அதிமுகவும் திமுகவும் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்திற்கு இருண்டகாலத்தை உருவாக்கி விட்டன. உலக மகா ஊழல் செய்து உலகத்திலே எந்தவொரு ஆளுங்கட்சியும் கேவல படாத அளவிற்கு கேவல பட்டிருக்கும் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க ஓரணியில் திரண்டால் ஊழல் ராணியாக வலம் வந்து தோல்வி கொடுத்த வலியால் திருந்தியிருப்பார் என நினைத்தால் . நான் இப்படி தான் இருப்பேன் திருந்த மாட்டேன் என அடம் பிடிக்கும் ஆணவ ஆதிமுகவையும் எதிர் கட்சி வரிசையில் பார்க்க தமிழக மக்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
119 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவால் தனி பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியாது . மதிமுக இல்லாத அதிமுகவால் வெற்றி பெற முடியது . இதனால் தான் தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகளே அதிமுக கூட்டணியில் தொடர பயப்படுகின்றன. ஒருவேளை இவர்கள் சமரசம் ஆகி போனாலும் மதிமுக தலைமையில் மூன்றாவது அணி அமைவது உறுதியாகி விட்டது .
கருணாநிதி , ஜெயலலிதாவால் தமிழகம் சீரழிந்தது போதும் என்ற நோக்கில் வைகோ தலைமையிலான மூன்றாவது அணியை மக்கள் புரட்சி மூலம் ஏற்படுத்த வேண்டும் . மதிமுகவிற்கு மட்டுமல்லாது மாற்றம் விரும்பும் தமிழக மக்களுக்கு இது ஒரு வாய்ப்பு . அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் அவர்கள் நல்லாட்சி தருவார்கள் என்பதற்காக அதிமுகவை ஆதரிக்கவில்லை . கொடிய விசா கிருமிகளான திமுக மீண்டும் வெற்றி பெற்றால் தமிழகத்தை இந்த விசகிருமிகளால் மீட்க முடியாது என்பதற்காக ஆதரித்தால் . ஜெயலலிதாவும் விசத்தை கக்க தேர்தலுக்கு முன்பே தயாராகி விட்டார் .
இதே நிலையில் ஜெயலலிதாவின் ஆட்சி ஏற்பட்டால் இன்னும் தமிழகம் சீரழிக்க பட்டு விடும் . இரண்டு விசகிரிமைகளையும் அழிக்க வேண்டிய கடமை இப்போது வைகோவிற்கு இருக்கிறது . அதே நேரம் வைகோவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கடமை பொது மக்களாகிய நமக்கு இருக்கிறது .
தமிழின உணர்வாளர்களும் , நாளைய தமிழகம் வளம் மிக்கதாய் மாற வேண்டும் என நினைக்கும் நலம் விரும்பிகளும் வைகோவிற்கு உறுதுணையாய் களம் காண வேண்டும் . ஒருபுறம் திமுகவிற்கு எதிரான மிக பெரிய அலை இன்னொரு புறம் அதிமுக மீதான நம்பக தன்மை இந்த இரண்டிற்கும் நடுவில் மூன்றாவது அணி வரவேண்டும் என எங்கும் எண்ணற்ற மக்கள் இருக்கிறார்கள் .
எல்லா தேர்தலும் ஓன்று போல் இருப்பதில்லை எல்லா தேர்தல்களை விடவும் இந்த தேர்தல் இரண்டு கட்சிகள் மீது நம்பிக்கையற்ற வாக்காளர்கள் சதவீதம் பெருகி விட்டது . இது தான் சரியான தருணம் . மதிமுகவிற்கு இது ஒரு வாய்ப்பு அதே நேரம் தமிழக மக்களுக்கும் இது ஒரு மிக பெரிய வாய்ப்பு . காலம் கடந்து விட்டது என நினைத்து அருமையான சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாம் .
மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் ஆட்சி பிடிக்கும் முன்னர் அப்போதைய ஜனதா தளத்தோடு கூட்டணி உடன்பாட்டி 70 தொகுதிகள் கேட்டு கொடுக்காமல் கூட்டணியை விட்டு வெளியேறி தனி அணியில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்தது என்பது வரலாறு . அந்த வரலாறு மீண்டும் தமிழகத்தில் திரும்பும் துணிந்து வாருங்கள் கைகொடுக்க மக்கள் இருக்கிறார்கள் .
11 கருத்துக்கள்:
பார்ப்போம் சகா. வரும் காலம் வைகோவின் காலம்
eithai eluthiyathu yaru, peru podalayea, aruvu jeevi
இந்த சந்தர்பத்தை வைகோ தவறவிடுவது தமிழகத்துக்கு நல்லதல்ல அவர் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்பதில்லை ஒரு மாற்று இருக்கிறது என்பதை மக்களும் உணர்வார்கள் கடந்த முறை நமக்கு இருந்த வாய்ப்பு ஒரு சினிமா வசனகர்தா அவரை விட்டால் ஒரு நடிகை அதற்கு மாற்றாக இருந்தது மற்றொரு நடிகனே தவிர ஒரு குறிக்கோளுடன் இருக்கும் எந்த கட்சியும் நம்மிடம் இருக்கவில்லை. வெற்றி தோல்விகளை விடுத்து இதை அடுத்த கட்டத்துக்கான ஒரு முன்னோடியாகவே வைகோ கொள்ளவேண்டும்.
அன்புடன் வணக்கம் நண்பரே
ஒருமுறை வை. கோ... வுக்குதான் அதரவு கொடுத்து பார்ப்போமே!! நிச்சயமாக ஒரு அரசியல்வாதி!!! நடிகர் அல்ல ???
சினிமா சார்ந்த நாதாரிகள் நாட்டை குட்டி சுவராக்கியது போதும் !!!!இம்முறை போடுங்கள் உங்கள் ஓட்டை இவர் சார்ந்த கூட்டணிக்கே!![without jayalalithaa]please!!
வைகோ தனியா நின்னா ஓட்டு போட்ரலாம்யா..
20 முதல் 25 தொகுதிகள் வரை அதிமுக தர முன் வந்தால் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு மரண அடி கொடுக்க இறங்கி வரும் அதிமுகவோடு கூட்டணி வைக்கலாம் . அதை விட்டு விட்டு திமிர்த்தனம் கூடும் போது தனித்து களம காணலாம் . இப்போதைய நிலவர படி மூன்றாம் அணி என்றால் மதிமுக தனித்து போட்டியிடுவதாக தான் இருக்கும் . தோல்வியை பற்றி கவலை படாமல் மானத்தை பற்றி சிந்தித்து தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் ஆதரவு நிச்சயம் . அதிமுக திமுகவை விரும்பாத வாக்காளர்கள் இப்போது அதிகரித்துள்ளனர் . அவர்களை கவரும் விதமாக குறைந்த பட்ச செயல் திட்டங்களை முன்னரே அறிவித்து இரண்டு கட்சிகளுக்கு எதிரான ஒரு மாற்றம் தேவை என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் விதத்தில் பிரச்சாரம் அமைந்தால் கவுரவமான வெற்றி பெறலாம் .
இத்தனை குழப்பங்கள் நடந்த பின்னரும் அமைதி காத்து அனைவரையும் வென்ற உங்கள் நல்ல குணத்திற்கு நான் தலை வணங்குகிறேன் . இது வரை இப்படி ஒரு நாணயமான தலைவனை நான் பார்த்ததில்லை . நீங்கள் ஆட்சிக்கு வராதது உங்களது கெட்ட நேரம் இல்லை தலைவா . அது மக்களின் கெட்ட நேரம்
U Deserve To Win !!!
அது தான் மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே. நமக்கிருக்கும் தைரியம் கூட இவனுகளுக்கில்லையே
உஸ்....இன்னா இங்க சலம்பல். தன்மானத்தலைவன் தான் புரட்சித்தலைவியை விமர்சிக்ககூடாதுன்னு வாய்ப்பூட்டு போட்டுக்கறாரே? சும்மா இருங்க.. இரு 10 தொகுதி கெடைச்சா பத்தாதா? அதுல நிக்க ஆள் இருக்குதா?
அது தான் மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே. நமக்கிருக்கும் தைரியம் கூட இவனுகளுக்கில்லையே
/
அண்ணாத்தே...நீங்களும் , நானுமா காசு செலவு பண்ணி பிரச்சாரம் பண்ணுறோம்? அவுகதானே? அதான் பயப்படுறாக!
Post a Comment