கிராமங்களில் திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கும் வடம் இழுத்தல் போட்டி நடைபெறும் அதே போல் யானையும் 30 பெரும் என்றும் வடம் இழுத்தல் போட்டிகள் நடைபெறும்.
தமிழ் நாட்டிலேயும் ஏற தாள வடம் இழுத்தல் போட்டி போல தான் இரண்டு அணிகள் தேர்தலில் களம் காண இருக்கின்றனர். ஏப்ரல் 13 ஆம் தேதி போட்டி நடத்தி முடிவுகளை மே 13 இல் தெரிவிக்க இருக்கிறார்கள் . அதுவரை யாருக்கு தான் பொறுமை இருக்கும் இப்பவே முடுவு தெரிஞ்சிக்கணும் போல இருக்கும் . ஆனால் தெரிஞ்சாலும் நல்லா இருக்காது . ஆளாளுக்கு கணிப்பு போடுறாங்க . நானும் என் பங்குக்கு கணிப்பு போடலனா வரலாறு மன்னிக்காது .
ஆனந்த விகடன் கருத்து கணிப்பை துவங்கியது முதல் காங்கிரஸ் கட்சியின் உளவு தகவல் மூலம் வெளிவந்த கருத்து கணிப்பு வரை வந்து விட்டது . அதை தொடர்ந்து பதிவாளர் வட்டங்களில் கருத்து கணிப்புகள் பரவலாக வந்து கொண்டிருக்கிறது . இந்த தேர்தல் முடிவுகளை சரியாக கணிக்க வேண்டும் என்றால் கடந்த சட்ட மன்ற தேர்தல் , நாடாளுமன்ற தேர்தல் போன்றவற்றை அலசி பார்க்க வேண்டும் . தேவை பட்டால் அதற்கு முந்திய நாடாளுமன்ற தேர்தலையும் பார்க்கலாம் .
கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்து திமுக கூட்டணி வெற்றி பெற்று திமுக தனிபெரும்பான்மை இல்லாத ஒரு ஆட்சியை அமைத்து . அதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக ,காங்கிரஸ் ,மதிமுக , கம்யூனிஸ்ட்கள் , பாமக போன்ற கட்சிகள் போட்டியிட்டு எதிரணியில் இருந்த அதிமுக பிஜேபி கூட்டணியை பூஜ்ஜியம் வாங்க வைத்து . இது ஒருவகையில் அதிமுக மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு அலை . அதே அலையில் தான் கடந்த சட்ட மன்ற தேர்தலை திமுக எதிர் கொண்டது . அப்போது திமுக கூட்டணியிலிருந்து மதிமுக பிரிந்து அதிமுகவோடு கூட்டணி அமைத்து . அதுவரை திமுக மிக பெரிய வெற்றி பெரும் 200 க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெரும் என இருந்தது . மதிமுக கூட்டணி மாறிய பின்னர் அதிமுக பக்கம் வெற்றி காற்று வீசுவது போல் இருந்தது . பின்னர் திமுக தனிபெரும்பான்மை இல்லாத ஒரு ஆட்சியை தமிழக வரலாற்றில் முதன் முறையாக அமைத்து .
மிக பெரிய கூட்டணி என்று சொன்னவர்கள் எல்லாம் தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் ஆடி போனது என்னவோ உண்மை . இந்த இரண்டு கூட்டணிகளுக்கும் வாக்கு வித்தியாசம் வெறும் 3 சதவீதம் தான் . பாதிக்கு மேல் தொகுதிகளில் 1000 வாக்கு வித்தியாசத்தில் திமுக அணி வெற்றி பெற்றது . பெரும்பாலான தொகுதிகளில் திமுக அணிக்கு போஸ்டல் ஓட்டுகளே கைகொடுத்து .
அடுத்து நாடாளுமன்ற தேர்தல் அந்த நேரம் ஸ்பெக்ட்ரம் ஊழல் இருந்தாலும் இப்போது மக்களுக்கு தெரிந்த அளவில் பிரபலம் ஆகவில்லை . நாடாளுமன்ற தேர்தல் என்பதால் மக்கள் தேசிய அளவில் அணிகளை மதிப்பீடு செய்வார்கள் அதன் படி காங்கிரஸ் அணிக்கு எதிரான அணி எல்லா மாநிலங்களிலும் உருவாக வில்லை . தமிழகத்தில் போட்டியிட்ட அணி தேசிய அளவில் மூன்றாவது அணியாக இருந்தது . மூன்றாவது அணி ஆட்சிக்கு வராது என்பது பாமரனுக்கும் தெரியும் . அந்தவகையில் தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது . இருந்தும் வாக்கு சதவீதத்தில் பெரிய மாற்றம் இல்லை .
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது திமுகவிற்கு எதிரான வாக்குகளை தேமுதிக கணிசமாக பெற்றது அதிமுகவிற்கு தோல்வியில் முடிந்தது . இப்போது திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதறாத வண்ணம் தேமுதிக அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டது . இப்போது நடைபெறுவது சட்டமன்ற தேர்தல் எனவே இரண்டு அணிகள் தான் எனபது முடிவாகி விட்டது . ஸ்பெக்ட்ரம் ஊழல் , விலைவாசி உயர்வு , மின் வெட்டு போன்ற பல பிரச்சனைகளுக்கு திமுக அணி முகம் கொடுக்க வேண்டியது இருக்கிறது .
