இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Friday
பன்றிகளின் முன்னால் முத்தைச் சிதற விடாதேயுங்கள்; பரிசுத்தமானதை பாவிக்குக் கொடாதேயுங்கள்
தினமலரில் இவர்களின் பார்வையில் பகுதியில் நாஞ்சில் சம்பத் ( ம.தி.மு.க., கொள்கை விளக்க அணிச் செயலாளர் )
ஏப்ரல் திங்களில் தமிழகம் சட்டமன்றத்திற்கான தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
நாட்டு மக்களின் கண்ணீரையும் ரத்தத்தையும் காவுகேட்டு மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்து தன்னையும் பல்கி பெருக்கிக் கிடக்கும் தனது குடும்பதையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிற ஒரு அபூர்வப் பிறவி ஆறாவது முறையாகவும் அன்னைத் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர, அதற்கான அடிப்படை வேலைகளில் ஆளும் தரப்பினர் இப்போதே ஈடுபடத் துவங்கியுள்ளனர். கொள்ளையடித்துக் குவித்து வைத்திக்கிற கோடிப் பணங்களைக் கொட்டிச் செலவழித்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கி தமிழ்நாட்டைத் தன் குடும்பத்தின் வேட்டைக்காடாகத் துடிக்கிற சுயநலச் சுனாமிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும். வரும் தேர்தலில் குலத் துரோகம் செய்கிற இந்தக் குடும்பத்தை தமிழக வாக்காளர்கள் ஓரங்கட்டாவிட்டால் தமிழகம் சாரம் இழக்கும். சத்தியிழக்கும் வருங்காலச் சந்ததி வாழ்விழக்கும் தமிழ்க் குடும்பங்கள் தத்தளிக்கும் தடுமாறும். ஒரு குடும்பம் ஓகோ என்றிருக்கும். ஆகா நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று நாளெல்லாம் கண்ணீர் வடிக்க வேண்டியது வரும். கவலைப்பட வேண்டியது வரும்.
அதிகாரத்திற்கு வருகிறவர்களுக்கு அந்த நாளில் அண்ணல் காந்தியடிகள் சொன்ன அறிவுரையை இந்த நாளில் நினைவு படுத்துவோம். ‘ஏழ்மையை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காகவே இந்தப் பதவிகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை மறவாமல் செயற்படுங்கள்‘ நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தான் ஒரு அரசாங்கம் இயங்குகிறது என்பதை அண்ணா அவர்கள் மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரையில் தெளிவுபடுத்தினார். “முழுவயிறு காணாதார் முதுகெலும்பு முறிய பாடுபடுவோர், வாழ்வின் சுவைகாணார், வலியோரின் பகடைக் காய்கள், ஓடப்பர் - இவரெல்லாம் தருகின்ற வரிப்பணம்தான் கோட்டையாக் கொடிமரமாய் பாதையாய் பகட்டுகளாய் அமல் நடத்தும் அதிகாரிகளாய் அறிவு பெற அமையும் கூட்டங்களாய் அமைகின்றன” என்றார் அறிஞர் அண்ணா. அண்ணல் காந்தியடிகளின் அறிவுரையும், அறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதலையும் இன்றைய ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டு இருந்தால் நாடு நாடாக இருந்திருக்கும். காடாக மாறியிருக்காது கவலை மிகுந்திருக்காது.
வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் செய்தார்கள். அரசியல் செய்ய வந்தவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்றார் கவிஞர் வைரமுத்து. யாரை மனதில் வைத்து இப்படி எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் ஆதாயச் சூதாடிகளால் இன்று அரசியல் வியாபாரம் ஆகி விட்டது. விதியற்றவர்களாய், கதியற்றவர்களாய் மக்கள். இந்த மதோன்மத்தர்களின் கோரப்பிடியில் இருந்து நாட்டை மீட்க வாக்குச்சீட்டு என்ற ஆயுதத்தை ஏந்த மக்கள் அணியமாக வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
ஒரு கிண்ணத்தில் மட்டுமே அமுதம் நிரம்பி வழிகிறது. ஒரு தோட்டத்தில் மட்டுமே தென்றல் காற்று திரும்பத்திரும்ப வீசுகிறது. ஒரு நத்தவனத்தில் மட்டுமே மலர்கள் மலர்ந்து சிரிக்கின்றன. ஒரு கருணை இல்லாத குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியில் மந்தகாசப் புன்னகையில் மல்லாந்து கிடக்கிறது.
ஒரு குடும்ப ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எதிராக குவலயத்தில் அங்கிங்கெனாதபடி புரட்சிகள் சூல்கொண்டு வருகின்றன. நைல் நதிக்கரையில். நாகரீகத்தின் தொட்டில் பூமியில், பிரமிடுகளின் தேசத்தில், அய்யாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னால் டரோம சாம்ராஜ்யத்திற்கு தானியங்கள் வழங்கிய வளமார்ந்த பூமியில் நாசரின் எகிப்தில் முப்பது ஆண்டுகாலம் எகிப்து மக்களை ஏய்த்து, ஏமாற்றி, உண்டு கொழுத்து, உல்லாசம் அனுபவித்து, ஊரெல்லாம் வளைத்துப்போட்ட ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் வெசுவியஸ் எரிமலையாய் வெடிக்கிறார்கள் ஊடகத்தில் ஹோஸ்னி முபாரக்கின் அத்துமீறலை அம்பலப்படுத்திய காலித் சையத் என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டான்.
காலித் சையத்தின் மரணம் எகிப்து மக்களின் நெஞ்சத்தில் ரணத்தை உருவாக்கியது. அது போர்குணமாக உருவெடுத்தது புகழ்பெற்ற தாரீர் சதுக்கத்தில் இருபது லட்சம் மக்கள் பதினெட்டு நாட்கள் திரண்டார்கள். நாயே நாட்டைவிட்டு வெளியேறு என்று திசையதிர மூரி முழங்கினார்கள். மக்களின் உள்ளத்தில் பொங்கியெழுந்த கோபத்திற்கு ஈடு கொடுக்க முடியாத ஹோஸ்னி முபாரக் குடும்பத்தோடு கெய்ரோவில் இருந்து வெளியேறி விட்டான். எகிப்தில் நின்று நிலவிய ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. மக்களின் விழாவிற்கு விடை கிடைத்தது.
எகிப்தில் புரட்சி வெடித்ததற்கும் ஹோஸ்னி முபாரக் வெளியேறியதற்கும் டுனீசியாவில் ஏற்பட்ட புரட்சி தான் காரணமாக அமைந்தது. 72 வயது நிரம்பிய டுனீசியாவின் அதிபர் பெண் அலியின் ஆட்சியில் டுனீசியாவில் நொந்தார்கள். நொறுங்கிப் போனார்கள். மக்கள் அதலபாதாளத்தில் தூக்கி வீசப்பட்டார்கள். பெண் அலியின் குடும்பமோ ஆகாயத்தையே வசமாக்கிவிட்டது. டுனீசியாவிலும் புரட்சி பூத்தது. புதுமை சிலிர்த்தது. கொற்றத்தில் இருந்த கொடியவன் பெண் அலிக்கு எதிராக முகமதுவுவாசி என்ற இளைஞன் தற்கொ¬லை செய்து மாண்டான். அந்த இளைஞனின் சாவுதான் பெண் அலியின் ஆட்சியைக் காவு கேட்டது. டுனீசியாவில் இருந்து பெண் அலியும் வெளியேறி விட்டான் குடும்பத்துடன்.
பனாமாவில் இப்போது சலேவிற்கு எதிராக புரட்சி வெடித்து விட்டது. சலேவும் தாக்குப்பிடிக்க மாட்டான். அவன் ஆட்சியும் தரைமட்டமாகிவிடும் என்ற செய்திகள் காதில் தோனாய்ப் பாய்கிறது.
விடுதலை உணர்ச்சிக்கு வித்தூன்றிய மாமனிதன் உமர் முக்தார் உலவிய லிபியாவிலும் மக்கள் கிளர்ச்சிக் கொழுந்து விட்டு எரிகிறது. கடாபிக்கு எதிராக மக்கள் களத்திற்கு வந்து விட்டார்கள். லிபியாவின் தலைநகர் டிரிபோலி போர்க்களமாக விட்டது. கடாபிக்கு எதிராக மக்கள் செங்குருதி சிந்த சித்தமாகி விட்டார்கள். பெங்காசி நகரம் புரட்சியாளர்கள் வசமாகி விட்டது. பொது மக்கள் காங்கிரஸ் எனும் லிபியாவின் பார்லிமெண்ட் தீக்கரையாக்கப்பட்டு விட்டது. பல நகரங்களில் அரசு அலுவலகங்கள் தீயில் தீர்ந்து கொண்டிருக்கின்றன. பெங்காசி விமானப் படைத்தளத்தைப் புரட்சியார்கள் உடைத்து நொறுக்கி விட்டார்கள். தலைநகர் டிரிபோலியில் உள்ள விமான நிலையமும் புரட்சியாளர்களால் இழுத்து மூடப்பட்டுவிட்டது. சிட்ரோ, டொப்ருக், மிஸ்ரட்டா, கோம்ஸ், டர்கவுனா, ஜென்டன், அல்ஜாவியா, ஜவாரா போன்ற இடங்களில் எல்லாம் கலகக்காரர்கள் களமிறங்கி விட்டார்கள். புரட்சியாளர்கள் மீதும் தாயகத்து மண்மீதும் கொடுங்கோலன் இராஜபட்சேயைப் போல ஏவுகணைத் தாக்குதலுக்கு இராணுவத்தை ஏவி விட்ட பிறகும் புரட்சித் தீ எல்லாத் திசைக்கும் பரவுவதாக செய்திகள் வருகிறது. முட்டாள் கடாபியும் லிபியாவை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஐ.நாவின் மனித உரிமைப்பிரிவின் தலைவன் நவிபிள்ளை கடாபியின் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்கிற அளவிற்குக் கடாபியின் நிலைமை கவலைக்கிடமாகி விட்டது.
