Tuesday

தமிழின விரோதிகளுக்கு கிடைத்த இரண்டாவது தோல்வி

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் ( குறிப்பாக சோனியாவை சேலை கட்டிய முசோலினி என்று குறிப்பிட்டதற்காக ) தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நாஞ்சில் சம்பத்தை நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துக்கிறது .

தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்காக எழுந்த மக்கள் எழுச்சியை தடுக்கும் விதமாக சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் கருணாநிதி தலைமையிலான அரசும் அரசு இயந்திரங்களை பயன் படுத்தி தமிழின உணர்வாளர்களை கைது செய்தது .  இதையடுத்து தமிழின உணர்வாளர்கள் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை போராடினர் .

நாஞ்சில்சம்பத்தை  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தவுடன் மதிமுக பொதுச்செயலார் வைகோ அவர்கள் நானே நேரடியாக வாதாடுவேன் என சொல்லியிருந்தார் . அதே போல் வைகோவே நேரில் வாதாடினார் . இன்று இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது அதில் நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது . அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என நீதிபதி  உத்தரவிட்டார் .

ஏற்கனவே இயக்குனர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிட தக்கது .

தொடர்புடைய பதிவுகள்

நாஞ்சில் சம்பத் விடுதலை ஆவாரா ? வாதாடும் வைகோ

நாஞ்சில் சம்பத் சோனியாவை சேலை கட்டிய முசோலினி என்று பேசலாமா ?

1 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook