Wednesday

பதவி, பணம் தவிர மாற்ற அனைத்து நலன்களுக்கும் கேரளாவிற்கு தான் முன்னுரிமையா ?


இந்தியாவை ஆளுகிற மாநிலம் எது என்ற எண்ணம் ஏற்படுகிறது என கருணாநிதி கோபமாக ஓர் அறிக்கையை விட்டிருக்கிறார் . முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு கேரளா மாநிலத்திற்கு சாதகமாக நடப்பதாக சொல்லி இப்படி ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார் .

எதிர் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் முன்னரே எச்சரித்தும் அலட்சியமாக இருந்து விட்டு நிலைமை கிளைமாக்ஸ் கட்டத்திற்கு செல்லும் போது தூக்கத்தை கலைத்திருக்கிறார் . தமிழக அரசோ மத்திய அரசில் பதவி வாங்குவதிலும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதிலும் குறியாக இருக்கும் போது கேரள அரசோ மத்திய அரசின் மூலமாக கேரளா மாநிலத்திற்கு என்ன வேண்டுமோ அதை சாதிக்கிறார்கள் . கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிற்கு சாதகமாக இருந்த நிலை மாறி இப்போது கேரளா மாநில அரசுக்கு சாதகமாக மாறிய நிலை ஏற்படுகிறது .

கேரள அரசு புதிய அணை கட்டியே தீருவோம் என உறுதியாக இருக்கிறது சர்வே பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டதாக தெரிகிறது . இத்தனை காலமும் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது . முதலமைச்சருக்கு தான் வயதாகி விட்டது என்றாலும் அதிகார்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் , துணை முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? இப்படி பல கேள்விகள் எழுகின்றன .

பிரச்சனை நடக்கும் இடத்தில் காவல் துறை எல்லாம் முடிந்த பின்னர் வருவது போல் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது . கேரள மாநில அரசை நடத்தும் கட்சியோ மத்திய அரசில் எந்த பதவியும் வகிக்க வில்லை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவும் அழைக்க வில்லை ஆனால் அவர்கள் தேவை பூர்த்தியாகிறது . ஆனால் தமிழக திமுகவோ மத்திய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது . மத்திய அரசில் பங்கு வகிக்கிறது . ஆனால் நம் உரிமைகள் பறிபோகிறது .

கேரள மாநில அதிகாரிகள் மத்திய அரசை ஆட்டிவிக்கின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே ஆனால் அது நமது கையாலாகாத தனம் தானே தவிர வேறொன்றுமில்லை . கேரள அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி தான் ஈழத்திலே இரண்டு லட்சம் மக்கள் சாவதற்கு இந்தியாவும் தமிழகமும் காரணமானது . அந்த நேரத்தில் சோனியாவும் , பதவியும் முக்கியம் என்று மௌநியாவே இருந்தோம் . அப்படி தமிழனுக்கு சூடு சொரணை இல்லை என்பதை தெரிந்து தானே மத்திய அரசு தமிழனுக்கு எதிராக மீண்டும் ஒரு துரோகம் செய்திருக்கிறது . பதவி வாங்க சட்டையை பிடித்த நாம் ஏன் உரிமைக்காக சட்டையை பிடிக்க முடியவில்லை இதை சிந்தியுங்கள் , மற்றும் நமது கையாலாகாத தனத்தையும் சிந்தியுங்கள் தமிழின உரிமை பறிபோகாது .


6 கருத்துக்கள்:

Suresh Kumar said...

சற்று முன் ........ உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது

வால்பையன் said...

அறிக்கை விடவது இவருக்கு ஒன்றும் புதிதில்லையே!

ஒகேனக்கல் கதை நாம் பார்த்தது தானே!

Suresh Kumar said...

வால்பையன் said...
அறிக்கை விடவது இவருக்கு ஒன்றும் புதிதில்லையே!

ஒகேனக்கல் கதை நாம் பார்த்தது தானே!

October 21, 2009 12:52 PM
///////////

சரி தான் இப்ப அறிக்கைய விட்ட்டுட்டு தேர்தல் முடியட்டும் என்பார்

S.A. நவாஸுதீன் said...

சூடான பதிவு சுரேஷ். தேவையற்ற நேரத்தில் அறிக்கை விடுவதும், தேவையான நேரத்தில் மௌனிப்பதும் இங்கு வழக்கம்தானே.

பித்தன் said...

தன் குடும்ப நலம் மட்டுமே பேணும்....திமுக'க்கு இது ஒன்னும் புதிதில்லையே தம்பீ நீ விழித்துக்கொள்......

ஆ.ஞானசேகரன் said...

//பதவி வாங்க சட்டையை பிடித்த நாம் ஏன் உரிமைக்காக சட்டையை பிடிக்க முடியவில்லை இதை சிந்தியுங்கள் , மற்றும் நமது கையாலாகாத தனத்தையும் சிந்தியுங்கள் தமிழின உரிமை பறிபோகாது .//

என்ன பண்னுறது நண்பா. இதையெல்லாம் பார்த்து பழகியெவிட்டது நமக்கு...

Post a Comment

Send your Status to your Facebook