மத்திய கிழக்கில் வளம் நிறைந்த பக்ரைனிலும் புரட்சி பூத்துக் கிடக்கிறது. பக்ரைன் தலைநகர் மனாமாவின் ‘பேர்ள்’ சதுக்கத்தில் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் மன்னராட்சிக்கு எதிராக மண்ணும் விண்ணும் அதிர அன்றாடம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
மன்னராட்சி காலூன்றி இருக்கிற அரபுச் சீமையில் மக்கள் புரட்சி வெல்லுமானால் மக்களாட்சித் தத்துவம் மலர்குலுங்கும் மண்ணில் புரட்சி வெடிக்க அதிக நேரமாகாது. அதற்கான தருணம்தான் வருகிற பொதுத் தேர்தல் இந்தத் தேர்தலின் முடிவில் மாறுதலும் சாத்தியாகும். மக்களுக்கு ஆறுதலும் சாத்தியமாகும்.
தொலை நோக்குப் பார்வையைத் தொலைத்துவிட்டு வளமான எதிர்காலத்திற்கு வழி காணாமல் நிகழ்காலத்தின் கதவடைக்கிற கருணாநிதியின் காலம் தமிழக வரலாற்றில் கசப்பான காலம் களப்பிரர் காலத்தைத் தான் நினைவு படுத்துகிறது. நெஞ்சு சுடுகிறது.
மக்களுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்காமல் மீனைக் கொடுத்து மக்களை ஏய்க்கிற இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து மக்களை ஏய்க்கவும் ஏமாற்றவும் திட்டமிடுகிறார்கள். மலைவாசியும் தொட முடியாத தூரத்தில் விலைவாசி. இதை நீ யோசி என்று சொன்னால் மக்களுக்கு வாங்கும் சக்தி வந்து விட்டது என்று முதலமைச்சர் பிலாக்கணம் பாடுகிறார். தன்மக்களைச் சொல்கிறாரா? தமிழ்நாட்டு மக்களைச் சொல்லுகிறாரா? என்பது தான் தெரியவில்லை.
ஜனநாயக பண்புக்குப் பந்தி வைக்க குடவோலை முறைகண்ட பழந்தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியில் ஜனநாயகம் கட்சியிலும் ஆட்சியிலும் சிரச்சேதம் செய்யப்பட்டு விட்டது. கட்சியின் பொருளாளர், துணைமுதல்வர் என்னும் இடத்திற்கு ஸ்டாலினைக் கொண்டு வந்த பிறகும் இளைஞரணிச் செயலாளர் பதவிக்கு இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்கக் கருணாநிதிக்கும் மனமில்லை. ஸ்டாலினுக்கும் குணமில்லை. தடாலடி அரசியல் நடத்துகிற கருணாநிதிக்கு மகனாகப் பிறந்தார். என்பதை விட வேறு எந்த எந்தத் தகுதியும் இல்லாத அழகிரியை மத்திய மந்திரியாக்கிய அவலத்தை எங்கேபோய் சொல்வது அறிஞர் அண்ணாவும் அவர்தம்பி வைகோவும் அலங்கரித்த மாநிலங்களவையில் கனிமொழியை உட்கார வைத்ததன் மூலம் மாநிலங்கள் அவையே அழுக்காகிவிட்டது. கருணாநிதி குடும்பத்தைச் சார்ந்த ஆறுக்கும் மேற்பட்ட அதிகாரமையங்கள் தமிழகத்தைக் கயிறு போட்டுத்தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு மலிவான, மலினமான, கீழ்த்தரமான, கேவலமான, கோரமான குடும்ப ஆட்சியைக் குவலயத்தில் வேறெங்கும் பார்க்க முடியாது. இவர்களை இன்னும் ஏன் இந்த மண்ணில் ஆள அனுமதிக்க வேண்டும் என்கிற கேள்வி தமிழக வாக்களார் மத்தியில் இன்று எழுந்து விட்டது. உண்மையைக்கண்டு உள்ளுக்குள் ஒடுங்கிவிடாமல் ஊரெல்லாம் மக்கள் சீறியெழத் தொடங்கிவிட்டார்கள். அச்சமும் பேழமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற்கொண்ட ஊமை ஜனங்கள் தான் தமிழ் நாட்டு மக்கள் எனக் கருணாநிதி கணக்கிடுவாரேயானால் கருணாநிதியின் கணக்கை முடிக்க மக்கள் கணின்று எழுந்த விட்டார்கள் என்பதை போகப் போகப் புரிந்து கொள்வார்கள் ஆட்சியாளர்கள்.
