Monday

யார் ஸ்பெக்ட்ரம் குற்றவாளி ?

         ராஜாவா ? மன்மோகன் சிங் ? சோனியா? கருணாநிதி? கனிமொழி? யார் தான் குற்றவாளி . ஒரு குற்றம் நடந்தால் அதில் குற்றவாளி யார் என விசாரித்தால் பலரும் குற்றத்தில் சம்மந்த பட்டிருப்பார்கள் . இன்று இந்தியாவையை அதிர வைத்திருக்கும் ஊழல் தான் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் . ஆசிய கண்டத்திலேயே மிக பெரிய ஊழல் இது தான் என்றும் சொல்லுகிறார்கள் . உலகின் மிக பெரிய மக்களாட்சி நாடு இந்தியாவில் தான் இப்படி நடக்கும் . 

         இந்தியா இதுவரை பல ஊழல் வாதிகளை கண்டிருக்கிறது . ஆனால் இது மிக பெரிய ஊழல் என்றே கணக்கிட படுகிறது . இப்படி ஒரு ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிந்தவுடனே முதன் முதலில் மாறன சகோதரர்களின் மீடியாக்களில் தான் பிரபலமாக ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்க பட்டது . இது ஒரு பூதாகரமாக அமைந்து விடுமோ என எண்ணிய கலைஞர் மாறன சகோதரர்களிடம் மண்டியிட்டது வேறு . மாறன சகோதரர்களை அமுக்கி விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் என கணக்கு போட்ட கருணாநிதிக்கு மக்கள் விளிப்புனர்வாலும் மற்ற ஊடகங்களாலும் மத்திய கணக்கு அதிகாரிகள் மூலமாகவும் மீண்டும் பிரச்னை வந்தது . எதிர்கட்சிகள் ராஜாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் . ராஜா மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தை முடக்கினர் . பின்னர் ஒரு வழியா ராஜா ராஜினமா செய்வதாக அறிவிக்க பட்டது . 

            ஆனால் உண்மையில் யார் குற்றவாளி? ராஜா மட்டும் தானா? கிடையாது ராஜா பலிக்கு கொடுக்க பட்ட ஆடு மட்டும் தான் .   இத்தனை கோடிகளையும் ராஜா சுருட்டியிருப்பார் என நினைத்தால் அது தான் தவறு . இந்திய அரசியல் கேளிகூத்தாட படும் போது இவ்வாறு ஊழல்கள் இருக்க தான் செய்யும் . கூட்டணி ஆட்சியை உண்மையான கூட்டாட்சி என்று ஏமாற்றி கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் தாங்கள் கையில் அதிகாரம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் . அதற்கு பணம் ஒன்றே போதும் என்ற குறிக்கோள்களில் தான் இந்த கொள்ளையடிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன . ஊழலை தண்டிக்க சரியான சட்டங்கள் இல்லாததால் தான் இந்த நிலை .  அப்படி ஒரு சரியான சட்டங்கள் எந்த அரசியல் நிற்பந்தங்களுக்கும் பணியாமல் இருந்திருந்தால் இன்று கருணாநிதியால் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது . 

               தமிழகத்திலேயே முதன் முதலாக ஒரு ஊழல் ஆட்சியை கொடுத்தவர் தான் இப்போதைய முதல்வர். அப்போதைய சர்க்காரிய கமிசன் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ய பட்டுள்ளது என அறிக்கை அளித்தது  . அரசியலுக்காக அந்த வழக்குகள் தள்ளுபடி செய்ய பட்டது எல்லாம் முடிந்து போன கதை . அந்த தைரியத்தில் தான் இவர்களால் துணிந்து ஊழல் செய்ய முடிகிறது . 

              இந்த மிக பெரிய ஊழலில்காங்கிரஸ் கட்சிக்கு பலன் இருந்ததாகவும் சொல்ல படுகிறது . அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆற்று வெள்ளம போல் பணம் இறக்க பட்டது . ஆனால் இதில் மிக பெரிய பலன் அடைந்தது திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் தான் ஊழலில் கிடைத்த லாப பணத்தை ராஜா ஒருவர் கொண்டு போக முடியாது . ராஜாவுக்கு இந்த ஊழலில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதை விட இரண்டு மடங்கு பங்கு கருணாநிதிக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் இருக்கிறது . கருணாநிதியால் மட்டுமே இத்தனை கோடிக்கு ஊழல் செய்ய சிந்திக்க முடியும் . ராஜா ஒருவரால் இது முடியாது . இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியாக பார்த்தால் கருணாநிதியும் அவர் குடும்பமும் தான் கடைசியில் பல்கடாக்கப்பட்டார் ராஜா .

         சிலருடைய வாதங்கள் இது அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தானே தவிர ராஜா ஊழல் செய்ததாக எங்கேயும் சொல்லவில்லை . அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இத்தனை கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை விட இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது திட்டமிட்டு இழப்பை ஏற்படுத்தியது . திட்டமிட்டு இழப்பை ஏற்படுத்தியதால் ஏற்பட்ட பலன் தான் ஊழல் .   இந்த ஊழலில் ராஜாவை மட்டும் பலி ஆடு ஆக்காமல் தீர விசாரித்து ஊழல் செய்து அரசுக்கு இழப்பு எற்படுத்தியவர்களை தண்டிக்க வேண்டும் . இது தான் அனைவருடைய விருப்பம் .

3 கருத்துக்கள்:

Anonymous said...

திட்டமிட்டு இழப்பை ஏற்ப்படுத்த பெற்ற கைக்கூலி இழப்பில் கால் பங்காவது இருக்காதா?

Kumar said...

இந்த ஊழலில் திமுக , காங்கிரஸ் , பிஜேபி எல்லோரும் சம்மந்த பட்டிருக்கிறார்கள் . சரியான விசாரணை வேண்டும்

Suresh Kumar said...

புதிய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் கபில் சிபில் ...... திமுகவுக்கு ஆப்பா ?

Post a Comment

Send your Status to your Facebook