Friday

அரசனை நம்பி புருசனை கைவிட்ட திமுக

தமிழகத்தில் திமுகவின் நான்காண்டு சாதனைகளை சொல்லி கொண்டே போகலாம் என உடன் பிறப்புகள் தங்களுக்குள் மகிழ்ச்சி பொங்க பேசி கொண்டிருக்கிறார்கள் . கடந்த ஒரு வார காலமாக உடன் பிறப்புகளுக்கு எங்கு சென்றாலும் என்ன உங்களை இந்த பக்கம் காணவே இல்லை அந்த குரல்களோடு சிலர் அழைத்து என்னையா இது ஒன்னு ரெண்டு கோடியா ....................? எவ்வளவுயா? உனக்கு ஏதாவது ......?  இப்படியே தான் மக்களின் பேச்சுக்கள் இருக்கின்றன . 

நான்கு ஆண்டுகளில் திமுக என்ன சாதித்தோ இல்லையோ அதுவல்ல ஆனால் இந்தியாவில் மட்டுமல்லாது உலகத்திலே மிக பெரிய ஊழலாக கருத படும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலால் ஒரு கெட்ட பெயர் உருவானது என்னவோ உண்மை . பதவி வேண்டும் என்றால் யார் காலிலும் விழுந்து யாரை வேண்டுமானாலும் காட்டி கொடுத்து வாழும் காலமாக இந்த காலம் மாறிவிட்டது . மனிதாபிமானமோ ,கொள்கையோ , இரக்கமோ , தொலைநோக்கு பார்வையோ சிறிதும் இல்லாமல் போய்விட்டது . தமிழகம் உணர்வற்ற மாநிலமாக மாறிவிட்டது . அதன் விளைவு உலகத்திலே மிக பெரிய ஊழல் செய்தவன் தமிழன் என்ற பெயர் கிடைத்திருக்கிறது . மக்களின் எண்ணங்களோ சில்லறைக்கு ஆசைப்பட்டு ருபாய் நோட்டுகளை தொலைப்பதை போலாகி விட்டது . சிந்திக்கும் ஆற்றல அற்று போய் விட்டது .
திமுகவின் இந்த நான்கு ஆண்டு காலங்களில் தமிழர்கள் தங்கள் உரிமைகளை தொலைத்தது ஏராளம் . அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையை பதவிக்காக விலை பேசி விட்டது . காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் அமைச்சர் பதவி மட்டும் போதும் அதன் மூலம் நாங்கள் பிழைத்து கொள்ளலாம் என இருந்த விளைவு தான் . முல்லை பெரியாறு மீதான நமது உரிமை பறி போய் கொண்டிருக்கிறது . காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போகிறது . காங்கிரஸ் தலைமையிலான அரசின் மூலம் திட்டமிட்டு நடத்த பட்ட தமிழர்கள் அழிப்பின் போது கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது தான் திமுக அரசு . 

மீனவர்கள் நலனை பாதிக்கும் சட்டங்கள் கொண்டு வந்த போதும் ஆதரவளித்து கொண்டிருந்தது . சிங்கள கடற்படையினால் தமிழக மீனவர்கள் சுட பட்ட போது தடுக்க்கவுமில்லை தட்டி கேட்கவுமில்லை . ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்ன ஆனது என்றே இதுவரை தெரியவில்லை . ரேசன் கடைகளில் அரிசி ஒரு ருபாய் மற்ற அனைத்து அடிப்படை பொருட்களும் பல மடங்கு விலையேற்றம் . இன்று நடுத்தர மக்களே வீடு கட்ட முடியாதவாறு கட்டுமான பொருட்களின் விலையேற்றம்  இருக்கும் போது ஏழை மக்களின் நிலை என்ன? 



பதவி சுகங்களை தவிர மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற ஒரு ஆட்சி இன்று மக்களால் புறக்கணிக்க கூடியதாக இருக்கிறது . ராஜாவின் ஊழலால் ஓட்டு மொத்த தமிழகமே தலை குனிய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.  சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசோ இத்தனை நாளும் கலைஞரால் என்ன சாதிக்க முடியுமோ அதை சத்தமின்றி நாய்க்கு பிஸ்கட் கொடுத்தது மாதிரி மந்திரி பதவிகளை கொடுத்து விட்டு காரியத்தை சாதித்து விட்டார் . எல்லாம் முடிந்த பின்னர் ராஜாவையும் கழற்றி விட்டு விட்டார் . இன்று கலைஞரின் ஒரே நினைவுகள் காங்கிரஸ் நம்மை விட்டு பிரிந்து விடுமோ ? என்பது தான் அதை தான் செல்லுமிடமெல்லாம்  தன் ஏக்கங்களை பதிவு செய்து கொள்கிறார் .  மக்கள் மீது அக்கறையின்றி  நடக்கும் இந்த அரசு  அரசனை நம்பி புருசனை கை விட்ட கதை  போலாகி விட்டது .

2 கருத்துக்கள்:

வசந்தத்தின் தூதுவன் said...

மன்மோகனும், சோனியாவும் அமைதியாக இருக்கிறதைப் பார்க்கும் போது சரி பாதி அங்கேயும் போயிருக்கும் போலத் தெரியுது.
பொருளாதார மேதை(?) மன்மோகனுக்கு அரசு பணம் கொள்ளை போவது தெரியாதாமாம். இல்லையென்றால் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்க எவ்வளவு வாங்கினார்கள். காங்கிரசு அரசும் பதவி விலகுவதே சரியான முடிவாயிருக்கும்.

rajan said...

முதலில் மஞ்சள் துண்டை வீட்டுக்கு அனுப்புங்கோ.அப்போ தான் தமிழ் நாடு உருப்படும்.தி.மு.க,மற்றும் அ.தி.மு.க,பா.ம,க,காங்கிரஸ்,இல்லாத கட்சிக்கு மக்கள் வோட்டு போடணும்.நம்ம முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து இருக்குனு விசாரிக்கணும்.தமிழ் நாட்டுல ஒரு புரட்சி வெடிக்கனும் அப்போ தான் மற்ற மாநில அரசியல் வாதிகளுக்கு புத்தி வரும்.கஷ்டபடுறவன் யாரும் அரசியலுக்கு வருவதில்லையே.கோடிஸ்வரங்கள் தான வராங்க.நம்ம மக்கள் இலவசத்த பாத்ததுமே ஆ நு வாயபோலந்துட்டு வோட்ட அங்க போட்டுறாங்க.முதல்ல ஜனங்க திருந்தனும்

Post a Comment

Send your Status to your Facebook