ஒளி மிகுந்த தமிழகத்தை இருட்டில் தள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுதொழில் குறுதொழிலுக்குக் கொள்ளி வைத்த ஆட்சிதான் கருணாநிதி ஆட்சி. வீட்டுக்கு ஒரு குடிகாரணை உற்பத்திசெய்து தாயின் கையில் 1 ரூபாய்க்கு அரிசியையும் தகப்பன் கையில் ரூ.100/- சாராயத்தையும் கொடுத்தது சாதனையா? வேதனையா?
பாதுகாப்பு வளையத்துக்குள் பத்திரமாக இருந்து ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளரையே அவர் வீட்டு வாசலில் வெட்டிக் கொல்லுகிறார்கள் என்றால் உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது உயர்நீதிமன்ற நீதியரசர்களும் இந்த நீசனின் ஆட்சியில் தாக்கப்படுகிறார்கள் என்றால் ஆழ்வார்க்குறிச்சியில் பட்டப்பகலில் மந்திரிகள் முன்னிலையிலேயே சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள் என்றால் காலையில் பட்டாம் பூச்சி போல் பள்ளிக்குப் பறந்து சென்ற குழந்தை மாலையில் வீடு திரும்புவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்றால் இந்தியாவில் இதைவிட இழிவான கேடு கெட்ட ஆட்சி வேறெங்கும் இல்லை.
ஆளப்படுகிற மக்கள் வசதியாக வாழ வேண்டும் என்றால் அவர்கள் வீட்டில் வசந்தம் கோலம்போட வேண்டும் என்றால் ஆளுகிறவன் ஏழையாக இருக்க வேண்டும். இங்கே ஆளப்படுகிற இலவசத்திற்குக் காத்திருக்கிற யாசகர்கள் ஆளுகிறவர்கள் என்ஜினியர்கள் கல்லூரி தாளாளர்கள். மேலாளர் நாகரிகம் நிலவிய நாட்டில் இப்போது தாளாளர் நாகரிகம் தலைதூக்கி விட்டது.
இனப்படுகொலை நிகழ்த்திய இந்திய எஜமானியின் காலில் விழுந்து கிடக்கும் இந்த அடிமைக் கூட்டத்தை, அலைவரிசையில் தன் கைவரிசையைக் காட்டி தேசப்பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஆபத்தான மனிதர்களை, பட்டப்பகலையே பட்டாபோடும் இந்த பகல் கொள்ளையர்களை, வலிக்காமலேயே ரத்தம் உறிஞ்சுகிற இந்த நவீனரக ஓட்டுண்ணிகளை, பண்பாட்டு அடித்தளத்தின் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தைத் தொடுத்திருக்கிற குலக்கேடர்களை வேரோடும் தூரோடும் வெட்டிச் சாய்க்கிற வேள்வியில் வெற்றி பெற்றால் தான் நாடு நாடாக இருக்கும்.
ஜனநாயக தேவதையின் துகிலுரிந்த இந்த நவீன துச்சாதனர்களின் இருந்து, 1,01,541/- கோடிக்கடன் வாங்கி நிர்வாகத்தை நிர்வாணமாக்கிய விவேகம் கெட்டவர்களிடம் இருந்து, தீர்ந்து போகாத திராவிட இயக்க இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கத் துடிக்கும் கொள்கைத் துரோகிகளிடம் இருந்து, வாரிசு அரசியல் என்னும் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்ட மரபார்ந்த தமிழகத்தின் பெருமையை மீட்டெடுப்பதற்கு தமிழர்களே தயாராகுங்கள். தாமதித்தால் எதுவும் நேராமலும் போகலாம். நல்ல நேரமிது நழுவ விடாதீர்கள்.
நன்றி : தினமலர்
திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகம் புதுச்சேரியில் படுதோல்வி அடைய போகிறது -காங்கிரஸ் சர்வே
எழுதியது
Suresh Kumar
Labels:
அதிமுக கூட்டணி,
தமிழ்நாடு,
திமுக கூட்டணி,
தேர்தல் 2011
எழுதிய நேரம்
Friday, March 04, 2011
நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற போவதாக காங்கிரஸ் கட்சியால் எடுக்கப்பட்ட சர்வே தெரிவிக்கிறது.
தமிழ் நாடு , புதுச்சேரி , அஸ்ஸாம் , கேரளா , மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதை பற்றி காங்கிரஸ் கட்சி தனியாக ஒரு சர்வே நடத்தியது அந்த சர்வே இப்போது வெளியாகியுள்ளது. அதன் மூலம் கேரளம் , மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இடது சாரிகளிடமிருந்து பிடிக்கிறது.
தமிழ் நாடு , புதுச்சேரியில் ஆட்சியை அதிமுக கூட்டணியிடம் இழக்கிறது என்ற சர்வே முடிவால் திமுக கூட்டணி கலக்கத்தில் உள்ளது. இதில் திமுக , காங்கிரஸ் , பாட்டாளி மக்கள் கட்சி , விடுதலை சிறுத்தைகள் அடங்கிய கூட்டணி 234 தொகுதிகளில் வெறும் 77 தொகுதிகளை கைப்பற்றவுள்ளது. இந்த சர்வே காங்கிரஸ் கட்சியால் எடுக்கபட்ட சர்வே . இந்த சர்வேயிலே 77 என்றால் உண்மையில் இன்னும் அதிக தொகுதிகளை திமுக கூட்டணி இழக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த தேர்தல் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மிக பெரிய படுதோல்வியாக வாய்ப்பு இருக்கிறது.
அதனால் தான் திமுக தலைவர் கருணாநிதி தொகுதி மாறுவதாக செய்திகள் வருகிறதோ ? ...............
கடவுளிடம் கேளுங்கள் என்று சொல்ல மாட்டார் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்
கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆட்சி இன்னும் சில மாதங்களில் மக்கள் முன் பல பரீட்சைக்கு தயாராகிறது. இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்ட தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்தினர். இதில் எதிர் கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டையுடன் சட்ட சபைக்கு வந்து தங்கள் எதிர்ப்பினை காட்டியுள்ளனர். தமிழகத்தின் சராசரி வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிற இந்த வேளையில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதத்தை கூட்டுவதற்கு எந்தவொரு தொலை நோக்கு திட்டமும் இல்லாமல் இந்த அரசு நான்கரை ஆண்டுகளை கடந்து ஓடி விட்டது.
டீசல் வாங்க காசு இல்லாமல் அரசு பேருந்துகள் ஓடவில்லை என்ற அதிர்ச்சி கரமான செய்திகள் மக்களை சிந்திக்க வைக்கிறது. எந்தவொரு தொலை நோக்கு திட்டமும் இல்லாமல் செயல் பட்டால் இந்த நிலை ஏற்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மத்திய அரசின் தவறான திட்டங்களால் கடந்த ஆண்டு மட்டும் ஆறு முறை பெட்ரோல் விலை ஏறியுள்ளது. இதே போல் டீசல் விலையும் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் கடும் விலையேறியுள்ளது .
பெட்ரொலிய பொருட்களின் விலையுயர்வால் தமிழக அரசுக்கு மட்டும் நடப்பு ஆண்டில் 3000 கோடி ருபாய் அதிக வருமானம் வரும் என் கணக்கிட பட்டது. ஆனால் இந்த விலையுயர்வினால் போக்குவரத்து கழகத்திற்கு 500 கோடி ருபாய் நட்டம் ஏற்படும் எனவும் தெரிவிக்க பட்டது . ஒரு பக்கம் அதிக அளவு லாபம் ஒரு பக்கம் குறைந்த அளவு நட்டம் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தை அரசு பெட்ரொலிய பொருட்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் சரி செய்திருக்கலாம். அது மட்டுமல்லாது பேருந்துகளில் புதிய புதிய ஆங்கில எழுத்துக்களை போட்டு பயண கட்டணத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள். அதிகார பூர்வமாக அறிவித்து பயண கட்டணத்தை உயர்த்தாமல் மறைமுகமாக மக்களை ஏமாற்றி விடலாம் என் நினைத்து மக்களை ஏமாற்றி வருகிறது .
