Sunday

தமிழச்சிக்கு சீமான் மேல என்ன கடுப்போ ?

இணையதளத்தில் பெரியாரின் கருத்துக்களை பரப்புரை செய்வதில் முன்னணியில் இருப்பவர் தான் தமிழச்சி. முகநூலில் பெரியாரின் கருத்துக்களை பார்க்க வேண்டும் என்றால் தமிழச்சியின் பக்கம் சென்றால் போதும் . தமிழச்சியின் பக்கத்திலிருந்து பெரியாரின் சில கருத்துக்களை நானும் தெரிந்து கொண்டவன் என்ற முறையில் தமிழச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .  பெரியாரின்  கருத்துக்களை மேலும் மேலும் பரப்பி இளைய சமுதாயமும் இனி வரும் தலைமுறைக்கும் பயன் படும்   வகையில் நீங்கள் மேலும் மேலும் சமூக சேவைகள் செய்ய வேண்டும் என் மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன். 

சில நாட்களாக தமிழச்சியை  கவனித்து வருகிறேன் அவரின் கருத்துக்கள் அருவெறுக்க தக்கதாக இருக்கிறது . ஒரு பெண் இந்த ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் துணிச்சலாக தன் கருத்துக்களை எடுத்து வைக்கிறார் என்று சில நேரங்களில் தமிழச்சியை  நினைத்து பெருமை பட்டிருக்கிறேன் . ஆனால் பெரியாரில் கருத்துக்கள் மட்டும் இல்லைஎன்றால் நீங்கள் சீரோ என்பது மட்டும் தெரிகிறது.  ஏன் தமிழச்சிக்கு சீமானின் மீது இவ்வளவு கடுப்பு என்பது தான் எனக்கு புரியவில்லை . சினிமா காரர் தான் சீமான் ஆனால் அந்த சினிமாகாரர்களில் துணிந்து தன் கருத்தை சொல்லி சிறைக்கு சென்றவர்கள் வேறு யாரும் இல்லை . சீமானிடம் தமிழ் தேசியம் என்ற கொள்கை இருக்கிறது அதே நேரம் தமிழச்சியிடம் என்ன கொள்கை இருக்கிறது .  

சீமான் இருந்தால் தப்பு நின்னால் தப்பு அப்படியே சொல்லி சொல்லி அத கேக்குற எங்களுக்கும் ஒரு சலிப்பு வருது . சும்மா இருக்க சங்க ஊதி பெருசாக்குவது போல சீமானை பெரிய தலைவராக வேண்டும் என ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா ? இல்லை சீமானை திட்டியே நிறைய எதிர் கமெண்ட் வாங்கி நீங்க பிரபலம் ஆகணும்னு நினைக்கிறீங்களா? எதுவுமே புரியல இல்லை உங்களுக்கும் சீமானுக்கும் ஏதாவது தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறதா? 

இதெல்லாம் ஏன் கேக்குறேனா? நீங்கள் ஒரு ஈழத்து பெண் வெளிநாட்டில் இப்போது இருக்கிறீர்கள் சீமான் முதல் மற்ற தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஈழ தமிழர்களுக்காக தான் பேசுகிறார்கள் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் ஈழ தமிழர்கள் நலனோடு சேர்ந்த முடிவாக தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் விமர்சிக்கிறீர்கள்.  இலங்கையிலும் அரசியல் நடக்கிறது இதுவரை இலங்கை அரசியலை விமர்சிப்பதை விட அதிகமாக தமிழக அரசியலை விமர்சிக்கிறீர்கள் . அதில் ஒன்றும் தப்பு இல்லை யார் யாரோ விமர்சிக்க வேண்டிய அளவிற்கு தமிழக அரசியல் மாறி விட்டது அது வேறு கதை . தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அல்லாத பல தலைவர்கள் இருக்கிராக்றல் அவர்களுக்கு எதிராக உங்கள் கருத்துக்கள் பலமாக வந்ததை பார்த்ததில்லை. 

