வேலை நிறுத்தம் காரணமாக இங்குள்ள350 க்கும் மேற்பட்ட விசை படுகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை .
இன்று தியாகி முத்துக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கிறது . இதில் பெரும்பாலான தமிழின உணர்வாளர்களும் , மாணவ, மாணவிகளும் ,அரசியல் கட்சி தலைவர்களும் , இளைஞர்கள் , வழக்கறிஞ்சர்கள்பெரியோர்கள் , சிறியோர்கள் என பெரும்பாலான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .
முத்துக்குமார் தன் உடலில் கொளுத்திய தீயானது இன்று ஒவ்வெரு தமிழனின் மனதிலும் கொழுந்து விட்டு எரிகிறது . தமிழகம் இன்று ஓன்று சேர்ந்து இந்தியாவையும் இலங்கையையும் எதிர்த்து வருகிறது .
இலங்கை பாதுக்காப்பு இயக்கத்தின் சார்பாக பெப்ருவரி 4 ஆம் தேதி ( இலங்கையின் சுதந்திர தினம் ) தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் அறிவிக்க பட்டுள்ளது . இதில் அனைத்து தமிழர்களும் கலந்து கொண்டு நம் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்த வேண்டிய நேரம் .
வெல்லட்டும் தமிழ் ஈழம். முத்துக்குமாரின் எண்ணம் ஈடேறட்டும். Tweet
1 கருத்துக்கள்:
//12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99//
பகைவருக்கும் பாதுகாப்பு கேட்கிறாயேட
தமிழச்சிக்கு பிறந்தவனே உன்னை என்ன சொல்வேன்
"ஐயோ கொடுமையே மாரில்அடித்து அழுதுகொண்டிக்கின்றோம்"
நாலு நாள் உன் வீரமரணச்செய்தியை பேசி அப்புறம் ஒய்ந்து விடுவிடுமடா நம்கூட்டம்...
பிணத்தின் வாய்கரிசியைகூட விடாது நோண்டித் தின்றுபிழைக்கம் அரசியல் வாதிகளும்...
அதிகார துஷ்பிரோயகம் செய்யும் எங்கள் வரிப்பணத்தில் வாழும் லஞ்ச லவன்ய அதிகாரிகளும்
மிரட்டித்திரியும் கட்டப்பஞ்சயத்து கைகூலிகலும் என்று மறையம் என் நாட்டிலிருந்து
என்றுதனியும் இந்த தாகம்....
Post a Comment