Friday

கம்யூனிஸ்ட் களுக்கு இது தேவையா ?

இன்று நடைபெற்ற இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்பட்டது போல் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . வழக்கம் போல் கருணாநிதி இது மத்திய மாநில அரசுக்கு கிடைத்த வெற்றி என சொல்லியிருக்கிறார் .

இந்த இடைதேர்தலில் எந்தவொரு சலசலப்பும் இன்றி அமைதியாக தேர்தல் நடைபெற்றது . அதிமுக , மதிமுக , பமாக போன்ற எதிர் கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நாளிலே எழுதப்பட்ட தீர்ப்பு தான் திமுகவின் வெற்றி . தேர்தல் என்பது வெற்றி தோல்வி சகஜம் தான் ஆனால் திமுக ஆட்சி காலத்தில் தேர்தல் என்பது மக்கள் தீர்ப்பிலிருந்து மாறி பறிக்க பட்ட ( பிடுங்கப்பட்ட ) தீர்ப்பாகதான் இருக்கிறது .

இதை கண்டித்து தான் அதிமுக தேர்தலை புறக்கணித்தது கூட்டணி கட்சிகள் என்ற முறையில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேர்தலை புறக்கணித்து ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்க வேண்டும் . அதிமுக தேர்தலை புறக்கணித்தது ஒரு வகையில் கசப்பான அனுபவம் என்றாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டதும் ஒரு கசப்பான அனுபவம் தான் .

அனைத்து தொகுதிகளிலும் திமுக அதிக வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான் . ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக பிரசங்கி தனமாக தேர்தலில் போட்டியிட்டு ஐந்து ஆயிரம் வாக்குகள் கூட பெற முடியாத நிலைமையை நினைக்கும் பொது அப்போதே கவுரவமாக போட்டியிடாமல் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது .

தேர்தல் கமிஷனும் முதலிலே இப்படியொரு செலவுகளை குறைக்கும் வண்ணமாக திமுக கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கலாம் . தேவையற்ற செலவுகளை குறைத்திருக்கலாம் . எப்படியோ ஒரு வழியா இடைதேர்தல் முடிந்ததது முடிவுகளும் அறிவித்து விட்டார்கள் இதிலேயும் வெற்றியை கொண்டாட தொண்டர்கள் . என்னவோ தெரியலா இதுவும் ஜனநாயகமா ?



படம் : ஆண்த்ரோ பிளாக்ஸ்

8 கருத்துக்கள்:

பித்தன் said...

s ur right....!

நையாண்டி நைனா said...

Let them to test their power and unity.

வால்பையன் said...

தோத்து போயிருவோம்னு யாரும் போட்டியிடலைனா ஏன் ஜனநாயக நாடுன்னு பேர் நமக்கு!

Suresh Kumar said...

வால்பையன் on August 21, 2009 7:28 PM said...
தோத்து போயிருவோம்னு யாரும் போட்டியிடலைனா ஏன் ஜனநாயக நாடுன்னு பேர் நமக்கு!///////////


ஜனநாயகமே பெயரளவில் தானே இருக்கிறது நமது நாட்டில்

Anonymous said...

unakal vimarzanam sakikkal atha vida mozham intha coortune. vzhaga captalisam

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நமக்கெல்லாம் எதுக்கு தேர்தல்.

பணத்த கொடுத்துட்டு பதவியை எடுத்துகிட்டு போனாங்கன்னா பேஷா இருந்துடலாம். ஓட்டு போட்டு கிழிச்சது போதும்னு.

vasu balaji said...

சரியாச் சொன்னீங்க‌.உங்களுக்கொரு சின்ன விருது. விவரங்கள் நம்ம திண்ணையில‌ http://paamaranpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.html

கலையரசன் said...

ஒத்துகிறேன்.. நீ்ங்களும் ஜீப்புல ஏறலாம்!

Post a Comment

Send your Status to your Facebook