பிரபலமாக இருக்கும் ஒரு நபாரால் ஒரு சமூகத்திக்கு வேண்டிய பரப்புரையை செய்தால் அந்த சமூகத்திற்கு அது பயனாக இருக்கும் அப்படி இந்த தமிழ் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் இலங்கையின் இனபடுகொலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லலாம் . ஈழ விடுதலை பற்றியும் அதற்கான தேவை பற்றியும் உங்கள் விஸ்ரிகளிடம் எடுத்து சொல்லி அதற்கான ஆதரவை பெறலாம் . இப்படி எவ்வளவோ செய்யலாம் ஆனால் ஒன்றும் செய்ய வில்லை . எனக்கு தெரிந்து தமிழச்சி நீங்கள் ஏதோ உங்களுக்கு பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக பெரியாரின் கருத்துக்களையும் காலத்தை கடத்த வேண்டும் என்பதற்காக சில விமர்சனங்களை வைக்கிறீர்கள் என நினைக்கிறேன் . ஏனெனில் உங்களிடம் இதுவரை தெளிவான நிகழ் காலத்திற்கு ஏற்ற கொள்கைகள் எதுவும் இல்லை . 

சரி விடுங்க கேக்க மறந்துட்டேன் உங்களுக்கு சீமான் மேல என்ன கடுப்பு ? சும்மா சொல்லுங்க அப்புறம் ஈழ விடுதலையை பற்றி உங்ககிட்ட ஏதாவது கருத்துக்கள் இருந்தாலும் சொல்லுங்க .       
 

33 கருத்துக்கள்:

Unknown said...

சீமானின் வளர்ச்சியை பொறுக்க முடியவில்லை போலும் ...... தமிழனுக்காக குரல் கொடுத்த ஒரே உண்மை தமிழன் சீமான் மட்டுமே என்றால் அது மிகையாகது

Anonymous said...

தமிழச்சி ஈழத்து பெண் அல்ல, தமிழ்நாட்டை சேர்ந்தவர் தற்சமயம் பிரான்சில் வசிக்கிறார்

Suresh Kumar said...

இருக்கலாம் ஆனால் ஏன் தமிழச்சிக்கு இவ்வளவு கடுப்புன்னு தான் தெரியல. சீமான் மட்டுமல்லாது வேறு தமிழர்களும் போராடுகிறார்கள் ஆனால் உண்மையான போராட்ட காரர்களை கொச்சை படுத்துவது தான் கடினமாக இருக்கிறது

வால்பையன் said...

சீமான் மேல் உங்களுக்கு என்ன பாசம்!?

சீமான் மாதிரி சந்தர்ப்பவாதிகளுக்கு இப்படி சொம்பு தூக்கினால் என்னாகும்!

Suresh Kumar said...

Anonymous said...

தமிழச்சி ஈழத்து பெண் அல்ல, தமிழ்நாட்டை சேர்ந்தவர் தற்சமயம் பிரான்சில் வசிக்கிறார்
//////////////

அப்படியா அனானி உங்கள் தகவலுக்கு நன்றி

Anonymous said...
This comment has been removed by the author.
Suresh Kumar said...

வால்பையன் said...

சீமான் மேல் உங்களுக்கு என்ன பாசம்!?

சீமான் மாதிரி சந்தர்ப்பவாதிகளுக்கு இப்படி சொம்பு தூக்கினால் என்னாகும்!
//////////////////////////////

சீமான் மீது உள்ள பாசம் அல்ல இது சீமானை எதிர்க்கும் தமிழச்சியிடம் சரியான கொள்கை முடிவு இல்லை . எதற்கெடுத்தாலும் எதிர்ப்பது என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட தாக்குதல் போல் தான் இருக்கிறது . அதற்காக நான் ஒன்றும் சீமானின் ஆதரவாளன் அல்ல மீண்டும் மீண்டும் சீமானை எதிர்க்கும் வாசகங்கள் ஒரு வித சலிப்பை உண்டு பண்ணுகிறது . சில நேரங்களில் சில காரணங்களால் சில முடிவுகள் எடுக்கும் போது சிலர்க்கு சந்தர்ப்பவாதம் போல் தோன்றுவதில் ஒன்றும் தவறில்லை

வால்பையன் said...

