Thursday

போர்களமாகும் தமிழகம்

இலங்கையில் ஈழ தமிழர்களை திட்டமிட்டு கொலை செய்யும் சிங்கள அரசையும் அதற்கு துணை போகும் இந்திய மத்திய அரசையும் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன .

ஈழத்திலே போராளிகள் ராணுவத்திற்கு எதிராக தங்கள் உயிரை கொடுத்து போராடி வருகின்றனர் . ஆனால் இலங்கை அரசானது அப்பாவி மக்கள் மீது ஏவுகணைகளை வீசியும் , பீரங்கி தாக்குதல்கள் மூலமும் கொலை செய்து வருகிறது . கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் . அதுவும் பாதுகாப்பு வளையங்களில் தஞ்சம் புகுந்த மக்களே ஆவார்கள். மேலும் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இலங்கை அரசு மருந்து பொருட்களுக்கு கூட தடை விதித்திருக்கிற வேளையில் வன்னியில் மிக பெரிய மனித அவலம் ஏற்பட்டுள்ளது . இந்த மிகப்பெரிய மனித அவலத்திற்கு இந்திய அரசு துணை போவது தான் மிகவும் வேதனையாக உள்ளது . இந்திய அரசின் பச்சை துரோகத்தை பலமுறை போராட்டம் வாயிலாகவும் வலியுறுத்தியும் மத்திய அரசு மீண்டும் மீண்டும் இலங்கை அரசுக்கு ஆயுதம் மற்றும் கடன் உதவிகளை செய்து வருகிறது .

பல கோணங்களில் போராடியும் மத்திய அரசு செவி சாய்க்காத வேளையில் அரசியல் சார்பற்று மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . செங்கல் பட்டு சட்ட கல்லூரி மாணவர்கள் முதலில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர் . சேலத்தில் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் , 2வது நாளாக தொடர்கிறது . கடலூரில் அரசு கலைக் கல்லூரியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் அரசியல் வேறுபாடுகளின்றி நடைபெறுகிறது . சென்னையில் முத்துக்குமார் என்ற ஒரு பத்திரிக்கை நிருபர் சாஸ்திரி பவன் முன்பு இந்திய அரசையும் தமிழக அரசையும் கண்டித்தும் , இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தியும் தீக்குளித்தார் . உடல்கள் வெந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இதையடுத்து தமிழகம் முழுவது பரபரப்பு காணப்படுகிறது . இந்திய அரசின் தமிழின விரோதத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் வெடிக்கிறது . இது மிக பெரிய மக்கள் புரட்சியாக மாறியுள்ளது .

இந்த மக்கள் புரட்சியானது அரசியலுக்கு அப்பாற்பட்டது இதில் ஒவ்வெரு தமிழனும் தன் பங்கிற்கு ஏதாவது ஒருவகையில் போராடுகிறான் . இத்ற்கு அரசு என்ன பதில் சொல்ல போகிறது . முத்துக்குமாரின் உயிருக்கு யார் பதில் சொல்வது .

5 கருத்துக்கள்:

Anonymous said...

என் பதிவில் செய்தது போல சில விஷமிகள் , அனானி பெயரில் வந்து சைபர் க்ரைமில் உங்கள் தளம் பற்றி புகார் கொடுத்துள்ளேன் என்று மிரட்டி அப்படியும் பதிவு நீக்கப்படாமல் இருந்தால்.. பதிவை கைப்பற்ற முயலக்கூடும்.. இதுகள் அனானி பெயரில் வந்தால் யாரு என்று தெரியாதா என்ன..

முரளி

Anbu said...

காலன் தன் தமிழன் உயிரை பறித்தாலும் , காலம் தான் இந்த மதி கெட்ட மந்தி(ரி) களுக்கு தக்க பதில் சொல்லும்.

அன்புடன்,
அன்பு

Suresh Kumar said...

என் பதிவில் செய்தது போல சில விஷமிகள் , அனானி பெயரில் வந்து சைபர் க்ரைமில் உங்கள் தளம் பற்றி புகார் கொடுத்துள்ளேன் என்று மிரட்டி அப்படியும் பதிவு நீக்கப்படாமல் இருந்தால்.. பதிவை கைப்பற்ற முயலக்கூடும்.. இதுகள் அனானி பெயரில் வந்தால் யாரு என்று தெரியாதா என்ன.. //////////////


அருமை முரளி அவர்களே என்ன இருந்தாலும் நீங்களும் உங்க பதிவோட பெயரில் வரவில்லையே .

Suresh Kumar said...

அன்பிற்குரிய அன்பு அவர்களே .

மந்திரிக்களுக்கு மதி இல்லை என்பதை விட அவர்களின் மதியை பயன்படுத்தி நம்மை முட்டாள் ஆக்குகிறார்கள் இது தான் உண்மை . ஏனெனில் அவர்கள் அதி புத்திசாலிகள்

Anonymous said...

மாணவரால் ஆட்சிக்கு வந்த தி.மு.க். இன்று
காங்கிரசை விட்டு வெளியே வந்தால் அனைத்துத்
தமிழினமும் பாராட்டும்.
ஆட்சி போனாலும் மீண்டும் அமோக வெற்றி பெரும்.

இன்னும் காங்கிரசுக்கு வால் பிடித்தால் மானம்,மரியாதை,பதவி எல்லாம் போய்விடும்.
தமிழர்கள் காரித் துப்புவார்கள்.

Post a Comment

Send your Status to your Facebook