நான்கரை ஆண்டு கால அரசு இதுவரை வளர்ச்சிக்கான எந்த ஒரு திட்டமும் தீட்ட வில்லை . நான்கரை ஆண்டில் மின்வெட்டு மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தினமும் அறிவித்து இரண்டு மணிநேரம் அறிவிக்காமல் மூன்று மணி நேரம் அப்படி குறைந்தது தினமும் ஐந்து மணி நேரம் மின்சார தடை ஏற்படுகிறது. இதனால் ஒட்டு மொத்த மக்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
தமிழகத்தில் புதிதாக எந்த உள்கட்டமைப்பும் இந்த அரசால் ஏற்படுத்த படவில்லை . நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளை தவிர எந்தவொரு மாநில சாலையோ , மாவட்ட சாலையோ இந்த அரசால் போட படவில்லை. சாலைகள் இன்று மரண குழிகளாக மாறி விட்டன. பயணங்கள் பொது மக்களுக்கு சலிப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கட்டுமான பொருட்களோ இன்று நடுத்தர மக்கள் வீடு கட்ட முடியாத அளவிற்கு மாறி விட்டது. சொத்துக்கள் வாங்குவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாது. ஒவ்வெரு பக்கமும் பொது மக்களுக்கு அடியோடு அடியாக தான் இருக்கிறது . கலைஞரின் குடும்பம் மட்டும் தான் தமிழகத்தையே ஆட்சி செய்கிறது. குடும்ப பிரச்சனைகளால் மதுரையில் எரிக்க பட்ட மூன்று உயிர்கள். இந்த நான்கரை ஆண்டுகளில் எல்லா துறைகளிலும் ஊழல்கள் மலிந்து விட்டன. உலகையே வியக்க வைத்த மிக பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலை செய்ததும் இந்த குடும்பம் தான் . தமிழக துறைகள் அனைத்திலும் லஞ்சம் பெருகி சாதாரண மக்கள் அரசு அலுவலகங்களில் சென்று நியாயமான கோரிக்கைகளை செயல் பட முடியாதவாறு எல்லாவற்றிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது.
Read More
டீசல் வாங்க காசு இல்லாமல் அரசு பேருந்துகள் ஓடவில்லை என்ற அதிர்ச்சி கரமான செய்திகள் மக்களை சிந்திக்க வைக்கிறது. எந்தவொரு தொலை நோக்கு திட்டமும் இல்லாமல் செயல் பட்டால் இந்த நிலை ஏற்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மத்திய அரசின் தவறான திட்டங்களால் கடந்த ஆண்டு மட்டும் ஆறு முறை பெட்ரோல் விலை ஏறியுள்ளது. இதே போல் டீசல் விலையும் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் கடும் விலையேறியுள்ளது .
பெட்ரொலிய பொருட்களின் விலையுயர்வால் தமிழக அரசுக்கு மட்டும் நடப்பு ஆண்டில் 3000 கோடி ருபாய் அதிக வருமானம் வரும் என் கணக்கிட பட்டது. ஆனால் இந்த விலையுயர்வினால் போக்குவரத்து கழகத்திற்கு 500 கோடி ருபாய் நட்டம் ஏற்படும் எனவும் தெரிவிக்க பட்டது . ஒரு பக்கம் அதிக அளவு லாபம் ஒரு பக்கம் குறைந்த அளவு நட்டம் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தை அரசு பெட்ரொலிய பொருட்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் சரி செய்திருக்கலாம். அது மட்டுமல்லாது பேருந்துகளில் புதிய புதிய ஆங்கில எழுத்துக்களை போட்டு பயண கட்டணத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள். அதிகார பூர்வமாக அறிவித்து பயண கட்டணத்தை உயர்த்தாமல் மறைமுகமாக மக்களை ஏமாற்றி விடலாம் என் நினைத்து மக்களை ஏமாற்றி வருகிறது .
நான்கரை ஆண்டு கால அரசு இதுவரை வளர்ச்சிக்கான எந்த ஒரு திட்டமும் தீட்ட வில்லை . நான்கரை ஆண்டில் மின்வெட்டு மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தினமும் அறிவித்து இரண்டு மணிநேரம் அறிவிக்காமல் மூன்று மணி நேரம் அப்படி குறைந்தது தினமும் ஐந்து மணி நேரம் மின்சார தடை ஏற்படுகிறது. இதனால் ஒட்டு மொத்த மக்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
தமிழகத்தில் புதிதாக எந்த உள்கட்டமைப்பும் இந்த அரசால் ஏற்படுத்த படவில்லை . நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளை தவிர எந்தவொரு மாநில சாலையோ , மாவட்ட சாலையோ இந்த அரசால் போட படவில்லை. சாலைகள் இன்று மரண குழிகளாக மாறி விட்டன. பயணங்கள் பொது மக்களுக்கு சலிப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கட்டுமான பொருட்களோ இன்று நடுத்தர மக்கள் வீடு கட்ட முடியாத அளவிற்கு மாறி விட்டது. சொத்துக்கள் வாங்குவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாது. ஒவ்வெரு பக்கமும் பொது மக்களுக்கு அடியோடு அடியாக தான் இருக்கிறது . கலைஞரின் குடும்பம் மட்டும் தான் தமிழகத்தையே ஆட்சி செய்கிறது. குடும்ப பிரச்சனைகளால் மதுரையில் எரிக்க பட்ட மூன்று உயிர்கள். இந்த நான்கரை ஆண்டுகளில் எல்லா துறைகளிலும் ஊழல்கள் மலிந்து விட்டன. உலகையே வியக்க வைத்த மிக பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலை செய்ததும் இந்த குடும்பம் தான் . தமிழக துறைகள் அனைத்திலும் லஞ்சம் பெருகி சாதாரண மக்கள் அரசு அலுவலகங்களில் சென்று நியாயமான கோரிக்கைகளை செயல் பட முடியாதவாறு எல்லாவற்றிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது.