// சில நேரங்களில் சில காரணங்களால் சில முடிவுகள் எடுக்கும் போது சிலர்க்கு சந்தர்ப்பவாதம் போல் தோன்றுவதில் ஒன்றும் தவறில்லை //


அதே தான் தமிழச்சிக்கும்!

சண்டைன்னா நாலு பேர் சாகத்தான் செய்வாங்க என சொன்ன ஜெயலலிதா கூட கூட்டு வச்சிகிறதுக்கு வேற எதாவது தொழிலுக்கு போகலாம்!

Suresh Kumar said...

வால்பையன் said...

// சில நேரங்களில் சில காரணங்களால் சில முடிவுகள் எடுக்கும் போது சிலர்க்கு சந்தர்ப்பவாதம் போல் தோன்றுவதில் ஒன்றும் தவறில்லை //


அதே தான் தமிழச்சிக்கும்!

சண்டைன்னா நாலு பேர் சாகத்தான் செய்வாங்க என சொன்ன ஜெயலலிதா கூட கூட்டு வச்சிகிறதுக்கு வேற எதாவது தொழிலுக்கு போகலாம்!
/////////////////////


நம்ம கிட்ட உள்ள மோசமான பழக்கமே செய்தவன விட்டுட்டு சொன்னவன பிடிக்கணும்னு நினைக்கிறோம் . ஈழத்தில் நடந்த இனபடுகொலைக்கு முழுக்க முழுக்க காரணம் காங்கிரஸ் கட்சி அதற்கு உறுதுணையாக இருந்தது திமுக இந்த இரண்டு கட்சிகளும் தான் இப்போது முதன்மை எதிரியாக ஒரு தமிழ் உணர்வாலனுக்கு இருக்க முடியும் . அப்படியென்றால் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க அதிமுகவை ஆதரிப்பதில் ஒன்றும் தவறில்லை .

இல்லை சீமான் தனியாகவோ இல்லை தமிழ் உணர்வாளர்களாக சேர்ந்து மூன்றாவது அணியாக போட்டியிட்டால் அது மீண்டும் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு சாதகமாக போய்விடும் அதில் சீமான் எடுத்த முடிவு என்னை பொறுத்தவரை பாராட்டுக்குரியது

வால்பையன் said...

//ஈழத்தில் நடந்த இனபடுகொலைக்கு முழுக்க முழுக்க காரணம் காங்கிரஸ் கட்சி அதற்கு உறுதுணையாக இருந்தது திமுக இந்த இரண்டு கட்சிகளும் தான் இப்போது முதன்மை எதிரியாக ஒரு தமிழ் உணர்வாலனுக்கு இருக்க முடியும் . அப்படியென்றால் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க அதிமுகவை ஆதரிப்பதில் ஒன்றும் தவறில்லை . //


இனபடுகொலை கடந்த நான்கு வருடமாக தான் நடப்பது போல் இருக்கிறது உங்கள் வாதம், ஈழம் பற்றிய முழு விபரங்களுடன் சீமானுக்கு ஆதரவு தெரிவியுங்கள் நண்பரே!


//சீமான் தனியாகவோ இல்லை தமிழ் உணர்வாளர்களாக சேர்ந்து மூன்றாவது அணியாக போட்டியிட்டால் அது மீண்டும் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு சாதகமாக போய்விடும் அதில் சீமான் எடுத்த முடிவு என்னை பொறுத்தவரை பாராட்டுக்குரியது //


என்று ஒருவன் அரசியல்வாதியாகிறானோ அன்றே அவன் சுயமரியாதையை இழக்கிறான் என்ற பெரியாரின் கூற்று நியாபகம் வருகிறது! நல்லது செய்ய அரசியலும் ஒரு வழியே தவிர, அரசியல் மட்டுமே வழியல்ல! இன்றைய அரசியல் வியாபாரத்தில் தேவரின் அடிமை சீமானும் விழுந்தது ஆச்சர்யமில்லை தான்!

