Monday

உலகத்திலே கேவலமான இனமா தமிழினம் ?

இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தமிழன் உலகத்திலே கேவலமானவனா என நினைக்க தோன்றுகிறது . கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய   மூத்த குடி தமிழ் குடி என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்று நாம் படிக்கும் பாடங்களின் மூலமாகவும் .பெரியோர்களின் மூலமாகவும் நமது பெருமைகளை சொல்லியே நாம் வளர்ந்தோம் .

மிக பெரிய வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இனம் என்று சொல்லியே வளர்ந்த நாம் நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பவைகளை பார்க்கும் போது வரலாறு தவறாகஎழுதப்பட்டதா ? என சிந்திக்க தூண்டுகிறது . வீரத்தில் தமிழன் கலாச்சாரத்தில் தமிழன் கண்டுபிடிப்புகளில் தமிழன் இப்படி அதில் தமிழன் இதில் தமிழன் என்று சொல்லி நமக்கு நாமே பெருமையடித்து நிகழ் காலத்தை தவறவிட்டோம் . நிகழ் காலத்தில் தமிழன் என்று சொன்னாலே கேட்க யாருமற்று காணப்படுகிறது . ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து ஸ்ரீலங்கா விடுபட்ட நாளிலிருந்து ஈழ தமிழர்கள் சிங்கள ஆதிக்கத்தின் கீழ் கொடுமைபடுத்த பட்டனர்.

இருபது ஆண்டு காலம் சாத்வீக வழியில் சுதந்திரம் பெற்றுவிடலாம் என போராடிய மக்கள் மீது சிங்கள ஆதிக்கம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது .இளைஞர்கள் கொல்லப்பட்டனர் பெண்கள் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர் .ஒவ்வெரு நாளும் ஒவ்வெரு நொடியும் ஆதிக்க வர்க்கத்தினால்  படும் தொல்லைகளுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் துப்பாக்கி தூக்கினர் . ராணுவ அடக்கு முறையைக்கு எதிராக ஆயுத போராட்டங்களை துவக்கினர் . ராணுவ அடக்குமுறைக்கு எதிராக உருவான அமைப்பு தான் பிரபாகரன் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலை புலிகள் .

எத்தனை குழுக்கள் தோன்றினாலும் தான் கொண்ட லட்சியத்திலும் சமரசம் செய்யாமல் இருந்ததால் மக்கள் ஆதரவு பெற்று ஈழ தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் ஆனார்கள் விடுதலை புலிகள் . சிங்கள அரசிற்கு எதிராக மக்களும் விடுதலை புலிகள் பின்னால் அணி திரன்டதின்   விளைவாக தமிழ் ஈழ நில பரப்பில் 85 சதவீத நில பரப்புகள் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் வந்தது . அங்கு வாழும் மக்களுக்கு நல்ல ஒரு நிர்வாகத்தை கொடுத்தனர் விடுதலை புலிகள் .

இலங்கை தீவு என்பது ஒரு நாடு அல்ல இரண்டு நாடுகள் ஓன்று தமிழ் ஈழம் மற்றொன்று சிங்களம் ஆனால் சிங்கள தேசமோ தமிழர்களை சிங்களத்துடன் வைத்து கொண்டு கொத்தடிமை வாழ்க்கையை நடத்த நினைத்து தான் தமிழர் பூமி மீது ஆக்கிரமிப்பு போரை தொடுத்தது . அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற மோசமான முன்னுதாரணம் மூலம் போரை நிகழ்த்தியது . ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருப்புகள் மீது முப்படைகளாலும் தாக்குதலை தொடுத்தனர்  .

முதலில் மக்களின் சாவு எண்ணிக்கை தினம் நூறாக இருந்தது . பின்னர் படிப்படியாக ஆயிரத்தை தொட்டது . உலக நாடுகளின்  கண்கள் குருடாகி போயின . காதுகள் செவிடாகி போயின . தமிழன் தினம் தினம்  இறந்து  கொண்டேயிருந்தான் . பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்த போது  கண்டித்த உலக நாடுகள் தமிழர்கள் சாகும் போது  கண்டிக்க மறந்து விட்டனர் . அதன் உச்ச கட்டமாக முல்லிவைக்கால் பகுதியில் 25000 பேரை ஒரே நாளில் ரசாயன் ஆயுதம் மூலமாகவும் கனரக ஆயுதம் மூலமாகவும் கொன்றொழித்தது சிங்கள இனவெறி அரசு .

நிகழ் காலத்தில் எந்த ஒரு இனமும் இப்படி ஒட்டு மொத்தமாக கொல்லப்படவில்லை . சாட்சியே இல்லாமல் மக்கள் கொல்லப்பட்டதை விசாரிக்க வேண்டும் என மக்கள் இறந்த பின்னர் மேற்குலக நாடுகள் வந்தன ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை முன்மொழிந்த போது மனிதாபிமானமற்ற என் நாடு ( இந்தியா ) உட்பட பல நாடுகள் அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது . இதன் மூலம் இனி உள்   நாட்டில் எந்த இனத்தையும் பெரும்பான்மை மக்களால் உருவாக்கப்பட்ட அரசு கொலை செய்தாலும் இனி எந்த நாடுகளும் கேட்க முடியாதாம் .

3 கருத்துக்கள்:

வனம் said...

வணக்கம் சுரேஷ்

நானும் இந்தியா எனும் நாட்டின் பகுதியாக இருக்கும் தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து இருப்பவன்தான்.

சொல்லக்கூசுகின்றது என்றாலும் இன்னும் ஒரு பன்றிபோல் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்பதே சுமையாக இருக்கின்றது.

இலங்கை தமிழனுக்கு மட்டுமல்ல இந்த கெதி நமக்கும்தான்.

நேற்று இரவு கர்நாடகாவிலிருந்து நீலகிரி வந்த அம்மாநில பேருந்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர், அவர்கள் உடமைகள் பறிக்கப்பட்டன-- இன்று விஜய் செய்திகளில் பார்த்தேன், சில நாட்கள் முன்பு முல்லை பெரியாறு பகுதியில் தமிழக பொறியாலர்கள் கேரள மக்களால் தாக்கப்பட்டனர் இதுவும் செய்திதான் -- நமக்கும் (இந்தியத் தமிழனுக்கும்) அதே அடிமை வாழ்வும், கொண்றொழிக்கப்படப்போவதும் தூரத்தில் இல்லை

இராஜராஜன்

Suresh Kumar said...

வணக்கம் ராஜ ராஜன் அவர்களே இந்த நிலைக்கு காரணமே நாம் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வில்லை என்பதாக தான் இருக்கும்

ஆ.ஞானசேகரன் said...

//நிகழ் காலத்தில் எந்த ஒரு இனமும் இப்படி ஒட்டு மொத்தமாக கொல்லப்படவில்லை . சாட்சியே இல்லாமல் மக்கள் கொல்லப்பட்டதை விசாரிக்க வேண்டும் என மக்கள் இறந்த பின்னர் மேற்குலக நாடுகள் வந்தன ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை முன்மொழிந்த போது மனிதாபிமானமற்ற என் நாடு ( இந்தியா ) உட்பட பல நாடுகள் அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது . இதன் மூலம் இனி உள் நாட்டில் எந்த இனத்தையும் பெரும்பான்மை மக்களால் உருவாக்கப்பட்ட அரசு கொலை செய்தாலும் இனி எந்த நாடுகளும் கேட்க முடியாதாம் .//

கேட்கவே வெட்கமாக இருக்கு

Post a Comment

Send your Status to your Facebook