இன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தி.நகரில் நடக்க இருந்த மாவீரர் நாள் பொதுக் கூட்டம் அதிமுக அரசின் அராஜகத்தால் நிறுத்தப் பட்டுள்ளது. காவல் துறை அனுமதியோடு நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தை ஆதிமுக அரசு தடை செய்திருக்கிறது. இந்த மாவீரர் நிகழ்வில் வைகோ சிறப்புரை வழங்க இருந்தார்.
இந்நிலையில் மதியம் முதலே கூட்ட ஏற்பாடுகளை செய்து வந்த மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோரை கைது செய்திருக்கிறது காவல் துறை. மக்களாட்சியில் அவரவர் கருத்தை சொல்ல உரிமை இருக்கும் போது ஜனநாயக ரீதியாக பொதுக் கூட்டம் நடத்த ஜெயலலிதா தலைமையிலான அரசு அனுமதிக்கவில்லை என்றால் இதை விட காட்டு மிராண்டி தனம் வேறு என்ன இருக்க முடியும்.
பூனை கண்ணை மூடி கொண்டு பால் குடிக்குமாம் அப்படி குடிக்கும் பூனை நினைக்கும் நம்மை யாரும் பார்க்க வில்லை என்று. அப்படி தான் இருக்கிறது அதிமுக அரசின் நடவடிக்கைகள் மாவீரர் நிகழ்வை நடத்த விடாமல் இருந்தால் மாவீரர்களை யாரும் நினைவு கூற மாட்டார்கள் என்று ஒரு வேளை ஜெயா நினைக்கலாம்.
ஆண்டுதோறும் உலக தமிழர்களின் ஒப்பற்ற தினமான நவம்பர் 27 யார் தடுத்தாலும் தமிழ் ஈழ விடுதலைக்காக உயிரை கொடுத்த எங்கள் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் மாவீரர்களை நினைக்காமல் இருக்க முடியாது.
ஒவ்வெரு முறை ஆட்சிக்கு மாறி மாறி வரும் கட்சிகளால் தமிழினத்திற்கு எதிராக தான் செயல் படுகிறார்கள். கடந்த முறை தமிழ் ஈழத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியா துணையோடு கொலை செய்ய பட்ட பொது தமிழின தலைவர் என்று சொல்லும் கருணாநிதியால் கொலைக்கு துணை போக தான் முடிந்தது. தமிழ் உணர்வாளர்களை சிறையில் அடிப்பதை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி செய்து வருகின்றனர்.
தமிழகத்தை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி ஆட்சி அமைப்பது தான் தமிழகத்திற்கு சாபக்கேடு. தமிழர்களின் உரிமைக்கு பேச முடியவில்லை . ஜெயலலிதா இதையெல்லாம் ஜெயித்து வந்தால் செய்வார் என்பது வைகோவை எப்போது கூட்டணியிலிருந்து நீக்கினாரோ அப்போதே தெரிந்து விட்டது தான். அன்றிலிருந்தே இதே ஜெயா திருந்த வில்லை என்பதை சொல்லியிருக்கிறோம். ஆனால் என்ன செய்வது கருணாநிதி என்னும் விச பாம்பை விரட்ட இன்னொரு விச பாம்பிற்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் பாம்பின் விஷம் இப்போது வெளியேறுகிறது.
மாற்றம் ஓன்று உருவாக வேண்டும் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு எதிராக ஓட்டு மொத்த தமிழ் உணர்வாளர்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சியினர் ஓன்று பட்டு நிற்க வேண்டும். மாற்று அணிக்கான தலைமை நேர்மையாகவும் கொள்கை உறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
தமிழருவி மணியன் சொன்னதை போல் மாற்று அரசியலுக்கான துவக்கம் இன்றே துவங்கட்டும். இந்த மாவீரர் நாளில் தமிழின விடுதலைக்காக உயிரை விட்ட மாவீரர்களுக்கு நாம் செய்யும் கடமையாக மாற்று அரசியல் துவங்கட்டும்.
ஓன்று பட்டு ஜெயாவின் அராஜக ஆட்சியை எதிர்ப்போம்.......
தமிழ் விடுதலைக்கு தங்கள் உயிரை கொடுத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !
2 கருத்துக்கள்:
வீர வணக்கம்
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
Post a Comment