Ashok said...

http://ilavarasanr.blogspot.com/2011/01/blog-post_12.html
சீமானுக்கும், தமிழ் தேசியத்திற்கும் எட்டு காத தூரம்!

@வால் பையன்
நீங்கள் கண்டிப்பாகப் படித்து கருத்திடுங்கள் தல.

Suresh Kumar said...

இனபடுகொலை கடந்த நான்கு வருடமாக தான் நடப்பது போல் இருக்கிறது உங்கள் வாதம், ஈழம் பற்றிய முழு விபரங்களுடன் சீமானுக்கு ஆதரவு தெரிவியுங்கள் நண்பரே!///////////////////////

இனபடுகொலை நான்கு ஆண்டுகளாக அல்ல பல ஆண்டுகளாக நடந்து வருவது உண்மை தான் ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் காங்கிரஸ் அரசின் சதியாலும் திமுகவின் உதவியாலும் மடிந்த உயிர்கள் ஏராளம்


என்று ஒருவன் அரசியல்வாதியாகிறானோ அன்றே அவன் சுயமரியாதையை இழக்கிறான் என்ற பெரியாரின் கூற்று நியாபகம் வருகிறது! நல்லது செய்ய அரசியலும் ஒரு வழியே தவிர, அரசியல் மட்டுமே வழியல்ல! இன்றைய அரசியல் வியாபாரத்தில் தேவரின் அடிமை சீமானும் விழுந்தது ஆச்சர்யமில்லை தான்!////////////////////

அரசியல் பாதை சீமானுக்கு பிடிக்கலாம் அதற்காக நாம் என்ன செய்ய முடியும் நாம் நினைக்கிறது போல் சீமான் இருக்க வேண்டும் நம் கருத்தை ஒத்து சீமானின் கருத்து இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நம்முடைய தவறு.

Anonymous said...

http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_14.html
சீமானை எதிர்ப்பவர்கள் எல்லாம் சீமான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று புரியவில்லை.யாரும் அதை பற்றி எழுதுவதும் இல்லை.சீமான் எதிர்ப்புடனே தங்கள் கருத்துக்களை முடித்துவிடுகிறார்கள்.

Suresh Kumar said...

அது தான் சொல்றேன் யாருமே எதுக்குமே ஒரு முடிவு சொல்லவில்லை. கொள்கை முடிவுகள் என்ன என்பதை சொல்ல வேண்டும் தானே

Anonymous said...

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் விடும் கொள்கை அறிக்கைகளும் வெறும் தேர்தல் பிரச்சாரம் மட்டும் தான்.தேர்தலின் பின்னர் அவை காற்றில் பறந்துவிடும்.ஆக திமுக அதிமுக இரண்டாலும் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை.ஆனால் தமிழினத்துக்கு மிக பெரிய துரோகத்தை செய்த மிக பலம் பொருந்திய "காங்கிரஸ்" திமுக கூட்டணியை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதே இன்றைய தேவை. அது தான் சீமான் சொன்னார் யார் ஆட்சிக்கு வருகிறார் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் இப்போதைய தேவை என்று.மீண்டும் சொல்கிறேன் திமுக அதிமுக என்ற இரண்டாலும் எந்த நன்மையும் வரப்போவதில்லை.அதே போல இவை இரண்டை தவிர தற்போதைக்கு பிறிதொரு கட்சி ஆட்சிக்கு வருவதென்பது இயலாத காரியம்.

Anonymous said...

ஆக தற்போதைக்கு காங்கிரஸ் திமுக வை வெளியேற்றுவதே புத்திசாலி தனம் .

