தேர்தல் வந்தாலே கருத்து கணிப்புகள் வருவது சகஜம். அதே போல் வருகின்ற சட்ட மன்ற தேர்தலுக்கான கருத்து கணிப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது வருகின்ற பெரும்பாலான கருத்து கணிப்புகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடுகள் முடிவடையாமல் தொடர்ந்து இழுபரியிலேயே காணப்படுகிறது.
ஓரளவிற்கு கூட்டணி முடிவானாலும் இன்னும் முழுமை பெறவில்லை. திமுக கூட்டணி பெரிய இழுபறிக்கு பின்னர் முடிவடைந்திருக்கிறது. போட்டியிடும் தொகுதிகள் இனம் காணுவதில் மட்டும் தான் இழுபறி நீடிக்கிறது . அதுவும் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக தான் தெரிகிறது. இந்நிலையில் இப்போது வெளிவரும் கருத்து கணிப்புகள் பற்றி நாம் பார்த்தாக வேண்டும் .
ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பு என்பது கடந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீதத்தை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்டது . கடந்த தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும் போது கூட்டணிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தால் அந்த கணிப்புகள் இந்த தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புகள் இருக்கிறது. கருத்து கணிப்புகளால் பயனும் உண்டு அதே நேரம் பாதிப்புகளும் உண்டு . ஒருபுறம் கட்சியினரை சுருசுறுப்பாக்கவும் நடுநிலையாக இருக்கும் வாக்காளர்கள் ஒருப்பகமாக மாறவும் கருத்து கணிப்புகள் பயன் படலாம் .
அதே நேரம் வெற்றி மிதப்பில் சோம்பல் உருவாக்கவும் செய்யும் . கருத்து கணிப்புகள் நமக்கு சாதகமாக வருகிறதே என்ற ஆணவமும் திமிர் தனமும் கூடவும் வாய்ப்புகள் இருக்கிறது . இப்படி ஆணவம் திமிரதம் கூடும் போது விவேகம் இழந்து வெற்றிக்கான திட்டமிடலில் தோற்று போகவும் வாய்ப்புகள் இருக்கிறது . அந்த வகையில் வெளிவரும் கருத்து கணிப்புகள் ஒருவித ஆணவ போக்கை உருவாக்குவதற்காக வெளியிடபடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது . அதற்கு வலுவூட்டும் வகையில் எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் அதிமுக 200 இடங்களில் வெற்றிபெறும் என்ற கணிப்புகளும் வந்து கொண்டிருக்கிறது .
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியால் எடுக்கப்பட்ட சர்வேயில் அதிமுக 150 க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது . இதையெல்லாம் பார்க்கும் போது அதிமுக தலைமைக்கு வெற்றி பெற்று விடலாம் என்ற மிதப்பை காட்டி கட்சி தொண்டர்களை சோர்வடைய செய்வதும் ஒரு வித தந்திரமாக கூட இருக்கலாம். ஒரு சில கட்சிகள் இல்லாமலே வெற்றி பெற்று விடலாம் என்ற ஆணவ போக்கில் அதிமுக தலைமையை மிதக்க வைத்து கூட்டணி கட்சிகளை அவர்கள் மூலமாகவே பிரித்து விடலாம் என்ற நோக்கோடு இப்படி பட்ட கணிப்புகள் வெளியிடப்படலாம் . அதை உறுதி படுத்தும் விதமாக அதிமுக தேமுதிக மற்றும் ஒரு சில ஜாதி கட்சிகளோடு தொகுதி பங்கீட்டை முடித்து கொண்டது .
ஒரு வேலை அதிமுக தலைமை மதிமுக , சிபிஐ , சிபிஎம் போன்ற கட்சிகள் இல்லாமலே தேர்தலை சந்தித்தால் கூட வெற்றி பெற்று விடலாம் என்ற நினைப்பில் கூட இருக்கலாம் . அதனால் கூட இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதிலும் தொகுதிகளை குறைத்து ஒதுக்குவதிலும் நோக்கமாக இருத்தே தகுதி பங்கீடுகளை காலம் தாழ்த்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது .
எதிரியை தோற்கடிக்க வேண்டும் என்றால் முதலில் நமது பலவீனத்தை உணர வேண்டும் . எப்போது எதிரி நம்மை விட பலம் குறைந்தவன் என்ற நினைப்பு மனதில் வருகிறதோ அப்போதே நாம் தோல்வி பெற்று விட்டோம் . எதிரி நம்மை விட பலம் வாய்ந்தவன் என நினைத்து அதற்குரிய வேலைகளை நாம் செய்ய வேண்டும் . வெற்றி பெற்று விடலாம் என்ற ஆணவத்தில் மதிமுக , சிபிஐ , சிபிஎம் போன்ற காட்சிகளில் ஒரு கட்சி பிரிந்தாலும் அது வெற்றிக்கு பாதிப்பாக முடியும் .
