Thursday

மூன்றாவது அணிக்கு தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகள் வருமா?

சாதிக் பாட்சா (தற்) கொலையை  மக்கள் மறக்கும் விதமாக சன் டிவி , கலைஞர் டிவி இன்று முழுவதும் மூன்றாவது அணியை பற்றி பரபரப்புகளை ஏற்படுத்தி விட்டன.  காலையில் மூன்றாவது அணி ஏற்படும் என்ற பரபரப்புகள் மாலையில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட துவங்கி விட்டன.   

ஆனால் இன்றைய காலத்தின் கட்டாயமாக மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்பது தான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு. அப்படி உருவாகும் பட்சத்தில் கவுரவமான வெற்றிகளை மூன்றாவது அணி பெறும்  என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. 

இமாலய ஊழலை செய்த காங்கிரஸ் திமுக ஒரு அணியிலும் , நான் இன்னும் திருந்த மாட்டேன் என்னுடைய ஆணவம் குறையாது என்று திமிரோடு இருக்கும் அதிமுக ஒரு அணியிலும் போட்டியிடுகிறது. மதிமுகவிற்கு தொகுதிகளை குறைத்து தருவதாக சொன்ன பின்னர் கேட்ட தொகுதிகள் தரவில்லைஎன்றால் கூட்டணி ஒப்பந்தத்திற்கு வரமுடியாது என வைகோ மறுத்து விட்ட நிலையில் நேற்று 160  தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்து தொகுதி ஒப்பந்தம் செய்து கொண்ட கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் ஜெயா .   

தேமுதிக கட்சி அலுவலகத்தில் அதிமுக தவிர மற்ற கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தியிருக்கின்றன. அதில் எல்லோருமாக சேர்ந்து அதிமுக தலைமையிடம் பேசுவதாக அறிவித்திருக்கின்றனர். இந்த செய்திகளை பரபரப்பை உண்டு பண்ணும் விதமாக திரித்து வெளியிட்டு பரபரப்பை செய்து விட்டார்கள். இப்போது அதிமுக தலைமை சமரசம் செய்து கொள்ள பேச்சுவார்த்தைக்கு வர தயாராக உள்ளதாக செய்திகள் தெருவிக்கின்றன . 

தொகுதிகள் பற்றி பேசிகொண்டிருக்கும் போதே கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் அறிவித்து கூட்டணி கட்சிகளை கேவல படுத்தி விட்டார். மீண்டும் இவர்கள் சேர்ந்து பிரச்சாரம் செய்தால் எப்படி ஒற்றுமையாக தேர்தல் பணி செய்ய முடியும். தேமுதிக இப்போது தன கட்சியை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது . தேமுதிக இரண்டாம் கட்ட தலைவர்களின் வற்புறுத்தலால் தான் விஜயகாந்த் கூட்டணிக்கு ஒத்து கொண்டதாகவும் தெரிகிறது . ஆனால் அதே இரண்டாம் கட்ட தலைவர்களுக்கே ஆப்பு வைக்கிற மாதிரி ஜெயா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் . அதனால் இப்போது தேமுதிக கட்சிக்குள் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமல்லாது மதிமுக கூட்டணியில் இல்லை என்றவுடனே அதிமுக தொண்டர்கள் முதல் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கே தோல்வி பயம் வந்து விட்டது. 

 
கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரையில் மார்க்சிஸ்ட் தோழர்கள் அதிமுக கூட்டணி உடைந்து விட்டதாகவே பேசி வருகிறார்கள் . ஆனால் கடைசி நேரத்தில் தா . பாண்டியன் மூலம் அதிமுகவோடு இவர்களும் சமரசம் செய்ய வாய்ப்பு இருக்கிறது . தோல்வி பயத்தின் காரணமாக ஜெயாவும் சில தொகுதிகள் இரங்கி வந்து தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகளை சமரசம் செய்யலாம் . ஆனால் இதில் பெரும்பாலும் பாதிக்க படுவது புதிய தமிழகம் , மற்றும் குடியரசு கட்சி , பார்வார்ட் பிளாக் கட்சிகள் . 

