Friday

திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகம் புதுச்சேரியில் படுதோல்வி அடைய போகிறது -காங்கிரஸ் சர்வே

நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற போவதாக காங்கிரஸ் கட்சியால் எடுக்கப்பட்ட சர்வே தெரிவிக்கிறது.

தமிழ் நாடு , புதுச்சேரி , அஸ்ஸாம் , கேரளா , மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதை பற்றி காங்கிரஸ் கட்சி தனியாக ஒரு சர்வே நடத்தியது அந்த சர்வே இப்போது வெளியாகியுள்ளது. அதன் மூலம் கேரளம் , மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இடது சாரிகளிடமிருந்து பிடிக்கிறது.  

தமிழ் நாடு , புதுச்சேரியில் ஆட்சியை அதிமுக கூட்டணியிடம் இழக்கிறது என்ற சர்வே முடிவால் திமுக கூட்டணி கலக்கத்தில் உள்ளது. இதில் திமுக , காங்கிரஸ் , பாட்டாளி மக்கள் கட்சி , விடுதலை சிறுத்தைகள் அடங்கிய கூட்டணி 234  தொகுதிகளில் வெறும் 77  தொகுதிகளை கைப்பற்றவுள்ளது. இந்த சர்வே காங்கிரஸ் கட்சியால் எடுக்கபட்ட சர்வே  . இந்த சர்வேயிலே 77  என்றால் உண்மையில் இன்னும் அதிக தொகுதிகளை திமுக கூட்டணி இழக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த தேர்தல் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மிக பெரிய படுதோல்வியாக வாய்ப்பு இருக்கிறது.   
அதனால் தான் திமுக தலைவர் கருணாநிதி தொகுதி மாறுவதாக செய்திகள் வருகிறதோ ? ...............

20 கருத்துக்கள்:

Anonymous said...

காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் பூஜ்ஜியம் வாங்க வைக்க வேண்டும்

Unknown said...

communist strong in west bengal and kerela also.. so cong loss these 2 also

Suresh Kumar said...

@shibi காங்கிரஸ் வருகின்ற எல்லா மாநில சட்ட மன்ற தேர்தலிலும் தோற்க வேண்டும். காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கே ஒரு சாபகெடு பாப்போம்

ராஜன் said...

திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்

பொன் மாலை பொழுது said...

இது வெறும் புரளி. காங்கிரஸ் செய்வதற்கு ஒன்றுமில்லை.இதனை செய்கிறார்கள்.
யார் நம்புவது?

மாதவன் said...

கனவு காணுங்கள்..

ஏனென்றால் கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு..

கோவை, ஈரோடு , திருப்பூர்,சேலம் , தர்ம்புரி, நாமக்கல் ,கரூர் ,திண்டுக்கல்,நீலகிரி மாவட்டங்களில் புதிதாக திமுகவில் இணைந்திருக்கும் கொமுக அத்துணை கணக்குகளையும் மாற்றி எழுதப்போகிறது...காரணம் அது கடந்த தேர்தலில் வாங்கியிருக்கும் வாக்குகள்!!!

Suresh Kumar said...

கக்கு - மாணிக்கம் said...

இது வெறும் புரளி. காங்கிரஸ் செய்வதற்கு ஒன்றுமில்லை.இதனை செய்கிறார்கள்.
யார் நம்புவது?
///////////////////////////

இப்போதைய சூழ்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பெரிய பாதிப்பை உண்டு பண்ணும என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது . கடந்த தேர்தலை விட திமுக கூட்டணிக்கு வாக்கு வங்கி குறைந்திருக்கிறதே தவிர கூடவில்லை

Suresh Kumar said...

மாதவன் said...

கனவு காணுங்கள்..

ஏனென்றால் கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு..

கோவை, ஈரோடு , திருப்பூர்,சேலம் , தர்ம்புரி, நாமக்கல் ,கரூர் ,திண்டுக்கல்,நீலகிரி மாவட்டங்களில் புதிதாக திமுகவில் இணைந்திருக்கும் கொமுக அத்துணை கணக்குகளையும் மாற்றி எழுதப்போகிறது...காரணம் அது கடந்த தேர்தலில் வாங்கியிருக்கும் வாக்குகள்!!!
//////////////////

இந்த கொங்கு நாடு கட்சி தான் கள் இறக்க போராடுவோம் என்று சொல்லி அந்த பகுதி மக்களை ஏமாற்றி திமுகவோடு சேர்ந்து கள் இறக்கும் போராட்டத்தை மழுங்க செய்தவர்கள் . இவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பது அந்த பகுதி மக்களுக்கு இப்போது தெரிந்து விட்டது .

மாதவன் said...