Good citizen said...

நான் வாள்பையன் கருத்தோடு ஒத்துப்போகிறேன்,,எதிரிக்கு பயந்து நெருப்பில் குதித்தேன் என்பது கேனத்தனம்,,ஒரு உண்மையான போறாளி சாதிப்பதற்காக சந்தர்ப்பவாதி ஆகமாட்டான்,, ஆனால் அதற்காக நான் தமிழச்சியையும் அதரிக்கவில்லை,, பெரியாரின் கொள்கைகளை த்விற அவர் ஒரு எள்லையும் கிள்ளிப்போட்டதில்லை

தனிமரம் said...

Thaninabargalai veenaga thakkakudatu thamilachi.koolgaiyai vimarchiyngal.

Unknown said...

daii suresh loosu... seman pathi onalukoo onum theria... seman oru aiyokiyan....

shiva said...

At last seeman has hidden inside JJ s saree.First of all this vaikoo,seeman,and nedumaran should be sent to jail and then only the tamils problem in sri lanka would be solved.

Nilavan said...

எனக்குத் தெரிந்து தமிழ்ப்படம் ஒன்றில் தன்னை கதாநாயகியாக நடிக்க வைக்க மறுத்ததினால் போட்டு வாங்குகிறார்..

Suresh Kumar said...

@Ramesh

cheman patri ithukku mela enakku theriya vendiya avasiyamilla.

Cheeman unka karuthodu oththu pokanumnu yen ninaikkireenka.

Intraiya soolnilaiyil cheeman eduththa mudivu ennai poruththa varaiyil parattukkuriyathu.

Aakkapoorvama unka karuththai vaiyunkal. Athai vittu vittu thanippatta thakkuthal thevaiyatrathu.

Suresh Kumar said...

Maatru karuththai vaiyunkal atharkana vivathankalai thodaruvom.

Anonymous said...

உங்கள் கேள்விக்கு ஒரு அழகான பதிலை இந்த பதிவில் பார்த்தேன். படித்து புரிந்து கொள்ளுங்கள்.

http://ilavarasanr.blogspot.com/

சீமான் = தமிழகத்துக்கு கிடைத்த இன்னுமொரு வைகோ.

சூர்யகதிர்

ராவணன் said...

பிரான்ஸில் சொகுசு வாழ்க்கை வாழும் மங்கைக்கு சிறைவாசம் எப்படி இருக்கும் என்று தெரியாது. பாவம் பெண்தானே பொறுத்துக்கொள்ளலாம்.

ஆமா...சீமான் யாரு?

கனிமொழிநாடாருக்கு ஏதும் புது உறவா?

வால்பையன் said...

//பிரான்ஸில் சொகுசு வாழ்க்கை வாழும் மங்கைக்கு சிறைவாசம் எப்படி இருக்கும் என்று தெரியாது. பாவம் பெண்தானே பொறுத்துக்கொள்ளலாம்.//


இதை எப்படி சொல்றிங்கன்னு தெரியல!

பிரான்ஸ்ல தமிழச்சி மேல போலிஸ் கேஸ் இருக்கு, பெண்ணிய போராட்டங்களில் தெருவில் இறங்கி போராடியது உங்களுக்கு தெரியாதா?
தமிழச்சியை உங்களுக்கு எவ்வளவு நாளாய் தெரியும்!?

Suresh Kumar said...

moulefrite said...

நான் வாள்பையன் கருத்தோடு ஒத்துப்போகிறேன்,,எதிரிக்கு பயந்து நெருப்பில் குதித்தேன் என்பது கேனத்தனம்,,ஒரு உண்மையான போறாளி சாதிப்பதற்காக சந்தர்ப்பவாதி ஆகமாட்டான்,, ஆனால் அதற்காக நான் தமிழச்சியையும் அதரிக்கவில்லை,, பெரியாரின் கொள்கைகளை த்விற அவர் ஒரு எள்லையும் கிள்ளிப்போட்டதில்லை
/////////////////////////////////

ஏன் நீங்க இப்படி சீமானை எதிர்பார்கிறீங்கனு எனக்கு தெரியவில்லை. இப்போதைய இந்த கவர்ச்சி அரசியலில் சீமானால் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மட்டும் தான் ஓரளவிற்கு முடியுமே தவிர வேறு எதையும் தனியாக செய்ய முடியாது .

