Saturday

கே பி கைது ( கடத்தல் ) மௌனம் காட்டும் தமிழினம்

விடுதலை புலிகளுக்கான சர்வதேச விவகாரங்களுக்கான தலைவரும் சமீபத்தில் விடுதலை புலிகளால் அறிவிக்கப்பட்ட தலைவருமான செல்வராஜா பத்மநாதனை சிங்கள இனவெறி அரசு மலேசியாவிலிருந்து கடத்தியிருக்கிறது .

முதலில் தாய்லாந்தில் கைது செய்ததாக சொல்ல பட்டு பின்னர் தாய்லாந்து பிரதமரால் மறுக்க பட்டது . மிக பெரிய சூழ்ச்சியின் மூலம் பத்மநாதனை கைது செய்திருக்கிறது சிங்கள அரசு . விடுதலை புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக்க பட்ட பின்னர் அமைதி வழியில் போராடுவோம் என அறிவித்தார் பதமநாதன் . தமிழர்களின் போராட்ட வடிவம் தான் மாறியிருக்கிறது லக்கு மாறவில்லைஎன்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முழு மூச்சுடன் செயல் பட்டு வந்தார் .

மூன்று லட்சம் மக்களை முட்கம்பிகளின் பின்னால் அடைத்து வைத்திருக்கும் சிங்கள இனவெறி அரசு அவர்களை மீள் குடியமர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழர்கள் ஓரணியில் திரண்டு விட கூடாது . தமிழர்களுக்கு சம உரிமை வழங்க கூடாது என்ற இனவெறி மனப்பான்மையோடு சிங்கள அரசு நடந்து வருகிறது . போர் முடிந்து இரண்டு மாதங்கள் ஆன பின்னரும் தமிழர்களுக்கு சரியான ஒரு தீர்வு திட்டத்தை முன் வைக்காமல் தமிழர்களை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது சிங்கள இனவெறி அரசு .

சரணடைந்த போராளிகளை துன்புறுத்துவதும் கொலை செய்வதுமாக சிங்கள இனவெறி அரசு நடத்தி வரும் கொடுரங்களுக்கு மத்தியில் பத்தமநாதனை கைது செய்தது மிக பெரிய கொடுரம் . தமிழர்களுக்கு தலைவர்களே இருக்க கூடாது என்று திட்டமிட்டு சிங்கள அரசு செயல் பட்டு வருகிறது . இத்தனை கொடூரங்களுக்கு மத்தியிலும் தமிழினம் மௌனமாகவே இருந்து வருகிறது .

ஐக்கிய நாடுகள் சபையும் , உலக நாடுகளும் தமிழர்களை கைவிட்ட நிலையில் தமிழர்களாகிய நாம் தான் ஓன்று பட்டு போராட வேண்டும் . முத கம்பிகளுக்குள் அடிபட்டு கிடக்கின்ற மக்களை விடுவிக்க கோரியும் சரணடைந்த போராளிகளை விடுவிக்க கோரியும் விடுதலை புலிகளின் தலைவரை விடுவிக்க கோரியும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும் .


சோகமே வாழ்க்கையாகி போன தமிழினமே
சோம்பலை முறித்து எழு
விடியல் வரவில்லையென்று
இருட்டே வாழ்க்கையென்று படுத்து விடாதே
போராடு விடியல் வரும் ஒரு நாள்

6 கருத்துக்கள்:

சாந்தி நேசக்கரம் said...

ஆளையாள் காட்டிக் கொடுப்பில் இருக்கும் முக்கியமானவர்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்து காட்டிக்குடுப்பை நிறுத்தினால் தான் தமிழினத்துக்கு ஒரு நல்வழிக்கான பாதை திறபடும்.அதுவரை இத்தகைய கடத்தல் கைதுகள் நடைபெறுவதை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது.
சாந்தி

sakthi said...

கேட்பதற்கு ஆள் இல்லை என்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கும்

S.A. நவாஸுதீன் said...

கிளைகளை வெட்டிவிட்டு வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். வேர்கள் அப்படியேதான் இருக்கிறது என்பதை மறந்த நிலையில்

ஆ.ஞானசேகரன் said...

//மூன்று லட்சம் மக்களை முட்கம்பிகளின் பின்னால் அடைத்து வைத்திருக்கும் சிங்கள இனவெறி அரசு அவர்களை மீள் குடியமர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழர்கள் ஓரணியில் திரண்டு விட கூடாது . தமிழர்களுக்கு சம உரிமை வழங்க கூடாது என்ற இனவெறி மனப்பான்மையோடு சிங்கள அரசு நடந்து வருகிறது//

உண்மைதான் நண்பா... நானும் இன்றுதான் முழு செய்திகளையும் அறிந்தேன்.. கேட்பார் இன்றி இருப்பதால்தான் இந்த நிலைமை... இந்நிலையில் கூட இந்தியா தலையிடாமல் இருப்பது நல்லதல்ல என்றே தோன்றுகின்றது... ம்ம்ம் பார்க்கலாம்

கார்த்திக் said...

இந்தவிடயத்தில் இந்தியா (இப்போதாவது) தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும்..

vasu balaji said...

சர்வ தேச தொண்டு நிறுவனங்களால் முடியாதது சாமியார்களால் முடிகிறது. உதவுகிறேன் பேர்வழி என்று கொட்டிக் கொடுக்காமல் இறந்த மக்களை காப்பாற்றத் தான் தவறினோம். இருக்கும் மக்களுக்காவது அடிப்படைத் தேவைகளை நேரடியாக நாமே செய்கிறோம் என்ற நிலைப்பாடு எடுத்தால் தெரிந்துவிடும் வண்டவாளம். நெடுமாறன் ஐயா, வைகோ, சீமான், தந்தை பெரியார் கழகம் ஆகியோர் இயன்ற அளவில் முன்னெடுக்கும் போராட்டமும் இல்லா விட்டால் ஈழமா, தமிழா என்னாச்சு என்று கேட்கும் கேவலமான நிலமையிலல்லவா இருக்கிறோம்.

Post a Comment

Send your Status to your Facebook