Wednesday

விரக்தியில் விஜயகாந்த் கட்சி தலைவர் ஆஸ்டின்

கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என அறிவிக்கும் முன்னரே அதிமுக தொகுதிகள் பட்டியலோடு வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது . இதில் பெரும்பாலும் பல தேமுதிக தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவை பொறுத்தவரையில் தலைவர்கள் என்று சொல்லும் போது முன்னர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான். அதிமுகவிலிருந்து சென்றவர்களை குறி வைத்து அவர்களுக்கு தொகுதி கிடைத்து விட கூஆட்து என்பதில் அதிமுக உறுதியாக இருப்பது தெரிகிறது. 

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் தேமுதிகவின் தலைவர் என்று சொன்னால் ஆஸ்டின் தான் . தேமுதிக மாநில தலைவராக இவர் இருக்கிறார் . ஆஸ்டினை தெரியாத அதிமுகவினர் இருக்க முடியாது.  இளம் வயதிலேயே எம்ஜிஆரால் ஆதிமுகவிற்கு வந்து இளம் வயதிலேயே பல பதவிகளை வகித்தவர். 1991  - 1996  காலவாக்கிலேயே மேல்சபை எம்பியாகவும் ஓன்று சேர்ந்து குமரி மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்தார் . மிகவும் சுறுசுறுப்பான ஒரு தலைவராக இளம் வயதிலேயே செயல் பட்டவர் . பின்னர் திருநாவுகரசால் துவங்க பட்ட எம்ஜிஆர் ஆதிமுகவில் இணைந்து நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டார் . 

முதல் கூட்டத்திலேயே ஜெயலலிதாவோடு வாக்குவாதத்தில் ஈடு பட்டார் . பின்னர் திருநாவுகரசர் பாரதிய ஜனதாவில் இணைந்தவுடன் ஆஸ்டின் தாய் கழகமான அதிமுகவில் மீண்டும் இணைந்தார் . அப்போது தான் அடுத்த கட்ட உள் அரசியல் அதிமுகவில் ஏற்பட்டது . ஆஸ்டினுக்கும் தளவாய் சுந்தரத்திற்கும் போட்டி ஏற்பட்டது . ஆஸ்டின் எந்த நேரமும் மக்களை சந்திக்க கூடியவர் . தளவாய் சுந்தரம் ஆஸ்டின் விட்ட இடத்தை முதலில் ஆஸ்டின் அதிமுகவிலிருந்து பிரிந்தவுடன் பிடித்து கொண்டார் . மேலும் குமரி மாவட்டத்திலிருந்து வேறு எந்த தலைவர்களும் அதிமுகவில் உருவாகாதவாறு பார்த்து கொண்டார் . இந்நிலையில் கடந்த தேர்தலில் ஆஸ்டினுக்கு நாகர் கோவில் தொகுதி கொடுக்க கூடாது என்பதற்காகவே கூட்டணி கட்சிக்கு ஒதுக்க பட்டது . அந்த தேர்தலில் ஆஸ்டின் சுயேட்சையாக போட்டியிட்டு 30  ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார் . 

பின்னர் தேமுதிகவில் இணைந்து மாநில தலைவராக செயல் பட்டு கொண்டிருக்கிறார் . இந்நிலையில் மீண்டும் அரசியல் விளையாடி விட்டது . பாரதிய ஜனதாவில் திருநாவுகரசருக்கு தொகுதி ஒதுக்க கூடாது என்பதில் எப்படி ஜெயலலிதா உறுதியாக இருந்தாரோ அதே போல் ஆஸ்டினுக்கும் தொகுதி ஒதுக்கி விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்க பட்டுள்ளது . இதன் பின்னணியில் தளவாய் சுந்தரம் செயல் பட்டதாக தேமுதிகவினர் கருதுகின்றனர். 

தற்போது அவரிடம் தொடர்பு கொண்ட போது பார்ப்போம் நாளை தெரியும் என்ற பதில் தான் வருகிறது. கன்னியா குமரி அல்லது நாகர்கோவில் இரண்டில் எதாவது ஒன்றை எதிர்பார்த்தார் ஆஸ்டின் . இந்த முடிவிலிருந்து ஜெயலலிதா மாற மாட்டார் என்பதை உணர்ந்த ஆஸ்டின் அடுத்த கட்டம் பற்றி விரைவில் முடிவெடுப்பார் என தெரிகிறது . கடந்த முறை போல் சுயேட்சையாகவும் போட்டியிடலாம் என தெரிகிறது .    இதே போல் மேலும் பல அதிமுகவிலிருந்து சென்ற தேமுதிக தலைவர்களுக்கு ஜெயா செக் வைத்துள்ளதால் அவர்களும் விரக்தியில் இருப்பதாக தெரிகிறது . நாளை அதிமுக கூட்டணியில் மேலும் சில மாற்றங்கள் ஏற்படும் அல்லது தேமுதிகவில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது . 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆஸ்டின் கன்னியாகுமரி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிட தக்கது

2 கருத்துக்கள்:

ராம்ஜி_யாஹூ said...

பச்சைமால் இம்முறை அமைச்சர் ஆகிறார் போல

Suresh Kumar said...

ராம்ஜி_யாஹூ said...

பச்சைமால் இம்முறை அமைச்சர் ஆகிறார் போல
///////////////////

இம்முறை தளவாய் போட்டியிட்டால் நூறு சதவீதம் தொல்வியடைவார் . தொகுதி மறுசீரமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் தான் இம்முறை பச்சைமால் வாய்ப்பு கிடைத்திருக்கிறது . ஆஸ்டின் விரும்பிய தொகுதியும் கன்னியாகுமரி தொகுதி தான் .

Post a Comment

Send your Status to your Facebook