Monday

தேர்தல் புறகணிப்பு தான் தீர்வா ?

ஐந்து சட்ட சபைக்கான இடை தேர்தல் தேதி தேர்தல் கமிசனால் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் பிரதான எதிர் கட்சிகள் தேர்தல் புறகனிப்பை செய்யலாமா என ஆலோசனை செய்வதாக பத்திரிகைகளில் தினம் தினம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளளன .

ஜனநாயகத்திற்கு பலமாக விளங்குவது தேர்தல் . இடை தேர்தல் காலியாக உள்ள உறுப்பினர்களுக்கான தேர்தல் . தேர்தலை ஆக்கபூர்வமாக எடுத்து கொண்ட காலங்கள் போய் இன்று அடிதடியாகவும் , ஆட்சி அதிகாரம் பணம் போன்றவையே முடிவுகளை தீர்மானிப்பது போலாகிவிட்டது . திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி ஆளும் கட்சிகள் அதிகார பலம் , ஆள் பலம் , பண பலம் போன்றவற்றை பயன் படுத்தி வெற்றி பெறுவது வாடிக்கையாக ஆகி விட்டது .

மக்களின் உண்மையான தீர்ப்பிற்கு இடமின்றி தமிழக அரசியல் மாறி விட்டது . கடந்த ஆட்சியில் அதிமுக 8 அடி பாய்ந்தது என்றல் இப்போது திமுக 16 அடி பாய்கிறது . திட்டமிட்டு மக்கள் மனதை புரிந்து கொண்டு திமுக காய் நகர்த்தி கொண்டிருக்கிறது . மக்கள் மனம் என்பது நவீன உலகத்தில் மக்கள் எதிர்காலம், நாடு , நலவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் அற்றதாக தான் மக்கள் மனது காணப்படுகிறது . சுயநலம் மேலோங்கிய காலத்தில் எந்த அரசியல் வாதியும் உண்மையாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்ப வில்லை . ஏனெனில் சமீப காலத்தில் எந்த அரசியல் வாதியும் உண்மையாக இருந்ததில்லை . மக்களுக்கும் அரசியல் வாதிகள் மீதான நம்பிக்கை அற்று போனது .

இதனால் தான் மக்களும் அவன் கொள்ளையடித்தத்தில் சிறு பங்காவது தந்தால் விசுவாசம் காட்ட தயாராக இருக்கின்றனர் . அதற்கு எடுத்து கட்டு தான் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தல் . திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நடை பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் வன்முறை தலை விரித்தாடியது . வாக்கு சாவடிகள் கைப்பற்ற பட்டன . பின்னர் நீதி மன்றம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 60 க்கும் மேற்பட்ட கவுன்சில்களில் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டது . எதிர் கட்சிகளின் கோரிக்கையான மாநகர காவல் துறை ஆணையர் , தேர்தல் அதிகாரிகளை மற்ற வேண்டும் என்பதை செயல் படுத்தாததால் அப்போதும் எதிர் கட்சிகள் உள்ளாட்சி இடை தேர்தலை புறக்கணித்தது .

இருந்த போதும் தேர்தல் நடக்காமலா இருந்தது வாக்கு பதிவு சதவீதம் தான் குறைந்ததே தவிர தேர்தல் நடை பெற்றது மீண்டும் அதே கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர் . இப்போதும் இடை தேர்தல் நடைபெறுகிறது எதிர் கட்சிகள் புறக்கணிக்க போவதாக செய்திகள் வருகின்றன . ஏன் அதிமுக என்ன பணம், ஆள் பலம் , இல்லாத கட்சியா ? அதிகார பலத்தை தவிர வேறு என்ன பலம் அதிமுகவில் இல்லை . தேர்தல் புறக்கணித்தால் மக்கள் தான் திருந்துவார்களா ? இல்லை அதிகாரிகள் தான் திருந்துவார்களா ? இல்லை அரசியல் கட்சி தான் திருந்துமா ?

தேர்தல் புறக்கணிப்பினால் பாதிக்க படுவது மக்கள் தான் ஏனெனில் கடந்த இடை தேர்தல்களை போல் ஆளும்கட்சி பணத்தை செலவிடாது . அப்படியென்றால் மக்களுக்கு எப்படி பணம் கிடைக்கும் . ஒரு தினசரி பத்திரிகையில் இடை தேர்தல் தேதி அறிவிக்க பட்டவுடனே வந்த செய்தி " திருமங்கலம் தொகுதி இடை தேர்தல் போல் மக்கள் எதிர் பார்க்க துவங்கி விட்டனர் " மக்கள் எதிர் பார்கவில்லைஎன்றால் கூட பத்திரிகைகள் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி விடுவார்கள் .

எதிர் கட்சிகள் செய்யும் தேர்தல் புறகணிப்பால் ஆளும் கட்சிக்கோ இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கோ பாதிப்பு ஏற்பட போவதில்லை . மாறாக உங்கள் கட்சியின் சின்னங்களை மக்கள் எளிதில் மறக்க கூடும் . இந்த நிலை தொடர்ந்தால் அப்படியே வருகின்ற சட்ட மன்ற பொது தேர்தல்களையும் புறகணிக்க வேண்டியது வரும் .

5 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பா.. தேர்தல் புறகணிப்பு ஒரு தீர்வாக வாய்பில்லை. உண்மையான சனநாயம் என்பது ஒட்டு போடுதல் மட்டும் இல்லை. சட்டங்களை மதித்தல் சட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்துதல்

Anonymous said...

வந்து பிறந்து விட்டோம் ஆனால் வாழத்தெரியவில்லை...

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...
நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பா.. தேர்தல் புறகணிப்பு ஒரு தீர்வாக வாய்பில்லை. உண்மையான சனநாயம் என்பது ஒட்டு போடுதல் மட்டும் இல்லை. சட்டங்களை மதித்தல் சட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்துதல் /////////////////////////////////

என்ன செய்வது சட்டங்கள் எத்தனை போட்டாலும் நம்மவர்கள் சட்டத்தின் ஓட்டையை கண்டு பிடிப்பதில் கில்லாடிகளாக இருக்கும் போது யார் சட்டங்களை மதிப்பது . ஒவ்வெரு அரசும் ஒரு தவறான முன்னுதாரணங்களை விட்டு செல்லுகிறது . நாளைய ஜனநாயகம் கேலி கூத்தாகும் .

நன்றி ஞான சேகரன்

Suresh Kumar said...

தமிழரசி said...
வந்து பிறந்து விட்டோம் ஆனால் வாழத்தெரியவில்லை../////////////

என்ன செய்வது
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

கலையரசன் said...

புறகணிக்க வேண்டியது வருமுன்னா சொல்றீங்க..?
எனக்கு அப்படி தோனலை, மக்கள் சீக்கிரமா எல்லாதையும் மறந்துடுவாங்க.

Post a Comment

Send your Status to your Facebook