தமிழகத்தின் ஐந்து மாவட்ட வாழ்வாதாரத்தை காக்க நாள் தோறும் லட்ச கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கின்றனர். நம்மில் பலர் இந்த போராட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்க வில்லையே என்ற கவலை இருக்கும். முல்லை பெரியாறு அணையில் நம் பக்க நியாயங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
பாராமுகமாய் இருக்கும் மத்திய மன்மோகன் அரசுக்கு ஓட்டு மொத்த தமிழர்களும் அணையை காக்க உணர்வுடன் போராடுகிறார்கள் என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தமிழகத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்ட காள்புணர்வே கேரளா ஆட்சியாளர்களின் மன நிலை முல்லை பெரியாறு அணையை மட்டும் கைப்பற்றி விட்டால் ஐந்து மாவட்ட மக்களின் எதிர் காலத்தையும் தலைமுறையையும் வறுமைக்கு கொண்டு செல்ல சிறிது சிறிதாக திர்ட்டமிடுகிறது கேரளம்.
மக்கள் மத்தியில் நாளை வரும் ஆபத்துக்களை அயராது தளராது விளக்கி வைகோ, அப்பாஸ் , நெடுமாறன் போன்றோர்களின் பிரச்சாரங்கள் தான் இன்று மக்களை தன்னெழுச்சியாக போராட வைத்திருக்கிறது. இன்று இளைஞர்கள் முதல் எல்லா தரப்பும் முல்லை பெரியாறு அணையை காக்க உறுதி எடுத்திருப்பதை நினைக்கும் போது தமிழகம் உணர்வினை இழந்து போகவில்லை என்ற நிம்மதி கிடைக்கிறது.
முல்லை பெரியாறு அணையை காக்க என் பங்கிற்கு என்ன செய்யலாம் என நினைத்தது கொண்டிருக்கும் தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட நல்லோர்களுக்கு போராட்டத்தில் பங்கு பெற ஒரு வாய்ப்பு . கீழ் வரும் அலைபேசி எண்ணில் உங்களுடைய அலைபேசி மூலம் ஒரு தவறிய அழைப்பு (Missed Call )கொடுங்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடம் சொல்லி தவறிய அழைப்பை கொடுக்க வையுங்கள் . நம் எதிர் பார்ப்பு ஒரு கோடி அழைப்புகள் இதன் மூலம் ஓட்டு மொத்த தமிழகமும் அணையை காக்க உறுதியாக இருக்கிறது என்பதை உணர்ச்சியற்ற மத்திய அரசுக்கு நம் உணர்வுகளால் தெரிவிக்க முடியும்.
செயல் படுங்கள் தோழர்களே தவறிய அழைப்பு விடுங்கள் மறந்தும் தவறிய அழைப்பு(Missed Call) விட தவறி விடாதீர்கள். காலம் தாழ்த்த வேண்டாம் இன்றே செய்வோம் இப்போதே செய்வோம் . Missed Call கொடுக்க வேண்டிய அலை பேசி எண் - 928 1000 152.
3 கருத்துக்கள்:
Done......... By Sathya
தவறிய அழைப்பை விட்டு விட்டேன் நன்றி
நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
Post a Comment