Monday

இந்தியா தான் போரை நடத்தியது என மக்களுக்கு புரிய வைத்த கருணாநிதி

திருத்தம்

இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவிக்கவில்லை இன்னும் விடுதலை புலிகள் கட்டு பாட்டில் ஆறு கிலோ மீட்டர் பரப்பளவே இருப்பதால் கனரக ஆயுதம் பயன் படுத்த மாட்டோம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இன்று காலை முதல்வர் கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதத்தை துவக்கினார் . ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிங்கள இனவெறி அரசு தமிழர்களுக்கு எதிரான  ஒரு  இனவெறி போரை நடத்தி வந்தது .

ஈழத்திலே நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான போரை இந்தியா தான் முன்நின்று நடத்தி வருவதாக பல தலைவர்கள் குற்றம் சாட்டினர் . அது இப்போது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது . கருணாநிதி உண்ணாவிரத நாடகம் துவங்கிய சில மணி நரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக சிதம்பரம் கருணாநிதியிடம் சொன்னதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது .

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் வலியுறுத்தி வந்த போர் நிறுத்தத்திற்கு காங்கிரஸ் அரசும் திமுக அரசும் எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்காமல் இருந்து வந்தது . மாறாக ஆயதங்களை கொடுத்ததும் ஆலோசனைகளை கொடுத்ததும் இலங்கை ராணுவத்திற்கு உறுதுணையாக இருந்து வந்தது காங்கிரஸ் அரசு .

இப்போதாவது போர் நிறுத்தம் முழுமையாக  கடைபிடிக்கப்பட்டால் நமக்கு சந்தோசம் தான் . ஆனால் இதை பல்லாயிரகணக்கான அப்பாவி தமிழ் மக்கள் சாகும் முன்னால் செய்திருக்கலாமே . இன்று நடந்தவைகளை பார்க்கும் போது இந்தியா தான் போரை நடத்தியது என நிரூபணம் ஆகி விட்டது . பின்னர் ஏன் இத்தனை தமிழ் மக்கள் செத்தார்கள்  .

கொழும்பில் தேர்தல் முடிந்தது மகிந்தா கட்சி வெற்றி பெற்றது போரை நடத்தியதால் . இங்கே தேர்தல் துவங்கியது சோனியா போரை நிறுத்தினார் .
இந்நிலையில்

தரை, கடல் வழியாக பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய படையினர் கடும் முயற்சி: பலமுனை முன்நகர்வை எதிர்த்து புலிகள் கடும் சமர்

10 கருத்துக்கள்:

நளன் said...

நண்பரே போர் இன்னும் நின்றபாடில்லை. கருணாநிதியின் துரோக நாடகதில் நீங்களும் மயங்கிட வேண்டாம்... இலங்கை அரசிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வராத நிலையில், பொருத்திருப்பதே சரி!!!

Selva said...

இந்திய ஊடகங்கள் தான் போர்நிறுத்தம் என்று சொல்கின்றதே தவிர வேறெந்த ஊடகங்களிலும் இல்லை. மீண்டும் ஒரு நாடகம் அப்பட்டமாக படுதோல்வி அடைந்துள்ளது. உண்மையிலேயே ஒருகணம் சந்தோசப்பட்டேன் ஆனால் அதை பொய்யாக்கி விட்டார் கருணாநிதி. இந்திய ஊடகங்கள் எப்பொழுது தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுவதிலிருந்து வெளிவரப்போகுதோ தெரியவில்லை.

Anonymous said...

போர் நிருத்த்தமில்லையாம் கனரக ஆயுதம் மட்டும் பயன் படுத்த மாட்டார்களாம் இது மிக பெரிய நாடகம்

supersubra said...

visit these links

http://www.news.lk/index.php?option=com_content&task=view&id=9366&Itemid=44

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29193

supersubra said...

Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion.

what do they mean by it and what is there to celebrate by karunanidhi

Suresh Kumar said...

நளன் April 27, 2009 1:51 PM

நண்பரே போர் இன்னும் நின்றபாடில்லை. கருணாநிதியின் துரோக நாடகதில் நீங்களும் மயங்கிட வேண்டாம்... இலங்கை அரசிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வராத நிலையில், பொருத்திருப்பதே சரி!!!//////////


கனரக ஆயுதங்களை மட்டும் தான் பயன் படுத்த மாட்டோம் என இலங்கை அரசு அறிவித்துருக்கிறது . போர் நிறுத்தம் செய்யவிலை முன்னர் போல் கருணாநிதி மிக பெரிய நாடகத்தை அரங்கேற்றி விட்டார் .

Suresh Kumar said...
This comment has been removed by the author.
Suresh Kumar said...

Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion.

what do they mean by it and what is there to celebrate by karunanidhi /////////////


இன்றும் இரண்டு முறை விமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் .

கருணாநிதி நல்ல ஒரு நாடகத்தை நடத்தி விட்டார்

யாழ்ப்பாணத்திலிருந்து கவின் said...

இந்திய ஊடங்களை விடுத்து செய்து பாருங்க...கொஞ்சமாவது உண்மை புரியும்....சுகந்திரம் கிடைத்து 40 வருடமா காங்கிரஸ்காரன் ஏமாத்திற இன்னுமா நீங்க புரிஞ்சுக்கல....இந்த முறை ஆட்சிக்கு வந்துதான் நாட்டுக்கு நல்லது செய்யப்போறானா காங்கிரஸ்காரன்..அவனுக்கு ஜால்ரா போடுறான் தி.மு.க காரன்....சே...கேவலமாயிருக்கு.

Suresh Kumar said...

யாழ்ப்பாணத்திலிருந்து கவின் April 27, 2009 3:17 PM

இந்திய ஊடங்களை விடுத்து செய்து பாருங்க...கொஞ்சமாவது உண்மை புரியும்....சுகந்திரம் கிடைத்து 40 வருடமா காங்கிரஸ்காரன் ஏமாத்திற இன்னுமா நீங்க புரிஞ்சுக்கல....இந்த முறை ஆட்சிக்கு வந்துதான் நாட்டுக்கு நல்லது செய்யப்போறானா காங்கிரஸ்காரன்..அவனுக்கு ஜால்ரா போடுறான் தி.மு.க காரன்....சே...கேவலமாயிருக்கு. //////////////////

கருணாநிதி இப்போது போட்ட நாடகத்தை போல் எந்த ஒரு முதல்வரும் போட மாட்டார்கள் . மீண்டும் மீண்டும் தமிழினத்திற்கு துரோகம் செய்கிறார் . நன்றி உங்கள் கருத்திற்கு

Post a Comment

Send your Status to your Facebook