Suresh Kumar said...

Nesan said...

Thaninabargalai veenaga thakkakudatu thamilachi.koolgaiyai vimarchiyngal.
//////////////


நியாயமான கருத்து

Suresh Kumar said...

shiva said...

At last seeman has hidden inside JJ s saree.First of all this vaikoo,seeman,and nedumaran should be sent to jail and then only the tamils problem in sri lanka would be solved.
////////////////////////////


ஜெயலிலதா மட்டுமல்ல கருணாநிதியும் இவர்களை ஜெயிலில் அடைத்தவர் தானே. இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை . ஆனால் இப்போதைய தேவை இந்த தமிழ் இன படுகொலைக்கு மிக பெரிய பங்காற்றிய திமுக காங்கிரஸ் தோற்கடிக்க பட வேண்டும் .

Suresh Kumar said...

ராவணன் said...

பிரான்ஸில் சொகுசு வாழ்க்கை வாழும் மங்கைக்கு சிறைவாசம் எப்படி இருக்கும் என்று தெரியாது. பாவம் பெண்தானே பொறுத்துக்கொள்ளலாம்.//////////////////


ராவணன் உங்கள் கருத்தோடு ஒத்து போக முடியாது . நீங்கள் பாவம் பெண் தானே என்று சொல்வதிலேயே உங்கள் ஆணாதிக்கம் தெரிகிறது . இந்த ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில துணிச்சலாக தமிழச்சி கருத்து சொல்கிறார்கள் என்றால் நிச்சயம் பாராட்ட பட வேண்டியது . கருத்துக்களில் வேறுபாடுகள் இருக்கலாம் அதற்கு தனிப்பட்ட தாக்குதல் நியாயமானது அல்ல அது சீமானுக்காக இருந்தாலும் சரி தமிழசிக்காக இருந்தாலும் சரி

Suresh Kumar said...

வால்பையன் said...

//பிரான்ஸில் சொகுசு வாழ்க்கை வாழும் மங்கைக்கு சிறைவாசம் எப்படி இருக்கும் என்று தெரியாது. பாவம் பெண்தானே பொறுத்துக்கொள்ளலாம்.//


இதை எப்படி சொல்றிங்கன்னு தெரியல!

பிரான்ஸ்ல தமிழச்சி மேல போலிஸ் கேஸ் இருக்கு, பெண்ணிய போராட்டங்களில் தெருவில் இறங்கி போராடியது உங்களுக்கு தெரியாதா?
தமிழச்சியை உங்களுக்கு எவ்வளவு நாளாய் தெரியும்!?
//////////////////

நல்ல தகவல் தகவலுக்கு நன்றி தோழரே

Jayadev Das said...

\\என்று ஒருவன் அரசியல்வாதியாகிறானோ அன்றே அவன் சுயமரியாதையை இழக்கிறான் என்ற பெரியாரின் கூற்று நியாபகம் வருகிறது! நல்லது செய்ய அரசியலும் ஒரு வழியே தவிர, அரசியல் மட்டுமே வழியல்ல! இன்றைய அரசியல் வியாபாரத்தில் தேவரின் அடிமை சீமானும் விழுந்தது ஆச்சர்யமில்லை தான்!\\காந்தி, நெல்சன் மண்டேலா, சர்தார் வல்லபாய் படேல், காமராஜர், பக்தவத்சலம், கக்கன், ராஜாஜி இவங்க எல்லாம் அரசியல் வாதிகள்தானே சார்? மக்களுக்கு நன்மை செய்ய வில்லையா? இப்போ தமிழகத்தில் இருக்கும் நிலையில் இரண்டு முக்கிய கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நன்மை செய்யப் போவதில்லை என்ற நிலைதான் இருக்கிறது. ஒருத்தர் உண்மையிலேயே மக்கள் வாழ்வு மேம்பட எதையாவது செய்ய வேண்டும் என்றாலும், ஆட்சி கையில் இருந்தால் தானே முடியும்? தனிப்பட்ட முறையில் என்ன செய்ய முடியும்?