திமுகவுடன் எவ்வளவு கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் திமுக 40 சதவீதத்திற்கு மேல் வாக்கு வாங்க முடியாது. அப்படிஎன்றால் எதிர்ப்பு வாக்குகள் 60 சதவீதம் இருக்கிறது இதில் 10 சதவீத வாக்குகள் பிற கட்சிகளுக்கு சென்றாலும் அதிமுகாவே முன்னணியில் இருக்கிறது . அது மட்டுமல்லாது கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவோடு மதிமுக மட்டும் கூட்டணி வைத்தே 3 சதவீத வாக்குகள் தான் வித்தியாசம் . இப்போது கூடுதலாக தேமுதிக கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிகள் மற்றும் சில கட்சிகள் வந்துள்ளன .
இவ்வாறு பல விதத்திலும் அலசும் போது அதிமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது . ..................
10 கருத்துக்கள்:
நன்றாக அலசியுள்ளீர்கள்.அலையென்ற ஒன்று எப்போதும் தமிழக தேர்தலை தீர்மானிக்கும் ஒன்று.இந்த முறை தி.மு.கவுக்கு எதிரான அலை என்பது எனது கணிப்பு.
நான் அ.தி.மு.க அனுதாபி அல்ல:)
திமுகவிற்கு எதிராக ஒரு அலை தமிழகத்தில் காணப்படுகிறது . அது மட்டுமல்லாது திமுக காங்கிரஸ் கட்சியினருக்கிடேயே ஏற்பட்ட போட்டி திமுக கூட்டணிக்கு எதிராகவே அமையும் . திமுகவிற்கு எதிரான வாக்குகள் இந்த தேர்தலில் சிதற வாய்ப்பு இல்லை . இது தான் உண்மை நன்றி உங்கள் கருத்திற்கு
சரியான ஆய்வு. இவ்வளவு பெரிய அலை இருக்கும் போதும் எப்படி சிலரால் திமுக வெற்றிபெறும் என பதிவிட முடிகிறது . திமுகவின் அரசியலை நினைத்து உலகமே சிரித்து கொண்டிருக்கிறது .
ஸ்பெக்ட்ரம் ஊழல் அது இதுன்னு இன்டர்நெட்ல மட்டும் தான் பெரிய விசயமாக பேசுகிறீர்கள். மக்கள் மத்தியில் ஒரு ருபாய் அரிசி இலவச கலர் டிவி போன்ற கலைஞரின் நல்ல திட்டங்கள் பற்றி தான் மக்கள் பேசுகிறார்கள் . கடந்த தேர்தல்களை விட திமுகவின் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது. மீண்டும் கலைஞர் ஆட்சி வரும் உங்கள் கணிப்புகள் பொய்யாக போகும் .
வின்னர் said...
சரியான ஆய்வு. இவ்வளவு பெரிய அலை இருக்கும் போதும் எப்படி சிலரால் திமுக வெற்றிபெறும் என பதிவிட முடிகிறது . திமுகவின் அரசியலை நினைத்து உலகமே சிரித்து கொண்டிருக்கிறது .
///////////////
உண்மை தான் சிரிக்க வேண்டிய அளவிற்கு அரசியலை கோமாளித்தனமாக மாற்றி விட்டார்கள்
Vinoth said...
ஸ்பெக்ட்ரம் ஊழல் அது இதுன்னு இன்டர்நெட்ல மட்டும் தான் பெரிய விசயமாக பேசுகிறீர்கள். மக்கள் மத்தியில் ஒரு ருபாய் அரிசி இலவச கலர் டிவி போன்ற கலைஞரின் நல்ல திட்டங்கள் பற்றி தான் மக்கள் பேசுகிறார்கள் . கடந்த தேர்தல்களை விட திமுகவின் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது. மீண்டும் கலைஞர் ஆட்சி வரும் உங்கள் கணிப்புகள் பொய்யாக போகும் .
///////////////
வினோத் தேர்தல் முடிந்த பின்னர் தெரியும் யார் கணிப்புகள் பொய்யாக போகும் என்று .
ஒரு சிலருக்கு?!தி.மு.க வர வேண்டுமென்று ஆசை!அவர்கள் ஆசையை வெளிப்படுத்துகிறார்கள்!சுதந்திரமாக கருத்துக் கூறவும்,ஓட்டளிக்கவும் முடியும்!வழமையாக பாமரர்களின் வாக்குகளே ஆட்சியை தீர்மானிக்கின்றன!இம்முறை மாறுபடக் கூடும்!
Moontravathu ANI amaikkum muyarchiyil MDMK. Appadi amainthal ethir ottukal sitharum appothu athu DMK CONG. Sathakamaka amaiyum. So May 13 than theriyum
lets wait and see...
யார் எதை சொன்னாலும் மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சென்று அடைதிருகிறது என்பதை மறுக்கமுடியாது ..அது போக கூட்டணியின் பலமும் தி மு க விற்கு இருக்கிறது ..குறைந்தது நூற்று முப்பது இடங்களை காங்கிரஸ் தி மு க .அணி கைப்பற்றும் ...
Post a Comment