தொகுதி பங்கீடுகளில் எதாவது பிரச்னை ஏற்பட்டு மூன்றாவது அணி என்று ஓன்று உருவாகினால் அது அதிமுகவிற்கே பாதிப்பை உருவாக்கும் . திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதறும். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று எல்லோரும் அதிமுகவிற்கு வாக்களிக்க போவதில்லை , மாறாக திமுக காங்கிரஸ் தோற்க வேண்டும் என்பதற்காகவே அதிமுகவிற்கு வாக்களிக்க பலர் தயாராக உள்ளனர் . இந்த நிலையில் மூன்றாவது அணி வந்தால் திமுக எதிர்ப்பு வாக்குகள் இரண்டாக பிரிய வாய்ப்பு இருக்கிறது . கடந்த தேர்தல்களில் தேமுதிகாவால் எப்படி அதிமுக வெற்றி பாதிக்க பட்டதோ அதே போல் மூன்றாவது அணி ஏற்பட்டால் இந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பாதிக்க படும் .
அதற்காகவே உளவு துறையால் இப்படி கருத்து கணிப்புகள் திட்டமிட்டு உருவாக்க படுவதாக தெரிகிறது . வீரத்தோடு விவேகம் முக்கியம் ........... நாட்கள் போக போக தான் சரியான கணிப்புகள் சொல்ல முடியும் .
10 கருத்துக்கள்:
என்ன தோல்வி பயம் வந்து விட்டதோ ?
திமுகவின் கூட்டணியும் இன்றோ நாளைக்கோ என்று தான் இருக்கிறது . ஏதோ கனிமொழி இருக்கிறதால திமுக கூட்டணி நிலைக்கும்னு நம்பலாம் .
எலக்சன் பிரச்சாரம் துவங்கும் முன் போடும் கணிப்புகள் எதுவும் உண்மையாகாது. இன்னும் ரெண்டு மூன்று நாட்களில் தெரியும் திமுக மீண்டும் வெற்றி பெற்று கலைஞர் ஆறாவது முறையாக முதல்வர் ஆகுவார் என்பது . பொறுத்திருங்கள் .......
Intru mudivu theriyum
ஒரு வாரத்தில் வெற்றி உறுதி செய்யப்பட்டு விடும் ...
நல்ல பதிவும் சமநிலைக் கருத்தும்.வாழ்த்துக்கள்.
அ.தி.மு.க வின் கூட்டணி அமைதி தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் ஆப்பா அல்லது அரசியல் விவேகமா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.
எப்படியோ எனது நிலைப்பாடான இரு திருடர்களுக்கும் அப்பால் புதிய சிந்தனைக்கான் சாத்தியங்கள் இல்லாததால் வெறும் விமர்சகனாக மட்டுமே எனது பின்னூட்டம்.
ராஜன் நெல்லை said...
திமுகவின் கூட்டணியும் இன்றோ நாளைக்கோ என்று தான் இருக்கிறது . ஏதோ கனிமொழி இருக்கிறதால திமுக கூட்டணி நிலைக்கும்னு நம்பலாம் .
///////////////
கனிமொழிய வச்சி தான் ஆட்டத்தை ஆடுரான்களோ ?
சூர்யா said...
எலக்சன் பிரச்சாரம் துவங்கும் முன் போடும் கணிப்புகள் எதுவும் உண்மையாகாது. இன்னும் ரெண்டு மூன்று நாட்களில் தெரியும் திமுக மீண்டும் வெற்றி பெற்று கலைஞர் ஆறாவது முறையாக முதல்வர் ஆகுவார் என்பது . பொறுத்திருங்கள் .......
////////////
உங்களுக்கான பதிலை முகநூலில் நண்பர் ஒருவர் கொடுத்திருந்தார் . நேரம் கிடைத்தால் படியுங்கள்
shibi said...
ஒரு வாரத்தில் வெற்றி உறுதி செய்யப்பட்டு விடும் ...
////////
நம்பிக்கை தான் வாழ்க்கை அப்படி தானே சிபி
ராஜ நடராஜன் said...
நல்ல பதிவும் சமநிலைக் கருத்தும்.வாழ்த்துக்கள்.
அ.தி.மு.க வின் கூட்டணி அமைதி தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் ஆப்பா அல்லது அரசியல் விவேகமா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.
எப்படியோ எனது நிலைப்பாடான இரு திருடர்களுக்கும் அப்பால் புதிய சிந்தனைக்கான் சாத்தியங்கள் இல்லாததால் வெறும் விமர்சகனாக மட்டுமே எனது பின்னூட்டம்.
////////////////////
விவேகமா ஆப்பா என்பது தேர்தல் முடிந்த பின்னர் தான் தெரிய வரும் . பொறுத்திருப்போம் .
நன்றி நண்பரே
Post a Comment