ஒரு கட்சி எதிர்கட்சியாக இருக்கவும் சில தகுதிகள் வேண்டும். இமாலய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிபிஐ சில நடவடிக்கைகளையாவது எடுத்திருக்கிறது என்றால் எதிர்கட்சிகளின் இடைவிடாத போராட்டங்கள் தான். அப்படி ஒரு போராட்டங்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் ஒரே குடும்பம் இன்னும் பல கொடிகளை சுருட்டியிருக்கும்.
- தமிழகத்தில் மக்கள் மத்தியில் இன்று போராட்ட குணம் குறைந்திருக்கிறது இதுவே திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் போராட்ட குணம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாகியிருக்கும்.
- உலகத்திலே எங்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய இனபடுகொலை தமிழ் ஈழத்தில் இந்திய காங்கிரஸ் அரசின் துணையோடு நடந்து முடிந்தது . இந்த போர் நடைபெற்ற நேரம் திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் தன் கட்சியை வளர்க்கவாவது விலை போகாமல் எதிர்த்து போராடியிருக்கும்.
- உலக மகா ஊழல் செய்தவன் ஒரு தமிழன் என்ற இழி பெயர் தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்திருக்காது.
- ஒரு சுப்பிரமணிய சாமிக்காக வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடைபெற்றிருக்காது.
- டி ஆர் பாலுவின் கப்பலில் பணிபுரியும் மீனவர்களை எல்லை மீறி மீன் பிடிக்க சொல்லி அதே நேரம் டக்ளசோடு சேர்ந்து நாடகமாடி தமிழக மீனவர்கள் இலங்கை மீன்வர்களுக்குமான உறவை துண்டிக்க முயற்சிகள் மேற்கொண்டிருக்க பட்டிருக்காது.
- முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவிற்கு சாதகமான நிலை ஏற்பட்டிருக்காது.
- 80 வயது நிரம்பிய பார்வதி அம்மா மருத்துவத்திற்காக சென்னை வந்த போது திருப்பி அனுப்பியிருக்க மாட்டார்கள்.
- தன் பிள்ளைகளை கொள்ளையடிப்பதற்கும், சினிமா, மீடியா போன்ற எல்லா துறைகளையும் கையில் எடுக்க முடிந்திருக்காது.
- இப்போது இருப்பது போன்று தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தால் திமுக குண்டர்களால் பொது மக்களுக்கு மிரட்டல்கள் வராது.
- மணல் கொள்ளைகள், கிரானைட் கொள்ளைகள் , அறிவிக்கபடாமல் பேருந்து கட்டணம் உயர்த்தியது, போன்ற திருட்டு செயல்கள் இருந்திருக்காது.
5 கருத்துக்கள்:
இன்னும் 44 நாட்கள்தான் கருணாநிதிக்கு கெடு
கடாபிக்கு கெடு குடுக்கிற மாதிரி கருணாநிதிக்கும் கெடு குடுக்க வேண்டியது இருக்கு அப்படி தானா?
பட்டது போதுமா ! பழ நெடுமாறா ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html - OK
@நிலவு ////////
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் படித்து விட்டேன்
April 13 kalagnarukku makkal vaippanka aappu
Post a Comment