Anonymous said...

சீமான்! மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் கடந்த சில நாட்களில் avar செய்யும் காரியங்கள், என்னை மிக வேதனை படுத்தி விட்டது. நீங்கள் சில விசயங்களை யோசித்து பாருங்கள் :
1. தமிழகத்தில் LTTE கு எவ்வளவு ஆதரவு இருந்தது, அதை ஒழித்து ...கட்டியவள், இன்று நீங்கள் யாருகக வோட்டு கேட்கிரின்களோ அந்த ஜெயா.
2.she joined with Subramaniam swami and dissolved KARUNANIDHI's govt for LTTE support. what did the tamilnadu people do in the next election? did they bring karunanidhi back?
3. she even made the politics so worst? before her when MGR was a CM, any common issues like tamil/cauvery/mullai issue mostly karunanidhi supported MGR. but once this lady come to power, she made a point never join with karunanidhi in any issue. that split the whole tamilnadu. and from 1989 we cannot fight anything unitely. i remember MGR called a bandh for ltte support against jayawardane, the whole tamilnadu stood together irrespective of party. but this lady spoiled everything. now you want to support her.
3. just few months back, in spectrum issue she openly announced that she can give support to congress govt.
few days back she made communist to wait, bcoz she tried her best to make alliance with congress. what is your answer for this?
4.Vijayakanthuku EVKS லட்டு ஊடுன போது, முத்துக்குமார் பத்தி நினைத்து இருப்பான, அவனும் கடைசிவரை காங்கிரஸ் வுடன் கூட்டு வைக்க தானே துடித்தான். கூட்டணி முடிவகரவரை காங்கிரஸ் ஐ எதிர்த்து எதாவது பேசினன, ஈழத்திற்கு ஏதாவது குரல் குடுத்தன? அவனுக்கு நீங்க சப்போர்ட் பண்ணி தான் ஆகனுமா?
5. நல்லவர்கள் அரசியலுக்கு வரணும்னு விஜய்க்கு ஜால்ரா அடிச்சிங்களே, இந்த விஜய்
விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?
எல்லாவற்றுக்கும் போராட்டம் மற்றும் அறிக்கை தரும் நீங்கள் இவற்றை எதிர்த்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உண்மையில் எனக்கு கடைசியாக உங்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றைக்கு விஜய் /sacஐ எல்லாம் சப்போர்ட் பண்ணிகுட்டு. இருப்பதாய் பார்த்தல் யாரையும் நம்ப முடியவில்லை.
6. JAYA தான் மீண்டும் வரணும், நீங்கள் எல்லாம் மீண்டும் பட்டாள் தான் தெரியும். LTTE ஒழிபதற்கு, ltte கு தமிழ்நாட்டில் இருந்த அதரவை அளித்ததற்கு முதல் கரணம் ஜெயா தான். வைகோவை துரத்திய பிறகாவது neengal நல்ல முடிவு எடுபிர்கள் என்று நம்பினேன். ஆனால் நீங்கள் விஜய் அளவுக்கு இறங்கி போகி விட்டிர்கள்.
இனி வுங்களை நம்பி ஒரு பயனும் இல்லை.
7. உண்மையில் தாமரை உங்களுக்கு கடிதம் எழுதிய போது அவர் மீது கோவ பட்டேன், ஆனால் இப்போது உணர் கிறேன் அவர் சொன்னது தான் சரி என்று.

Post a Comment

Send your Status to your Facebook