மதிமுகவை பொறுத்த வரையில் மூன்றாவது அணி அமைக்க வேனித்யா ஆயத்த பணிகள் துவங்கி விட்டன. அதில் எந்தெந்த கட்சிகள இணையும் என்பது இன்னும் இரு நாளில் தெரிய வரும் . இந்த தேர்தலில் மூன்றாவது அணி உருவாகுவது காலத்தின் கட்டாயம் . ஒரு புறம் ஊழல் திமுக கட்சியும் தமிழின இனபடுகாவ்லைக்கு காரணமான திமுக காங்கிரஸ் சேர்ந்தும் இன்னொருபுறம் எத்தனை தோல்விகள் வந்த பொது திருந்தாத ஜெயலலிதா  இவர்களை எதிர்த்து மூன்றாவது அணி களம் காணும் பொது பொது மக்கள் மத்தியில் மூன்றாவது அணிக்கான ஆதரவு பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை.  வரலாற்றில் இல்லாத அளவிற்கு திமுக மீது எதிர்ப்பு அலை இந்த தேர்தலில் உருவாக்கி இருக்கிறது . அதே போல் இப்போது  ஜெயலலிதாவின் வறட்டு ஆணவத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி நடக்காது என்று வெறுப்பு ஏற்பட்டு உள்ளது . 

இதையடுத்து மக்கள் மூன்றாவது அணியை ஆதரிக்க தயாராகி விட்டனர் .    மானம் தான் பெருசு என தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவோடு எந்த சமரசத்திற்கும் செல்லாமல் இருந்தால் மூன்றாவது அணி மேலும் வலுபெறும் . தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகள் மூன்றாவது அணிக்கு வராத பட்சத்திலும் மதிமுக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் .


அதிமுக திமுகவை எதிர்க்கட்சி வரிசையில் மக்கள் பார்க்க கூட வாய்ப்பு இருக்கிறது .



4 கருத்துக்கள்:

Tamilan said...

மதிமுக , தேமுதிக , கம்யூனிஸ்ட் , நாடாளும் மக்கள் கட்சி , சமத்துவ மக்கள் கட்சி , புதிய தமிழகம் , பார்வார்டு பிளாக் , புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தால் மூன்றாவது அணி பலம் பெறும்

வின்னர் said...

தேமுதிகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மீண்டும் ஜெயலலிதாவுடன் ஒட்டி கொள்வார்கள் . மதிமுக நாம் தமிழர் மற்றும் சிறிய கட்சிகளை சேர்த்து துணிச்சலோடு போட்டியிட வேண்டும் . வெற்றி தோல்வி முக்கியம் அல்ல மானம் தான் முக்கியம் . மதிமுக கூட்டணியில் இல்லை என்றவுடன் அதிமுக வட்டாரங்கள் கலங்கி போனது என்னவோ உண்மை . 15 தொகுதிகளுக்கு சமரசம் பேச வரலாம் . ஆனால் இகழ்ந்தவர் வீட்டிற்கு செல்ல வைகோ ஒன்றும் கருணாநிதி அல்ல . மதிமுக தொண்டர்களின் மானத்தை காக்க வைகோ மூன்றாவது அணி அமைக்க வேண்டும் . இதுவே தமிழர்களின் மானத்தை காக்கும்

வின்னர் said...

தேவை பட்டால் பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைக்கலாம் . திமுக அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் ஒருவர் ஊழலில் அப்பா என்றால் இன்னொருவர் ஊழலில் அம்மா .

Anonymous said...

Suresh kumar you dont know about tamilnadu politics. Tommorow Jayalalitha, Vijayakanth, vaika will pose in the newspapers that their alliance is still strong.

You have wasted your valuable time to post this.

Post a Comment

Send your Status to your Facebook