Tuesday

தமிழருக்கு உணவு,உடை தவிர வேறெதுவும் தேவையில்லை

தமிழர்களுக்கு உணவு, உடையை தவிர வேறெதுவும் தேவையில்லை என்று சிங்கள இனவெறி அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது . சிங்கள இனவெறிக்கு துணை போன துரோகிகள் இதற்கு என்ன சொல்வார்களோ . விடுதலை புலிகளை எதிர்த்த தமிழர்களே இதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள் .

செய்தி 

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசுமுழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித் துள்ளார்.

அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதையும் கடுமையாக எதிர்த்துள்ள அவர், இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசு இதனை செய்தால் அரசிலிருந்து நாங்கள் வெளியேற வேண்டிவரும்.

13 ஆவது திருத்தச் சட்டம் நாட்டிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.  அது முழுமையாக அமுல்படுத்தப்படாமல் உள்ளதால் தான் நாடு இதுவரை மோசமான பாதிப்புகளிலிருந்து தப்பியுள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதையும் எதிர்க்கிறோம்.

தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சமூக கௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை.

இலங்கை போன்ற சிறிய நாடு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் தேவையற்ற பொருளாதாரச் செலவுகளையே எதிர்கொள்ள வேண்டிவரும் என்றார்.

1 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் சொல்ல தெரியல

Post a Comment

Send your Status to your Facebook