Wednesday

தமிழ் ஈழம் முதல் உலகம் முழுவதும் தொடரும் தமிழர் புரட்சி

எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செயப் புறப்படு தமிழா!
தமிழ் ஈழத்தில் தமிழர் நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்து தமிழர்களை இனபடுகொலை செய்வதை கண்டித்து தமிழ் ஈழத்திலே ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள் . ஈழத்திலே தமிழர்களை நச்சு குண்டுகளை கொண்டு கொலை செய்து வருகிறது இதற்கு பல உலக நாடுகள் உதவி வருகின்றன . இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் அரசானது விடுதலை புலிகளை அடியோடு ஒழிக்க வேண்டும்  சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதங்களை கொடுத்து வருகிறது சோனியா தலைமையிலான அரசு .


ஏழு கோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செய்து வருகிறது . ஈழ போர் கடைசி கட்டத்தில் நெருங்கி விட்ட்ட இந்த நேரத்தில் சிங்கள இனவெறி அரசு தினம் தினம் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களை உலகத்தில் தடை செய்யப்பட்ட  நச்சு குண்டுகளை கொண்டு கொலை செய்கிறது . ஒரு குறுகிய நிலப்பரப்பில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .



இந்த சிங்கள அரசின் இனவெறியை கண்டித்து உலகம் முழுவதும் தமிழர்கள் எழுச்சி போராட்ட்டங்களை தொடர் போராட்டங்களாக நடத்தி வருகின்றனர் . இங்கிலாந்து , பிரான்ஸ் , இத்தாலி , நார்வே , கனடா , நெதெர்லாந்து , ஸ்வீடன் போன்ற நாடுகளில் துவங்கிய போராட்டங்கள் போர் நிருத்துவரை தொடர் போராட்டமாக மாறி வருகிறது . எழுச்சிமிகு போராட்டங்களில் விடுதலை புலிகள் தான் எங்கள் ஏக பிரதிநிதிகள் என்றும் தமிழ் ஈழத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்றும் , சிங்கள அரசு இனபடுகொலையை உடனடியாக விலக்க வேடனும் என்றும் , ஆக்கிரமிக்க தமிழர் பூமியை  விட்டு சிங்கள ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உலகம் முழுவதும் தமிழர் புரட்சி வீறு கொண்டு நடைபெறுகிறது .
தமிழகத்திலும் தமிழ் ஈழ மக்களுக்காக போர்நிறுத்தம் ஏற்படும் வரை தங்கள் வேலையை விட்டு அனைத்து தமிழ் மக்களும் வீதிக்கு வரவேண்டும்  என தமிழ் ஈழ மக்கள் சாவின் விளிம்பில் இருந்து கொண்டு கேட்கிறார்கள் . ஒருநாள் ஆர்பாட்டம் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் போல் ஆகி விட்ட தமிழகத்தில் மக்கள் எழுச்சியின் மூலம் தொடர் போராட்டங்கள் நடத்தினால் ஒழிய இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாது .  
தமிழினமே தமிழக அரசியல் தலைவர்களே தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் . உயிர் போனால் திருப்மி வராது . போராடுவோம் தமிழினத்தை காப்போம் . புலம்பெயர் வாழ் தமிழர்கள் நடத்தும் தொடர் போராட்டங்கள் தமிழகத்திலும் நடந்தால் இந்தியா போர் நிறுத்தத்தை  ஏற்படுத்தும் . தமிழனே எழு விழித்துகொள்  இனிஒரு கனம் பொறுத்தால் நாளை தமிழினம் இருக்காது . 
இந்திய அரசே விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கு !
சிங்கள அரசின் இனபடுகொலையை தடுத்து நிறுத்து !
தமிழ் ஈழத்தை அங்கீகரி !   தமிழர் புரட்சி ஓங்குக !
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செயப் புறப்படு தமிழா!* (பாவேந்தர் பாரதிதாசன்)

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook