Thursday

இளங்கோவனை பார்த்து பயந்தார்களா ? கருணாநிதி கும்பல்


இந்தியாவிலே ஊழலில் முதலிடத்தில் இருப்பது கருணாநிதி தலைமையிலான திமுக தான் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை . முல்லை பெரியாறு ஆணை விவகாரத்தில் கேரளாவிற்கு ஆய்வு பணிக்கு அனுமதி கொடுக்கும் வரை கண்டு கொள்ளாமல் ( தெரியாமலிருந்திருக்குமோ ) இருந்து விட்டு எதிர் கட்சிகள் போராட்டம் நடத்திய பின்னர் வேண்டா வெறுப்பாக உச்ச நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற மனு தாக்கல் செய்து வழக்கை வாதாட தெரியாமல் தமிழகத்திற்கு பாதகமான இடைக்கால தீர்ப்பை வாங்கிய பெருமை கருணாநிதிக்கே சாரும் .

மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க ஆடிய நாடகம் தான் மதுரையில் நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை எதிர்த்து கண்டன கூட்டம் என அவசர கோலத்தில் பின் விளைவுகளை பற்றி அறியாமல் அறிவித்தார் . முசோலினி வம்சா வழியில் வந்த சோனியா விடுவாரா கடந்த முறை கூட்டு சேர்ந்து கொள்ளையடித்த ஸ்பெக்த்ராம் ஊழலை தோண்ட முடிவெடுத்து தடா புடலாக cpi ராஜாவின் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தியது . 22000 கோடி ருபாய் அளவிற்கு ராஜா அமைச்சரவையின் கீழ் ஊழல் நடந்திருப்பதாக வழக்கு பதிவு செய்ய பட்டது .

இதை பார்த்த திமுக கொள்ளை கும்பல் பயந்து போனது வண்டவாளம் எல்லாம் வெளியில் வரும் என நினைத்து . இதனிடையே போதுக்கூட்ட்டத்தில் பேசிய தமிழ் விரோதி இளங்கோவன் திமுகவின் ஊழலை எதிர்த்து காங்கிரஸ் காரர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என பேசினார் . இதை எதிர் பார்க்காத திமுக கூட்டம் அவசர அவசரமாக கண்டன கூட்டம் நடை பெறாது என்றது .

இப்படி தான் நாடகமாடி சோனியாவுக்கு பல்லாக்கு தூக்கி 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் ஈழத்திலே சாவதற்கு காரணமாகி போனார் கருணாநிதி . ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திலே காங்கிரஸ் கட்சிக்காக அந்த திட்டத்தையே கானல் நீராக்கி மூன்று மாவட்ட மக்களின் குடிநீரில் உலை வைத்தார் . இப்போது 22000 கோடி பணத்திற்காக ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக செயல் படுகிறார் .

தமிழகத்தின் இயற்கை துறைமுகமான குளச்சலில் துறைமுகம் ஏற்படுத்த மக்கள் விடுத்த கோரிக்கை கூட காற்றில் பறந்து கேரளா மாநிலத்திற்கு சென்று விட்டதாக தெரிகிறது .

இப்படியே நாள் முழுக்க சிந்த்தித்து தன் குடும்பத்திற்கு மட்டுமே உழைத்து கொண்டு ஒட்டு மொத்த தமிழினத்தின் எதிர் காலத்தை கேள்வி குறியாக்கிய கருணாநிதிக்கு தமிழர்கள் என்ன கைம்மாறு செய்ய போகிறார்களோ . முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளா முதல்வர் அச்சுதானந்தன் பாராட்ட வேண்டிய அளவிற்கு கருணாநிதி நடக்கிறார் என்பது கேரளா மாநில மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம் .

இதே நிலை நீடித்தால் ஒட்டு மொத்த தமிழனின் நிலை .....................

10 கருத்துக்கள்:

S.A. நவாஸுதீன் said...

இதே நிலை நீடித்தால் ஒட்டு மொத்த தமிழனின் நிலை .....................

இப்ப ஒன்னும் பெருசா நல்ல நிலையில் தமிழன் இருப்பதாக தெரியவில்லை இன்னும் மோசமாவதற்கு.

நல்ல இடுகை சுரேஷ்.

Suresh Kumar said...

S.A. நவாஸுதீன் said...

இதே நிலை நீடித்தால் ஒட்டு மொத்த தமிழனின் நிலை .....................

இப்ப ஒன்னும் பெருசா நல்ல நிலையில் தமிழன் இருப்பதாக தெரியவில்லை இன்னும் மோசமாவதற்கு.

நல்ல இடுகை சுரேஷ். /////////

சரி தான் நண்பா . ஆனால் இந்த நிலை நீடித்தால் நாம் உரிமைகளை அரசியல் வாதிகளிடம் அடகு வைத்து விட்டு பாலைவனமான தமிழகத்தில் தான் வாழ வேண்டும்

வால்பையன் said...

கழக சொம்பு தூக்கிகளுக்கு இன்னமும் அறிவு வரலையே!

தமிழ்மகன் said...

// இப்ப ஒன்னும் பெருசா நல்ல நிலையில் தமிழன் இருப்பதாக தெரியவில்லை இன்னும் மோசமாவதற்கு //

இதுதான் உண்மை

ramalingam said...
This comment has been removed by the author.
Anonymous said...

வரப் போவது அச்சுதானந்தனுக்கு
பாராட்டு விழாதான். இது தெரியாதா உங்களுக்கு?

Suresh Kumar said...

வால்பையன் said...

கழக சொம்பு தூக்கிகளுக்கு இன்னமும் அறிவு வரலையே! ///////////////////

அறிவு வருமா இல்லையான்னு தெரியல்லிய

Suresh Kumar said...

தமிழ்மகன் said...

// இப்ப ஒன்னும் பெருசா நல்ல நிலையில் தமிழன் இருப்பதாக தெரியவில்லை இன்னும் மோசமாவதற்கு //

இதுதான் உண்மை /////////////////////

நன்றி நண்பா உங்கள் வருகைக்கு

Muniappan Pakkangal said...

Nalla pathivu Suresh Kumar.But there is no alternative to Perusu.

Anonymous said...

கருப்பு கண்ணாடி போட்டு கிட்டு இருக்கும் நபர் கலக்குகிறார்.

அவர திருட்டு ரயிலேறி சென்னை போக சொல்லுங்க , கோடி கோடியா சொத்து சேர்க்கலாம்.

Post a Comment

Send your Status to your Facebook