உதாரணத்திற்கு கோவையை எடுத்துக்கொள்வோம்! கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸுக்குமுள்ள ஓட்டுவித்தியாசம் 40000 மட்டுமே...ஆனால், கொமுக பெற்ற ஓட்டுக்கள் 130000 , தேமுதிக பெற்ற 70000 ஓட்டுக்களைக் கழித்தாலும் கூட 20000 ஓட்டுக்கள் அதிகமிருக்கிறது....இதேபோலத்தான் கொங்குமண்டலத்தின் அனைத்து தொகுதிகளிலும் கணக்கு மாறுகிறது..டெல்லியில் உக்கார்ந்து ஆராய்ச்சி செய்யும் கம்பெனிகளுக்கு கொமுக என்ற கட்சீயைப்பத்தியே தெரியாது, ஹிஹிஹிஹிஹிஹி.!!

Parliamentary Constituency: Coimbatore



No. of Electors

NA
Polling Stations

NA
No. of Contestants

NA
Polling %age

NA

S.No. Name Party Votes
1 RAMASUBRAMANIAN. K BSP 2937
2 SELVAKUMAR.G.K.S BJP 37909
3 NATARAJAN.P.R. CPM 293165
4 PRABHU.R INC 254501
5 ESWARAN.E.R KNMK 128070
6 KATHIRMANI.P SP 1396
7 SELVAM.M SHS 2007
8 PANDIAN.R DMDK 73188
9 RAJAN.S.K PPOI 2340
10 STEPHEN GANESHAN.S AIJMK 859
11 ARUNACHALAM.K.V IND 1237
12 ESWARAN.G IND 1677
13 KATHIRESAN.C IND 1333
14 SIVARAJ.V IND 1747
15 NATARAJAN.L IND 913
16 NOORMUHAMAD.A IND 4172
17 PREM ANAND.J IND 3872
18 MARKANDAN.N IND 1274
19 MURUGAN.M IND 3424
20 MURUGESAN.K IND 1690
21 RAMASAMY.P IND 1833
22 RAJAPPAN.N IND 1088
23 RAJKIRAN IND 1069
24 VIJAYAKUMAR.C IND 907
25 VENKATACHALAM.A IND 1439

மாதவன் said...

இந்த கொங்கு நாடு கட்சி தான் கள் இறக்க போராடுவோம் என்று சொல்லி அந்த பகுதி மக்களை ஏமாற்றி திமுகவோடு சேர்ந்து கள் இறக்கும் போராட்டத்தை மழுங்க செய்தவர்கள் . இவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பது அந்த பகுதி மக்களுக்கு இப்போது தெரிந்து விட்டது .//

அந்தப்பகுதியில் இருக்கும் எனக்கே தெரியாதது உங்களுக்குத் தெரிந்துவிட்டதா என்ன? அதிசயம்தான்...கண்ணுக்குத்தெரியாமல் ஒவ்வொரு ஊரிலும் அந்தக்கட்சி அமைப்பினை வலுப்படுத்துகிறது..அதனால் தான் 2 சீட்டு , 3 சீட்டு என்று பத்திரிக்கைகள் சொல்லும்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வண்ணம் கொமுகவிற்கு 7 சீட்டுக்கள் கொடுத்திருக்கிறார் கலைஞர்......

பொறுத்திருந்து பாருங்கள்.....கூடவே கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் தனிப்பெரும் செல்வாக்குள்ள மு.கண்ணப்பன்,திருப்பூர் மாவட்டத்தில் கோவிந்தசாமி , ஈரோடு மாவட்டத்தில் முத்துச்சாமி, சேலத்தில் செல்வகணபதி , கரூரில் சின்னச்சாமி என்ற பெருந்தலைகள் கட்சியில் இணைந்திருக்கிறார்கள்..

சும்மா வீட்டில் உட்கார்ந்து திமுக கனவு காணவில்லை...கடந்த மூன்றாண்டுகளாகவே அறிவியற்பூர்வ கணக்கின்மூலம் சட்டசபைத்தேர்தலுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டது அது..பற்றாக்குறைக்குச் செம்மொழி மாநாடு...கோவை நகரெங்கும் பளபளக்கும் சாலைகள்....திருப்பூருக்கு தனிமாவட்ட அந்தஸ்து , திருப்பூர், ஈரோடு இவைகள் மாநகராட்சிகளாக விரிவாக்கம் என்று பணிகள்...

சும்மா கொடநாட்டில் தூங்கிவிட்டு வந்து தேர்தலின் போது மட்டும் பிரச்சாரம் செய்யும் கட்சி திமுக அல்ல நண்பரே.

Suresh Kumar said...