அனைத்து துறைகளையும் ஒரு குடும்பம் ஆக்கிரமித்து தமிழக மக்கள் இன்று அடிமையாக காணப்படுகின்றனர். மக்கள் வாழ்வாதாரங்களை பெருக்காமல் சில இலவசங்களை கொடுத்து மக்களை பிச்சைகாரர்களை போல் அரசு அலுவலகங்களுக்கு முன்னால் வரிசையாக நிற்க வைக்கிறது இந்த அரசு. முல்லை பெரியாறு அணையில் தமிழக உரிமையை நிலை நாட்டாமல் பேரம் நடத்து தொலைக்காட்சி சேனலுக்கு எந்த பாதிப்பு வர கூடாது என்பதற்காக கேரளாவிற்கு சாதகமாக நடந்து தென் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சியில் இந்த அரசு ஈடு பட்டு வருகிறது . மழையால் பாதிக்க பட்ட மக்களுக்கு இன்னும் ன்சரியான நிவாரணங்கள் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில் தான் இன்று ஆளுநர் உரை வாசிக்க பட்டது .
வெங்காய விலையுயர்வுக்கு பதிலளித்த முதல்வர் பெரியாரிடம் கேளுங்கள் என்று சொன்னது போல் தமிழகம் நாளை வாழ்விழந்து , வாழ்வாதாரம் இழந்து நிற்கும் போது கடவுளிடம் கேளுங்கள் என்று சொல்ல மாட்டார் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும் . மக்கள் தான் விழிப்புணர்வு அடைந்து வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர போராட வேண்டும் . ஓன்று படுவோம் தமிழகத்தை காப்போம் .
வெங்காய விலையுயர்வுக்கு பதிலளித்த முதல்வர் பெரியாரிடம் கேளுங்கள் என்று சொன்னது போல் தமிழகம் நாளை வாழ்விழந்து , வாழ்வாதாரம் இழந்து நிற்கும் போது கடவுளிடம் கேளுங்கள் என்று சொல்ல மாட்டார் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும் . மக்கள் தான் விழிப்புணர்வு அடைந்து வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர போராட வேண்டும் . ஓன்று படுவோம் தமிழகத்தை காப்போம் .
சோனியாவிற்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
இலங்கை,
சோனியா,
தமிழ் ஈழம்,
தமிழ்நாடு
எழுதிய நேரம்
Friday, December 03, 2010
மனசாட்சினா என்ன விலை எந்த கடையில கிடைக்கும் என்று கேட்கும் அளவிற்கு இன்றைய சமூக சூழ்நிலை மனிதர்களை மாற்றி இருக்கிறது. நான் நன்றாக இருந்தால் போதும் என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்ற மனநிலையே இன்று எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது . மற்றவர்களை கடவுள் பார்த்து கொள்வார் என்று அந்த இடத்திலிருந்து கடவுள் மீது பழியை போட்டு தப்பித்து கொள்கிறார்கள் .
அரசன் ஏழையாக இருந்தால் தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று சொல்வார்கள் ஆனால் இன்று மக்களை ஆளுகிறவர்கள் கோடீஸ்வரராக இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் . அறிவியல் வளர வளர மனித குலமும் தங்கள் அறிவில் வளர்ந்து தன்னம்பிக்கையோடு மற்றவர்களை கையேந்தாமல் சுய உழைப்பில் வாழ வேண்டும் ஆனால் இன்றோ சூழ்நிலை மாறி விட்டது . ஏதோ ஒன்றுக்கு அடிமையாவது போல் தமிழக மக்கள் இலவசங்களுக்கு அடிமையாகி விட்டனர் . அரசும் மக்களை கவுரவ பிச்சைகாரர்கள் ஆக்கி விட்டது . பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டால் அவன் எப்படி நமக்கு அடிமையாக இருப்பானோ அதே நிலை போல் ஓட்டு மொத்த தமிழகமும் மாறி விட்டதோ என தோன்றுகிறது .
