழுதி வருகின்றனர் .

இத்தனை நாளும் உடன்பிறப்பாய் இருந்து விட்டோம் ஈழ தமிழர்களுக்காக மட்டும் எப்படி அதிமுகவை ஆதரிப்பது என்பது போல எழுதியும் பேசியும் வருகின்றனர் . அப்படி அவர்கள் எழுதுவதால் இன அழிப்பை ஊக்குவிக்கிறோம் என்பது ஏனோ அவர்களுக்கு தெரியவில்லை . (தெரியவில்லை என்பதை விட தெரியாததை போல் நடிக்கிறார்கள் )

ஜெயலலிதா பல ஆண்டுகளாக விடுதலை புலிகளுக்கு எதிராகவே இருந்தார் உண்மை தான் . ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் இந்த அளவிற்கு ஒரு இனபடுகொலையை இந்தியாவும் சரி காங்கிரஸ் கட்சியும் நடத்தவில்லை . ஆனால் இப்போது நடப்பது என்ன ? தமிழின அழிப்பில் காங்கிரஸ் கட்சி படு வேகமாக செயல் படுகிறது . திமுகவின் சம்மதம் பெறாமல் இந்த அளவிற்கு துணிந்து காங்கிரஸ் கட்சி செயல் படாது .

நீங்கள் சொல்வதை போல் திமுகவின் சம்மதம் பெறாமல்  தான் காங்கிரஸ் கட்சி இன அழிப்பில் ஈடுபடுகிறது என்றால் அதை தடுக்க கருணாநிதி எடுத்துக்கொண்ட முயற்சி என்ன ?  கலைஞருக்கு தெரியும் ஈழ தமிழர்களுக்காக பதவி போனால் மக்கள் மீண்டும் பதவியை தருவார்கள் என்பது  . அப்படி இருந்தும் ஏன் செய்யவில்லை செய்ய  மனமில்லை   . விடுதலை புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் உண்டு திமுகவிற்கு (கருணாநிதி மற்றும் கண்மூடித்தனமாக கருணாநிதியை இப்போதும் பின்பற்றுபவர்கள் ) இல்லை என்று நினைப்பீர்களானால் அவர்களை போல் முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது .

கருணாநிதி மற்றும் சோனியாவின் திட்டமிடலில் தான் இந்த இன அழிப்பே நடக்கிறது . கருணாநிதியின் எண்ணம் நாம் மீண்டும் கவிதை கடிதம் எழுதி மக்களை ஏமாற்றி விடலாம் என்பது தான் . ஜெயலலிதா இன்று தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறார் என்பதற்காக மட்டும் ஜெயலலிதாவை தமிழுணர்வாளர்கள் ஆதரிக்கவில்லை . இந்த முடிவை ஜெயலலிதா எடுக்கும் முன்னரே திமுக , காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அதிமுகவை ஆதரிக்க தமிழுணர்வாளர்கள் முடிவெடுத்து விட்டனர் . ஜெயலலிதா தமிழ் ஈழம் தான் தீர்வு எம்று சொன்னது தமிழுணர்வாளர்களுக்கு ஒரு ஆறுதலும் மக்கள் எழுச்சிக்கு கிடைத்த வெற்றியும் தான் .

இன்றைய திமுக அண்ணா துவங்கிய திமுக அல்ல . அந்த நிலை மாறி பல ஆண்டுகள் கடந்து போயிற்று . திமுக துவங்கிய நோக்கம் சிதைந்து போய் பல நாட்களாயிற்று . அது ஒரு உணர்வற்ற கட்சியாக தான் இப்போது இருக்கிறது . அண்ணா துவங்கிய திமுகவையும் கொள்கைகளையும் இப்போதும் கட்டி காத்து வருவது வைகோவும் மதிமுகவும் தான் . இத்தனை நாளும் தமிழை சொல்லி ஏமாற்றி வந்தார் கருணாநிதி . ஆனால் அடுத்த கட்டத்தில் தமிழ் என்ற வார்த்தை சொன்னாலே என்ன விலை என்று கேட்கும் தலைவர்கள் தான் இருக்கிறார்கள் (மகனாக இருந்தால் கூட ) கருணாநிதியின் திமுகவில் .

இன்றைய ஈழ மக்களின் இத்தனை அவலங்களுக்கு காரணம் திமுகவே . இந்த தேர்தல் தமிழர்களுக்கு எதிராக நாளை எந்த ஒரு அரசியல் கட்சியும் முடிவெடுக்காமல் இருக்க நாம் திமுக கூட்டணியை ஒட்டு மொத்தமாக தோற்கடித்தாக வேண்டும் . சிலர் இப்போதும் கேட்கிறார்கள் திமுக தோற்றால் வெற்றி  பெறுவது அதிமுக அல்லவா . ஆம் திமுக காங்கிரஸ் கூட்டணி தோற்க வேண்டுமென்றால் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் . இது காலத்தின் கட்டாயம் .

தேர்தல் தேதி நெருங்கும் வேளையிலும் வைகோ , ராமதாஸ் ஆகியோர் மாற்று கூட்டணி காணாமல் விட்டது தவறு என்று பேசும் உடன்பிறப்புகளும் இருக்கிறார்கள் . அவர்களுக்கு ஓன்று மட்டும் சொல்லி கொள்கிறேன் . அப்படி ஒரு கூட்டணி வந்திருந்தால் கூட அது தமிழர் விரோத கூட்டணிக்கு தான் சாதகமாக போயிருக்கும் . அப்படி ஒரு நிலை ஏற்படவில்லையே என்ற ஆதங்கமும் நடுநிலையான உடன்பிறப்புகளிடம் காணப்படுகிறது .

குழப்பமின்றி வாக்களிப்போம் திமுக காங்கிரஸ் கூட்டணியை வேரறுப்போம் . தமிழினத்தின் வலிமையை காட்டுவோம் .

1 கருத்துக்கள்:

நான் said...

நன்றி நண்பரே
ஆனால் ஒன்று இங்கே எல்லா அரசியல்வாதிகளும்(ஒரு சிலரை தவிர) ஒரே விடயத்திற்காக தான் பேசுகிறார்கள். அது வெறும் தேர்தல் தான். அது முடிந்த பின் யாராவது பேசட்டும் பார்க்கலாம். ஒருவனுக்கும் இங்கே ஈழதமிழன் மேலும் தமிழ்ஈழம் மேலும் அதிக பாசமாக தெரியவில்லை ஆகவே அதிகமாக மக்களை குழப்பாதீர்கள் அது போதும்.

Post a Comment

Send your Status to your Facebook