அந்தப்பகுதியில் இருக்கும் எனக்கே தெரியாதது உங்களுக்குத் தெரிந்துவிட்டதா என்ன? அதிசயம்தான்...கண்ணுக்குத்தெரியாமல் ஒவ்வொரு ஊரிலும் அந்தக்கட்சி அமைப்பினை வலுப்படுத்துகிறது..அதனால் தான் 2 சீட்டு , 3 சீட்டு என்று பத்திரிக்கைகள் சொல்லும்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வண்ணம் கொமுகவிற்கு 7 சீட்டுக்கள் கொடுத்திருக்கிறார் கலைஞர்......////////////////////


கலைஞருக்கு வேறு வழி இல்லை கொங்கு நாட்டில் அதிமுக மதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக இருப்பதால எப்படியாவது கொங்கு நாட்டில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தான் கொங்கு நாடு கட்சியை சேர்த்துள்ளது. அதற்கு ஈடு கட்டும் வகையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வந்தது இதை சமன் செய்யும் .

மாதவன் said...

கலைஞருக்கு வேறு வழி இல்லை கொங்கு நாட்டில் அதிமுக மதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக இருப்பதால எப்படியாவது கொங்கு நாட்டில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தான் கொங்கு நாடு கட்சியை சேர்த்துள்ளது. அதற்கு ஈடு கட்டும் வகையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வந்தது இதை சமன் செய்யும் .//

ஆக, கொங்குநாட்டில் சமன் செய்கிறது......வடமாவட்டங்களில் பாமக , வி.சி ஆதரவுடன் முந்துகிறது....இதுதான் நிலைமை....

மாதவன் said...

நினைவிருக்கட்டும், போனமுறை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்தமுறை திமுககூட்டணியில்!!!!

Suresh Kumar said...

நண்பரே நாடாளுமன்ற தேதல் கணக்கு வேறு சட்ட மன்ற தேர்தல் கணக்கு வேறு . நாடாளுமன்ற தேர்தல் என்பது தேசிய அளவிலானது அதிமுக கூட்டணி போட்டியிட்டது மூன்றாவது அணியில். மூன்றாவது அணி என்பது தேசிய அளவில் ஆட்சியமைக்க முடியாத அணி.

சட்ட மன்ற தேர்தலை பொருத்த வரையில் கடந்த சட்டமன்ற தேர்தலோடு ஒப்பிட்டு பாருங்கள். கடந்த முறை அதிமுக கூட்டணியில் மதிமுகவும் , விடுதலை சிறுத்தைகளும் மட்டும் தான் இருந்ததன வாக்கு வித்தியாசம் வெறும் மூன்று சதவீதம் .

ஆனால் இந்த தேர்தலில் மதிமுக தேமுதிக கம்யூனிஸ்ட் புதிய தமிழகம் மனித நேய மக்கள் கட்சி போன்ற மகா கூட்டணி போட்டியிடுகிறது . கடந்த தேர்தலை விட திமுகவின் வாக்கு வங்கி குறைந்திருக்கிறதே தவிர கூடிவிடவில்லை . அப்படி பார்த்தால் குறைந்தது அதிமுக கூட்டணி திமுக கூட்டணியை விட பத்து சதவீதத்திற்கு மேல் வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணியை முந்துகிறது .

இந்த தேர்தலில் திமுகவின் பிரசாரத்தை பொறுத்து மதிக்க தக்க எதிர்கட்சியாகவாவது வர முடியுமா எனபது தான் முடிவில் தெரியும் .

Anonymous said...

மாதவன் said...

நினைவிருக்கட்டும், போனமுறை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்தமுறை திமுககூட்டணியில்!!!!
///////////////

You r true man

புனிதன் said...

இந்த முறை திமுக மண்ணை கவ்வுவது உறுதி. முதன் முறையாக பாமக தோற்க போகிறோம் என்று தெரிந்தே கூட்டணி அமைத்திருக்கிறது. வன்னியர்கள் மத்தியில் ராமதாசுக்கு செருப்படி உறுதி

Anonymous said...

காங்கிரஸ் கட்சி திமுகவிடம் அதிக தொகுதியை எதிர்பார்த்தே இப்படி புரளியை கிளப்புகிறது

Anonymous said...

ஏதோ திமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருந்தால் நாட்டுக்கு நல்லது

Vincent said...

ஓட்டுக்கு எவ்வளவு குடுப்பீங்க சொல்லுங்க என்கிட்டே இருநூறு ஓட்டு இருக்கு

Suresh Kumar said...

Vincent said...

ஓட்டுக்கு எவ்வளவு குடுப்பீங்க சொல்லுங்க என்கிட்டே இருநூறு ஓட்டு இருக்கு

//////////////////

எல்லாம் வியாபாரம் ஆகி விட்டால் மாக்களாட்சியும் இருக்காது மனசாட்சியும் இருக்காது

Post a Comment

Send your Status to your Facebook