ஜனநாயகத்தின் ஒரு தூணாக விளங்குகின்ற பத்திரிகைகள் இன்று நடிகைகளின் கவர்ச்சி படங்களோடு தங்கள் வருமானத்தை ஈட்டி கொள்கின்றனர் . தமிழக பத்திரிகைகள் கள்ள காதலனால் காதலி கொலை என்ற சம்பவங்கள் இருந்தால் முதல் பக்கத்தில் போட்டு ஐந்து பத்தி வரை அவன் அவளை முதலில் சந்தித்த போது அப்படி உறவு நடந்தது , பின்னர் அங்கெ உறவு நடந்தது என்று பலனா புத்தகங்களுக்கு ஈடாக கதை எழுதுவார்கள் . அதை படிப்பவர்களுக்கோ கொலை செய்த குற்றம் தெரிவதை விட எப்படி அவன் அவளோடு தொடர்பு கொண்டான் என்ற சிந்தனை தான் இருக்கும் . உரிமை மீறல்கள் போர் குற்றங்கள் இவற்றை பதிவு செய்து மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் எண்ணம சற்றும் இல்லாமல் இருக்கின்றன .
இப்போது சானல் 4 தொலைக்காட்சியில் இலங்கை ராணுவத்தால் கற்பழித்து கொலை செய்த காணொளிகள் ஒளிபரப்ப பட்டன . கற்பிற்கு மரியாதை கொடுக்கும் தமிழ் சமூகத்தில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது என்றால் அதை செய்தவர்கள் மனித பிறவிகளாக இருக்க முடியுமா . கோவையில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்த கொடூரன் மீது ஏற்பட்ட கோபம் ஏழு தமிழ் பெண்களை உடம்பில் ஒரு துணி இல்லாமல் கொடூரமான முறையில் கொலை செய்த சிங்கள இனவெறியர்கள் மீது ஏன் வர வில்லை . காசுக்க்காகவும் பதவிக்காகவும் தமிழ் இனத்தையே காட்டி கொடுத்து என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என காட்டும் அரசியல் தலைவர்களும் தமிழ் சமுதாயத்தில் மட்டும் தான் இருக்க முடியும் .
உலகத்திலே மிக பெரிய அரக்கனாகவும் போர் குற்றவாளியாகவும் திகழும் மனித குலத்திலே சேர்க்க முடியாத சிங்கள இனவெறியன் ராஜபட்சே செல்லும் இடமெல்லாம் விரட்ட புலம் பெயர் தமிழர்கள் தயாராகி விட்டனர் . அதன் எதிரொலி தான் எதற்காக லண்டனுக்கு இந்த அரக்கன் சென்றானோ அதை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . இங்கிலாந்தில் புலி கொடியேந்தி போராட அந்நாட்டு காவல் துறை அனுமதி கொடுக்கிறது . ஆனால் தமிழர் பிரச்சனைக்காக தமிழர்கள் போராடினால் கைது செய்கிறது தமிழக அரசு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசு என்ன அரசு .
உலக மக்கள் பார்வையில் தூக்கிலிட பட வேண்டியவன் தான் இந்த ராஜ பட்சே . ஆனால் இந்திய அரசோ அவனை கவுரவ படுத்துகிறது . இங்கிலாந்து காவல் துறை ராஜ பக்சேவை கைது செய்யலாமா என ஆராய்ந்து வருகிறது . ஹிட்லர் , முசோலினி , இடி அமின் போன்ற சர்வாதிகாரிகளுக்கு அடுத்த படியாக அதை விட பல மடங்கு போர் குற்றங்கள் புரிந்த போர் குற்றவாளியை இந்தியாவில் கவுரவ படுத்தியது இந்தியாவிற்கே அவமானம் . சோனியாவிற்கு சோனியாவிற்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம் . ஏனெனில் முசோலினி பிறந்த மண்ணில் பிறந்தவள் தானே. தமிழர்களின் கலாசாரம் கற்பு பற்றி என்ன தெரியும் .
புலம் பெயர் தமிழர்களோடு தமிழக தமிழர்களும் ஓன்று பட்டு போராடினால் இன்னும் சில காலங்களில் தமிழ் பெண்களை கற்பழித்தும் போர் குற்றங்கள் புரிந்த சிங்கள இனவெறியர்களை தண்டிக்க முடியும் அதற்கான உதாரணம் தான் ராஜபட்சேவிற்கு தமிழர்களால் லண்டனில் ஏற்பட்ட அவமானம் . ஓடாத மானும போராடாத இனமும் நிம்மதியாய் வாழ முடியாது . இதே நிலை நாளை நமக்கும் வரலாம் . ஏன் காங்கிரஸ் தோழர்களுக்கு கூட வரலாம் .....
Subscribe to:
Posts (Atom)





