Sunday

ரத்த தானம் செய்வோம் வாழ்க்கையை வசந்தமாக்குவோம்

இன்று June 14 உலகம் முழுவதும் ரத்த தான தினமாக உலக சுகாதார அமைப்பின் மூலம் கடைபிடிக்க படுகிறது . ரத்த பிரிவுகளான A, B,O கண்டுபிடித்த கார்ல் லண்டிச்டைனர் அவர்களின் பிறந்த நாளான அன்று ரத்த தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது . 


ரத்த தானம் என்பது நம்மால் இன்னொருவருக்கு ரத்தம் கொடுப்பதாகும் விபத்தில் அடிபட்டவர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கும் ரத்தம் வெளியேறும் போது அவர்கள் உயிர்வாழ ரத்தம் தேவை படும் . ரத்த தானம் செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக  இந்த நாள் கடை பிடிக்கப்படுகிறது . நாம் ஆபத்தில் இருப்பவர்களுக்கு  ரத்தம்  கொடுக்கும் போது நம்மால் ஒரு உயிர் வாழ்கிறது .

பெற்றோர்கள் மத்தியில் பிள்ளைகள் ரத்தம் கொடுக்கும் போது ரத்தம் கொடுப்பவர்களின் உடல் நிலை பலவீனம் அடையும் என்ற ஒரு தவறான எண்ணங்கள் காணப்படும் . ஆனால் ஒரு மனிதனின் உடலில் ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம் வரை காணப்படும்  அதில் முன்னூறு முதல் முன்னூற்று ஐம்பத்து மில்லி லிட்டர் ரத்தம் கொடுப்பதால் உடல் நிலை பலவீனம் அடையாது . மனித உடலில் ரத்தம் சுரந்து கொண்டே இருக்கும் . ஒரு முறை ரத்தம் கொடுத்தால் அந்த ரத்த குறுகிய காலத்தில் நமது உடல் சமன் செய்து விடும் .

மருத்துவர்கள் ஆலோசனை படி ஒரு திடகாத்திரமான மனிதன் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் கொடுக்கலாம் . ரத்தம் கொடுக்கும் போது நம்முடைய ரத்தம் பரிசோதனை செய்யப்படும் . இப்படி பரிசோதனை செய்வதால் நமக்கு ரத்தத்தில் நோய்கள் இருந்தால் கூட கண்டு பிடித்து சரி செய்து விடலாம் .  ரத்த தானம் செய்வதால் ரத்தம் கொடுத்த நமக்கு மனதளவில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும் . ரத்தம் பெற்று கொண்டு ஆபத்து நிலையிலிருந்து மீண்ட அவர்களின் சந்தோஷமும் நம் வாழ்க்கையில் மிக பெரிய அனுக்கிரகமாகவும் இருக்கும் .

பல தொண்டு நிறுவனங்கள் ரத்த தானம் கொடுப்பவர்களை ஊக்குவிப்பதோடு ரத்தம் தேவை படுவோருக்கும் ரத்தம் ஏற்பாடு செய்யும் மிக பெரிய மனிதாபி மான பணியை செய்கின்றன . நாம் ஒவ்வெருவரும் வாழ்வில் ஒரு முறையாவது ரத்த தானம் செய்வோம் அனைவரின் வாழ்வையும் வசந்தமாக்குவோம் . இந்த ரத்த தான தினத்தில் நாம் ரத்த தானம் செய்வதை உறுதியெடுத்து கொள்வோம் .

9 கருத்துக்கள்:

லொல்லு சபா said...

தானத்தில் சிறந்தது ரத்த தானம்!

கலையரசன் said...

பதிவு நன்று, அதுபோல் தொண்டு நிறுவனங்களின் முகவரியும், தொலைபேசி எண்களையும், கொடுத்திருந்தால்.. ரத்ததானம் செய்வதற்க்கு வசதியாக இருக்கும்!

Anonymous said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்

என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

ஆ.ஞானசேகரன் said...

நல்ல இடுக்கை பாராட்டுகள்

Anonymous said...

மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in

Surya said...

மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in

ANBU said...

ரத்த தானம் செய்வோம் வாழ்க்கையை வசந்தமாக்குவோம் ரத்த தானம் பெறுவதற்க்கு அணுகவும் 8124844006

ANBU said...

ரத்த தானம் பெறுவதற்க்கு அணுகவும் 812484006

ANBU said...

ரத்த தானம் பெறுவதற்க்கு அணுகவும் 8124844006

Post a Comment

Send your Status to your Facebook